சங்கீதம் 145:1-21

கடவுளைப் புகழ்ந்து தாவீது பாடிய பாடல். א [ஆலெஃப்] 145  என் கடவுளே, என் ராஜாவே,+ நான் உங்களை மகிமைப்படுத்துவேன்.உங்கள் பெயரை என்றென்றும் புகழ்வேன்.+ ב [பேத்]   நாள் முழுவதும் உங்களைப் புகழ்வேன்.+உங்கள் பெயரை என்றென்றும் புகழ்வேன்.+ ג [கீமெல்]   யெகோவா மகத்தானவர், எல்லா புகழையும் பெறத் தகுதியானவர்.+அவருடைய மகத்துவம் ஆராய முடியாதது.*+ ד [டாலத்]   கடவுளே, உங்கள் செயல்களைத் தலைமுறை தலைமுறைக்கும் மக்கள் புகழ்வார்கள்.உங்களுடைய வல்லமையான செயல்களைப் பற்றி அவர்கள் பேசுவார்கள்.+ ה [ஹே]   உங்களுடைய மகத்துவத்தின் சிறப்பையும் மேன்மையையும் பற்றிப் பேசுவார்கள்.+நான் உங்களுடைய அற்புதமான செயல்களைப் பற்றித் தியானிப்பேன். ו [வா]   நீங்கள் செய்த பிரமிப்பூட்டும் காரியங்களை* பற்றி அவர்கள் பேசுவார்கள்.நான் உங்களுடைய மகத்துவத்தைப் பற்றி அறிவிப்பேன். ז [ஸாயின்]   நீங்கள் செய்த ஏராளமான நன்மைகளுக்காக அவர்கள் உங்களை வாயாரப் புகழ்வார்கள்.+உங்களுடைய நீதியை நினைத்து அவர்கள் சந்தோஷ ஆரவாரம் செய்வார்கள்.+ ח [ஹேத்]   யெகோவா கரிசனையும்* இரக்கமும் உள்ளவர்,+சீக்கிரத்தில் கோபப்படாதவர், மாறாத அன்பை அளவில்லாமல் காட்டுகிறவர்.+ ט [டேத்]   யெகோவா எல்லாருக்கும் நல்லது செய்கிறார்.+அவருடைய இரக்கம் அவருடைய எல்லா செயல்களிலும் தெரிகிறது. י [யோத்] 10  யெகோவாவே, உங்களுடைய படைப்புகளெல்லாம் உங்களை மகிமைப்படுத்தும்.+உங்களுக்கு உண்மையாக* இருக்கிறவர்கள் உங்களைப் புகழ்வார்கள்.+ כ [காஃப்] 11  உங்களுடைய ஆட்சியின் மகிமையை அவர்கள் அறிவிப்பார்கள்.+உங்களுடைய வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள்.+ ל [லாமெத்] 12  உங்களுடைய வல்லமையான செயல்களைப் பற்றி மனிதர்களுக்குச் சொல்வார்கள்.+உங்களுடைய ஆட்சியின்+ சிறப்பையும் மேன்மையையும் பற்றி எல்லாருக்கும் சொல்வார்கள். מ [மேம்] 13  உங்களுடைய ஆட்சி என்றென்றும் நிலைத்திருக்கும்.உங்களுடைய ராஜ்யம் தலைமுறை தலைமுறைக்கும் நிலைத்திருக்கும்.+ ס [சாமெக்] 14  கீழே விழுகிற எல்லாரையும் யெகோவா தாங்கிப்பிடிக்கிறார்.+துவண்டுபோனவர்களைத் தூக்கி நிறுத்துகிறார்.+ ע [ஆயின்] 15  எல்லா ஜீவன்களின் கண்களும் உங்களையே எதிர்பார்த்துக்கொண்டு இருக்கின்றன.அந்தந்த சமயத்தில் நீங்கள் அவற்றுக்கு உணவு தருகிறீர்கள்.+ פ [பே] 16  நீங்கள் உங்களுடைய கையைத் திறந்து,எல்லா உயிர்களின் ஆசைகளையும் திருப்திப்படுத்துகிறீர்கள்.+ צ [சாதே] 17  யெகோவா எப்போதும் நீதியானதைச் செய்கிறார்.+எப்போதும் உண்மையாக* நடந்துகொள்கிறார்.+ ק [கோஃப்] 18  யெகோவா தன்னை நோக்கிக் கூப்பிடுகிற எல்லாருடைய பக்கத்திலும் இருக்கிறார்.+உண்மையோடு* தன்னை நோக்கிக் கூப்பிடுகிற எல்லாருடைய பக்கத்திலும் இருக்கிறார்.+ ר [ரேஷ்] 19  தனக்குப் பயந்து நடக்கிறவர்களின் ஆசையை அவர் நிறைவேற்றுகிறார்.+உதவிக்காக அவர்கள் கதறுவதைக் கேட்டு, அவர்களைக் காப்பாற்றுகிறார்.+ ש [ஷீன்] 20  தன்னை நேசிக்கிற எல்லாரையும் யெகோவா காக்கிறார்.+ஆனால், பொல்லாதவர்களை அவர் ஒழித்துக்கட்டுவார்.+ ת [ட்டா] 21  என் வாய் யெகோவாவைப் புகழும்.+எல்லா உயிர்களும் அவருடைய பரிசுத்த பெயரை என்றென்றும் புகழட்டும்.+

அடிக்குறிப்புகள்

வே.வா., “நம் புத்திக்கு எட்டாதது.”
வே.வா., “உங்களுடைய வல்லமையை.”
வே.வா., “கனிவும்.”
வே.வா., “பற்றுமாறாமல்.”
வே.வா., “பற்றுமாறாமல்.”
வே.வா., “உண்மை மனதோடு.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா