எங்களைப் பற்றி
யெகோவாவின் சாட்சிகள் யார்?
யெகோவாவின் சாட்சிகள் ஒரு உலகளாவிய மத அமைப்பு. நாங்கள் யெகோவாவை வணங்குகிறோம். அவர்தான் நம் படைப்பாளர், சர்வ வல்லமையுள்ள கடவுள். (சங்கீதம் 83:18; வெளிப்படுத்துதல் 4:11) நாங்கள் கிறிஸ்தவர்கள், இயேசு கிறிஸ்துவை கடவுளுடைய மகன் என்றும் மீட்பர் என்றும் நம்புகிறோம். (யோவான் 3:16; அப்போஸ்தலர் 4:10-12) எங்களுடைய நம்பிக்கைகள் முழுக்க முழுக்க பைபிளை அடிப்படையாக கொண்டுள்ளன. (2 தீமோத்தேயு 3:16) இந்த வெப்சைட்டையும் உங்கள் பைபிளையும் பயன்படுத்தி எங்கள் நம்பிக்கைகளை அலசி ஆராய உங்களை அழைக்கிறோம்.
எங்களைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள யெகோவாவின் சாட்சிகள்—நாங்கள் யார்? என்ற வீடியோவைப் பாருங்கள்.
புள்ளிவிவரங்கள்
-
92,05,326—பேர் உலகெங்கும் யெகோவாவின் சாட்சிகளாக இருக்கிறார்கள்
-
1,19,652—சபைகள் இருக்கின்றன
-
241—நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் இருக்கிறார்கள்
-
76,03,182—பைபிள் படிப்புகள் ஒவ்வொரு மாதமும் இலவசமாக நடத்தப்படுகின்றன
-
2,06,35,015—பேர் 2025-ல் இயேசுவின் நினைவுநாளுக்கு வந்திருந்தார்கள்
Frequently Asked Questions
யெகோவாவின் சாட்சிகள் நம்புவது என்ன?
எங்களுடைய முக்கியமான 15 நம்பிக்கைகளைப் பற்றிச் சுருக்கமாகத் தெரிந்துகொள்ளுங்கள்.
யெகோவாவின் சாட்சிகள் ஏன் சில பண்டிகைகளைக் கொண்டாடுவதில்லை?
பண்டிகைகள் சம்பந்தமாக யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி கேட்கப்படும் மூன்று கேள்விகளுக்குப் பதில்களைப் பாருங்கள்.
யெகோவாவின் சாட்சிகள் ஏன் பிறந்த நாளைக் கொண்டாடுவதில்லை?
பிறந்த நாள் கொண்டாட்டத்தை ஏன் கடவுள் வெறுக்கிறார் என்பதைப் புரிந்துகொள்வதற்கு நான்கு காரணங்களைக் கவனியுங்கள்.
யெகோவாவின் சாட்சிகள் ஏன் இரத்தம் ஏற்றிக்கொள்வதில்லை?
யெகோவாவின் சாட்சிகளைப் பற்றியும் அவர்கள் இரத்தம் ஏற்றிக்கொள்ளாததைப் பற்றியும் நிறைய தவறான கருத்துகள் இருக்கின்றன. இந்த விஷயத்தில் எங்களுடைய நம்பிக்கை என்ன என்று தெரிந்துகொள்ளுங்கள்.
யெகோவாவின் சாட்சிகள் கிறிஸ்தவர்களா?
நாங்கள் ஏன் கிறிஸ்தவர்களாக இருக்கிறோம் என்பதற்கான காரணங்களையும், கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்படுகிற மற்ற பிரிவுகளிலிருந்து நாங்கள் எப்படி வித்தியாசமாக இருக்கிறோம் என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.
அடிக்கடி கேட்கப்படும் மற்ற கேள்விகள்
எங்களைப் பற்றி உங்களுக்கு ஏதாவது கேள்விகள் இருந்தால் பதில்களைத் தெரிந்துகொள்ளுங்கள்.
Free Bible Course
Our History
Contact Us
உங்களைச் சந்திக்கலாமா?
பைபிள் சம்பந்தப்பட்ட ஒரு கேள்வியை கலந்துபேசுங்கள், அல்லது யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ளுங்கள்.
கூட்டத்தில் கலந்துகொள்ளுங்கள்
எங்கள் கூட்டங்களைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள். உங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் எங்கள் கூட்டங்கள் எங்கே நடக்கின்றன என்று கண்டுபிடியுங்கள்.
யெகோவாவின் சாட்சிகளைத் தொடர்புகொள்ள
உலகம் முழுவதும் இருக்கிற யெகோவாவின் சாட்சிகளைத் தொடர்புகொள்ள உதவும் தகவல்கள்
பெத்தேலைச் சுற்றிப் பார்க்க
உங்களுக்கு பக்கத்தில் இருக்கும் பெத்தேலைச் சுற்றிப் பார்க்க.

