தமிழ்
2026-க்கான “என்றென்றும் சந்தோஷம்!” மாநாட்டில் கலந்துகொள்ளுங்கள்.
https://cms-imgp.jw-cdn.org/img/p/1102026198/univ/art/1102026198_univ_sqr_xl.jpg

அன்புடன் அழைக்கிறோம்

என்றென்றும் சந்தோஷம்!

2026 யெகோவாவின் சாட்சிகளுடைய மாநாடு

மாநாடு நடக்கும் இடத்தைத் தெரிந்துகொள்ளுங்கள்

அனுமதி இலவசம் பணம் வசூலிக்கப்படாது

சிறப்பம்சங்கள்

வெள்ளிக்கிழமை: நீங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று கடவுளும் அவருடைய மகன் இயேசுவும் ஆசைப்படுகிறார்கள் என்பதை பைபிளில் இருந்து தெரிந்துகொள்ளுங்கள்.

சனிக்கிழமை: என்றென்றும் சந்தோஷமாக வாழ்வதற்கான வழியை இயேசுவின் பிரபலமான மலைப்பிரசங்கத்தில் இருந்து தெரிந்துகொள்ளுங்கள்.

ஞாயிற்றுக்கிழமை: பைபிள் உண்மைகள் எப்படி லட்சக்கணக்கான மக்களை சந்தோஷமானவர்களாக மாற்றியிருக்கிறது என்பதை, “பொக்கிஷத்தைக் கண்டுபிடித்துவிட்டீர்களா?” என்ற பேச்சில் இருந்து தெரிந்துகொள்ளுங்கள்.

வீடியோ நாடகம்

இயேசுவின் வாழ்க்கை ஒரு வரலாறு!: பாகங்கள் 4-6

மக்களுக்கு இயேசு சொல்லிக்கொடுப்பதையும், உடம்பு சரியில்லாதவர்களைக் குணப்படுத்துவதையும், இறந்தவர்களை மறுபடியும் உயிரோடு கொண்டுவருவதையும் பாருங்கள். மெய்சிலிர்க்க வைக்கும் இந்தத் தொடரின் ஒவ்வொரு பாகத்தையும் மாநாட்டின் ஒவ்வொரு நாளிலும் பார்த்து ரசியுங்கள்.

மாநாட்டின் முழு நிகழ்ச்சிநிரலையும் கீழே இருக்கும் வீடியோக்களையும் jw.org இணையதளத்தில் பாருங்கள்.

எங்கள் மாநாடுகள் எப்படி இருக்கும்?

யெகோவாவின் சாட்சிகளுடைய மாநாட்டில் என்னவெல்லாம் நடக்கும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

இந்த வருஷ மாநாட்டைப் பற்றி இந்த வீடியோவில் பாருங்கள்.

தன்னிடம் இருந்த விசேஷத் திறமைகளை இயேசு எப்படி மற்றவர்களுக்காகப் பயன்படுத்தினார்?

முன்பு நடந்த மாநாடுகளில் வெளிவந்த பாகங்களைப் பாருங்கள்.