இயேசுவின் மரண நினைவுநாள்
திங்கள், மார்ச் 22, 2027
ஒவ்வொரு வருஷமும் யெகோவாவின் சாட்சிகள் இயேசுவின் மரணத்தை நினைத்து பார்க்கிறார்கள். ஏனென்றால், “என் நினைவாக இதைத் தொடர்ந்து செய்யுங்கள்” என்று இயேசு சொல்லியிருக்கிறார்.—லூக்கா 22:19.
உங்களையும் உங்கள் குடும்பத்தையும் அன்பாக இந்த நிகழ்ச்சிக்கு வரவேற்கிறோம்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
யாரெல்லாம் வரலாம்?
எல்லாருமே வரலாம். உங்கள் நண்பர்களையும் குடும்பத்தில் இருக்கிறவர்களையும்கூட கூட்டிக்கொண்டு வரலாம்.
நிகழ்ச்சி எவ்வளவு நேரம் நடக்கும்?
கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் நடக்கும்.
எங்கே நடக்கும்?
உங்கள் பகுதியில் எங்கே நடக்கிறது என்று யெகோவாவின் சாட்சிகளிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.
கட்டணம் ஏதாவது இருக்கிறதா அல்லது அங்கே வந்தால் எதையாவது செய்ய வேண்டிய கட்டாயம் வருமா?
இல்லை.
நிகழ்ச்சியில் பணம் வசூலிக்கப்படுமா?
இல்லை. எங்களுடைய எந்தக் கூட்டத்திலும் நாங்கள் பணம் வசூலிப்பதில்லை.—மத்தேயு 10:8.
ஒரு குறிப்பிட்ட விதமான உடையை அணிய வேண்டுமா?
அப்படி எதுவும் இல்லை. ஆனால், இந்த முக்கியமான நிகழ்ச்சிக்கு மரியாதை காட்டும் விதத்தில் யெகோவாவின் சாட்சிகள் உடை உடுத்துகிறார்கள்.
இந்த நிகழ்ச்சியில் என்ன நடக்கும்?
நிகழ்ச்சியின் ஆரம்பத்திலும் முடிவிலும் பாடல் மற்றும் ஜெபம் இருக்கும். யெகோவாவின் சாட்சியாக இருக்கும் ஒரு ஊழியர் ஜெபம் செய்வார். பிறகு, ஒரு பேச்சு இருக்கும். அந்த பேச்சில், இயேசுவின் மரணம் ஏன் ரொம்ப முக்கியம், கடவுளும் இயேசுவும் நமக்காகச் செய்த விஷயங்களிலிருந்து நாம் எப்படி நன்மை அடையலாம் என்பதைப் பற்றி சொல்வார்கள்.
இன்னும் அதிகமாகத் தெரிந்துகொள்ள, “யெகோவாவின் சாட்சிகள் ஏன் மற்ற கிறிஸ்தவர்களைப் போல இல்லாமல் வேறு விதமாக கர்த்தருடைய இராப் போஜனத்தை அனுசரிக்கிறார்கள்?“ என்ற கட்டுரையைப் பாருங்கள்.
அடுத்த நினைவுநாள் நிகழ்ச்சி எப்போது நடக்கும்?
2027: திங்கள், மார்ச் 22
2028: ஞாயிறு, ஏப்ரல் 9
2029: வியாழன், மார்ச் 29

