Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மரபுத்தொடர்

மரபுத்தொடர்

இது ஒருசில வார்த்தைகள் சேர்ந்த ஒரு தொடர்; அவற்றிலுள்ள தனித்தனி வார்த்தைகளுக்கு அல்லது பாகங்களுக்கு ஒவ்வொரு அர்த்தம் இருக்கும்; ஆனால் அவை ஒன்றுசேரும்போது முற்றிலும் வித்தியாசமான அர்த்தத்தைக் கொடுக்கும்.

மற்ற மொழிகளைப் போலவே, பைபிளில் பயன்படுத்தப்பட்டுள்ள எபிரெய மொழியிலும் அரமேயிக் மொழியிலும் கிரேக்க மொழியிலும் நிறைய மரபுத்தொடர்கள் இருக்கின்றன. பைபிள் சொல்லும் செய்தியை நாம் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், அதிலுள்ள மரபுத்தொடர்களைப் புரிந்துகொள்ள வேண்டும். மொழிபெயர்ப்பாளர்களும் அவற்றைச் சரியாகப் புரிந்துகொண்டால்தான் திருத்தமாக மொழிபெயர்க்க முடியும். நம்முடைய மொழி, கலாச்சாரம், அல்லது பின்னணியைப் பொறுத்து, சில மரபுத்தொடர்களைச் சுலபமாகப் புரிந்துகொள்ளலாம்; அவை வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்க்கப்பட்டு இருந்தாலும் அவற்றைப் புரிந்துகொள்ளலாம். (மத் 5:2; 10:27; 24:31 ஆகிய வசனங்களுக்கான ஆராய்ச்சிக் குறிப்புகளைப் பாருங்கள்.) ஆனால், வேறு சில மரபுத்தொடர்களை விளக்கிச் சொல்ல வேண்டியிருக்கலாம்; அப்போதுதான், பைபிள் எழுதுவதற்குப் பயன்படுத்தப்பட்ட மொழிகளைப் பற்றித் தெரியாதவர்களால் அவற்றைப் புரிந்துகொள்ள முடியும். (மத் 26:23; மாற் 5:34; 14:40 ஆகிய வசனங்களுக்கான ஆராய்ச்சிக் குறிப்புகளைப் பாருங்கள்.) இன்னும் சில மரபுத்தொடர்களை நேரடியாக மொழிபெயர்க்காமல் அவற்றின் அர்த்தத்தை மட்டும் மொழிபெயர்க்க வேண்டியிருக்கலாம். அவற்றின் நேரடி அர்த்தத்தை அடிக்குறிப்புகளிலோ ஆராய்ச்சிக் குறிப்புகளிலோ கொடுக்க வேண்டியிருக்கலாம்.—மத் 9:15; லூ 10:6; 12:35 ஆகியவற்றுக்கான ஆராய்ச்சிக் குறிப்புகளைப் பாருங்கள்.

பைபிளிலுள்ள மரபுத்தொடர்களின் சில உதாரணங்கள் இவை: “பற்களின் மேலுள்ள தோல்தான் தப்பியிருக்கிறது” என்பது கிட்டத்தட்ட செத்துப் பிழைத்திருப்பதைக் குறிக்கிறது. (யோபு 19:20, அடிக்குறிப்பு) ‘கறைபடியாத கைகள்’ என்பது குற்றம் செய்யாதவர்களாக இருப்பதைக் குறிக்கிறது. (2சா 22:21) “கையைத் திறந்து” என்பது தாராள குணத்தைக் குறிக்கிறது. (சங் 145:16) ‘ரொட்டியை பிட்டு’ என்பது ‘உணவு சாப்பிடுவதை’ குறிக்கிறது. (அப் 20:7) ஏனென்றால், பைபிள் காலத்தைச் சேர்ந்த நாடுகளில் ரொட்டிதான் அன்றாட உணவாக இருந்தது.—கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்திலிருந்து எடுக்கப்பட்ட உதாரணங்களுக்கு கிரேக்க வேதாகமத்தின் தி கிங்டம் இன்டர்லீனியர் மொழிபெயர்ப்பை பாருங்கள்.