பாகம் 6
”வர வேண்டியவர் நீங்கள்தானா?“
(வீடியோ நேரம்: 50:35)
இயேசு ஒரு விதவையின் மகனை உயிரோடு எழுப்புகிறார், எளிமையான உதாரணங்களைச் சொல்லி போதிக்கிறார், அவர் பேசியதைக் கேட்டுக்கொண்டிருந்தவர்களின் மனதில் இருப்பதை வெட்டவெளிச்சமாக்குகிறார். இந்தப் பாகத்தில் கீழே இருக்கும் பதிவுகளின் காட்சிகளை பார்க்கலாம்:
படை அதிகாரியின் விசுவாசம் (லூக்கா 7:1-10; மத்தேயு 8:5-13)
நாயீன் நகரத்து விதவையின் மகனை இயேசு உயிரோடு எழுப்புகிறார் (லூக்கா 7:11-17)
“வர வேண்டியவர் நீங்கள்தானா” என்று யோவான் ஸ்நானகர் கேட்கிறார் (லூக்கா 7:18-23; மத்தேயு 11:2-6)
இயேசு, யோவான் ஸ்நானகரை புகழ்கிறார் (லூக்கா 7:24-30; மத்தேயு 11:7-15)
மனம் திருந்தாத தலைமுறை (மத்தேயு 11:16-19; லூக்கா 7:31-35)
கோராசின், பெத்சாயிதா மற்றும் கப்பர்நகூம் கண்டிக்கப்படுகிறது (மத்தேயு 11:20-24)
தாழ்மையானவர்களுக்கு தயவு காட்டியதற்காக இயேசு அவருடைய அப்பாவை புகழ்கிறார் (மத்தேயு 11:25-27)
இயேசுவின் சீஷராக அவருடைய நுகத்தடியில் இருப்பது புத்துணர்ச்சி தரும் (மத்தேயு 11:28-30)
பாவியாகிய ஒரு பெண், இயேசுவின் பாதத்தில் எண்ணெய் ஊற்றுகிறாள் (லூக்கா 7:36-50)
இயேசுவோடு பயணம் செய்த பெண்கள் (லூக்கா 8:1-3)
கடவுளுடைய சக்தியால் பேய்கள் விரட்டப்படுகின்றன, பெயல்செபூப் உதவியால் அல்ல (மத்தேயு 12:22-30; மாற்கு 3:19ஆ, 20)
மன்னிக்கப்பட முடியாத பாவம் (மத்தேயு 12:31, 32; மாற்கு 3:22-30)
ஒரு மரம் எப்படிப்பட்டது என்பதை அதன் கனி காட்டும் (மத்தேயு 12:33-37)
யோனாவின் அடையாளம் (மத்தேயு 12:38-42)
பேய் திரும்பிவரும்போது (மத்தேயு 12:43-45)
இயேசுவின் அம்மாவும் சகோதரர்களும் (மத்தேயு 12:46-50; மாற்கு 3:21, 31-35; லூக்கா 8:19-21)
இயேசு படகில் உட்கார்ந்து, கூட்டமான மக்களுக்கு கற்றுக்கொடுக்கிறார் (மத்தேயு 13:1, 2; மாற்கு 4:1, 2; லூக்கா 8:4)
நான்கு விதமான நிலங்களில் விழுந்த விதை (மத்தேயு 13:3-9; மாற்கு 4:3-9; லூக்கா 8:5-8)
இயேசு ஏன் உவமைகளைப் பயன்படுத்தினார் (மத்தேயு 13:10-17; மாற்கு 4:10-13; லூக்கா 8:9, 10)
விதைப்பவரைப் பற்றிய உவமையின் அர்த்தம் (மத்தேயு 13:18-23; மாற்கு 4:14-29; லூக்கா 8:11-18)
கோதுமைப் பயிர்களும் களைகளும் (மத்தேயு 13:24-30)
கடுகு விதையும் புளித்த மாவும் (மத்தேயு 13:31-33; மாற்கு 4:30-32)
இயேசு உவமைகளைப் பயன்படுத்தியது தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றியது (மத்தேயு 13:34, 35; மாற்கு 4:33, 34)
கோதுமைப் பயிர்கள், களைகள் பற்றிய உவமையின் அர்த்தம் (மத்தேயு 13:36-43)
புதைத்து வைக்கப்பட்ட பொக்கிஷமும் அருமையான முத்தும் (மத்தேயு 13:44-46)
இழுவலை (மத்தேயு 13:47-50)
தன் பொக்கிஷத்திலிருந்து புதியவற்றையும் பழையவற்றையும் வெளியே எடுக்கிற வீட்டு எஜமான் (மத்தேயு 13:51-53)

