Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எதிர்பாலார் பழகுவதற்கான சந்திப்புகளில் ஈடுபட நான் தயாரா?

எதிர்பாலார் பழகுவதற்கான சந்திப்புகளில் ஈடுபட நான் தயாரா?

அதிகாரம் 29

எதிர்பாலார் பழகுவதற்கான சந்திப்புகளில் ஈடுபட நான் தயாரா?

அநேக நாடுகளில் எதிர்பாலார் பழகுவதற்கான சந்திப்புகள், காதல் சம்பந்தமான ஒரு பொழுதுபோக்காக, ஒரு வேடிக்கைச் செயலாக நோக்கப்படுகிறது. எதிர்பாலார் பழகுவதற்கான சந்திப்புகள் சாதாரண தொடர்முறையாக கொண்ட ஒரு சமாச்சாரமாக உள்ளது—பூக்கள், அருமையான இரா சாப்பாடு, நல்லிரவு வாழ்த்துதல் முத்தம் ஆகியவை எல்லாம் சேர்ந்தது. சிலருக்கு, நீங்கள் விரும்பும் எதிர்பாலாரோடு கொஞ்சநேரம் ஒன்றாக நேரம் கழிப்பதை மட்டுமே குறிக்கிறது. எப்பொழுதுமே ஒன்றாக இருக்கும் ஜோடிகளும் உண்டு. ஆனால் ‘வெறும் சிநேகிதர்கள்’ என்று மட்டுமே சொல்லிக்கொள்வார்கள். சரி, அதை எதிர்பாலார் பழகுவதற்கான சந்திப்பு, அல்லது ஒன்றாக செல்லுதல், அல்லது வெறுமென ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருத்தல் என்று அதற்கு பெயர் சூட்டினாலும், சாதாரணமாக அது ஒரு காரியத்தைத்தான் குறிக்கிறது: ஒரு பையனும் ஒரு பெண்ணும், பெரும்பாலும் ஒருவருடைய மேற்பார்வையின்றி, தோழமைக்கொள்கிறவர்களாக ஏராளமான நேரத்தைச் செலவிடுவது.

பைபிள் காலங்களிலே இது பழக்கமாக இருந்தது இல்லை. என்றபோதிலும் நல்லறிவுடன், ஜாக்கிரதையாக, கனமுள்ளதாக கையாளப்படுமானால், எதிர்பாலார் பழகுவதற்கான சந்திப்புகள் இருவர் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வதற்கு முறையான ஒரு வழியாக இருக்கிறது. ஆம், அது இன்பமாக இருக்கக்கூடும். அதனால் நீங்கள் கட்டாமாக எதிர்பாலாருடன் பழகுவதற்கான சந்திப்புகளில் ஈடுபட வேண்டும் என்று இது அர்த்தம் கொள்ளுகிறதா?

எதிர்பாலாருடன் பழகுவதற்கான சந்திப்புகளில் ஈடுபட அழுத்தம்

எதிர்பாலாருடன் பழகுவதற்கான சந்திப்புகளில் ஈடுபட நீங்கள் அழுத்தத்தின் கீழ் இருப்பதாகக் காணலாம், உங்களுடைய சகாக்களில் அநேகர் ஒருவேளை அப்படிப்பட்ட சந்திப்புகளில் ஈடுபடக்கூடும். ஆகவே இயல்பாக நீங்கள் வித்தியாசப்பட்ட ஒருவராக காண விரும்பமாட்டீர்கள். அதில் ஈடுபடுவற்கான அழுத்தம் நல்ல எண்ணம் கொண்ட நண்பர்கள், உறவினர்களிடமிருந்தும் வரலாம். 15-வயது மேரி ஆன், எதிர்பாலார் பழகுவதற்கான சந்திப்பில் ஈடுபடுமாறு அவளுடைய அத்தை இவ்விதமாக புத்திமதி சொன்னாள்: “நீ அந்தப் பையனை மணப்பதற்கும் இதற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. ஓர் ஆளாக, இயல்பாக வளருவதன் ஒரு பாகமாக மட்டுமே அப்படிப்பட்ட சந்திப்பு இருக்கிறது. . . . சொல்லப் போனால் எல்லாப் பையன்களையுமே தட்டிக் கழிப்பாய் என்றால், யாரும் உன்னை விரும்ப மாட்டார்கள், பிறகு ஒருவரும் உன்னை அழைத்துப் போக மாட்டார்கள்.” மேரி ஆன் ஞாபகப்படுத்திக் கொள்ளுகிறாள்: “அத்தையின் வார்த்தைகள் வெகு ஆழமாய்ப் பதிந்துவிட்டன. ஒரு நல்ல சந்தர்ப்பத்தை விட்டுவிடுவதனால் என்னையே ஏமாற்றிக்கொள்ளப் போகிறேனா? பையனுக்குச் சொந்தமாகக் கார் இருக்கிறது, நிறையப் பணமும்கூட; அவன் எனக்கு உல்லாசமான ஒரு நேரத்தைக் கொடுப்பான் என்பதை நான் அறிந்திருந்தேன். அவனோடு பழக சந்திப்பைக் கொண்டிருக்க வேண்டுமா, இல்லையா?”

சில இளைஞருக்கு இந்த அழுத்தம், தங்களுடைய பிரியம், கனிவு என்பவற்றிற்கான தங்கள் சொந்த ஆசைகளினால் வருகிறது. “நான் நேசிக்கப்படுவதற்கும், போற்றப்படுவதற்குமான தேவையில் இருந்தேன்” என்று 18-வயது ஆன் விவரிக்கிறாள். “நான் என் பெற்றோரிடம் நெருங்கி இல்லாததினால், ஒருவரிடம் நெருங்கி இருக்கவும் உண்மையாகவே என்னைப் புரிந்துகொள்ளும் ஒருவரிடம் என் உணர்ச்சிகளை ஊற்றிவிடவும் என் காதலனிடம் திரும்பினேன்.”

என்றபோதிலும் ஓர் இளம் வாலிபப் பிள்ளை, அவனோ அவளோ அதில் ஈடுபடுவதற்கு அழுத்தப்படுவதாக வெறுமென உணருவதால் எதிர்பாலாருடன் பழகுவதற்கான சந்திப்புகளை ஆரம்பிப்பது கூடாது! ஒரு விஷயம் என்னவென்றால், எதிர்பாலார் பழகுவதற்கான சந்திப்புகள் கவனமாகக் கையாளப்படவேண்டிய ஒரு விஷயம்—ஒரு விவாகத் துணையை தெரிந்துகொள்வதில் உள்ள விஷயத்தின் ஒரு பாகம். விவாகமா? அச்சந்திப்புகளில் ஈடுபடுகிற பெரும்பான்மையான இளைஞரின் மனதில் இதுதான் கடைசி எண்ணமாக இருக்கலாம். உண்மையாகவே, எதிர்பாலாரில் இரண்டுபேர் அதிகநேரத்தை ஒன்றாக செலவழிப்பதில், ஒருவரை ஒருவர் விவாகம் செய்து கொள்ளும் சாத்தியத்தை ஆராய்வதைப் பார்க்கிலும் வேறு என்ன காரணம் நியாயமாக இருக்க முடியும்? காலப்போக்கில், வேறு எந்த காரணத்துக்காகவும் எதிர்பாலாருடன் சந்திப்புகளில் ஈடுபட்டால், ‘விளையாட்டாக’ இருப்பதைத்தவிர வேறு எதிலும் விளைவடையலாம். ஏன் அப்படி?

எதிர்பாலார் பழகுவதற்கான சந்திப்புகளின் இருண்ட பக்கம்

ஒன்று என்னவென்றால், “இளமையின் மலரும் பருவம்” என்று பைபிள் அழைக்கிற எதுவும் நேரிடக்கூடிய காலக்கட்டத்தில் இளைஞர்கள் இருக்கிறார்கள். (1 கொரிந்தியர் 7:36, NW) இச்சமயத்தின்போது, பாலின ஆசை பலமாக பொங்கியெழுவதை நீங்கள் உணரக்கூடும். இது தப்பிதமான காரியமல்ல. நீங்கள் வளருவதன் ஒரு பாகம்.

ஆனால், பருவ வயதில் எதிர்பாலார் பழகுவதற்கான சந்திப்புகளில் ஈடுபடுவதில்தான் பெரிய பிரச்னை இருக்கிறது; பருவ வயதினர், இப்பாலின சக்திகளைக் கட்டுப்படுத்துவதற்கு இப்பொழுதுதான் கற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கின்றனர். உண்மைத்தான், பாலினத்தைப் பற்றிய கடவுளுடைய சட்டங்களை அறிந்திருக்கக்கூடும், கற்புள்ளவர்களாய் நிலைத்திருக்க உள்ளான ஆர்வம் கொண்டவர்களாயும் இருக்கக்கூடும். (23-ம் அதிகாரத்தைப் பாருங்கள்.) என்றபோதிலும் வாழ்க்கையில் உயிர்நூல் சார்ந்த உண்மையான ஒரு காரியம் இதில் உள்ளது. அதிகமதிகமாக எதிர்பாலாரோடு கூட்டுறவுகொள்ள ஆரம்பிக்கும்போது அதிகமாக பாலின ஆசை வளர ஆரம்பிக்கலாம்—நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும். (பக்கங்கள் 232-3-ஐப் பாருங்கள்.) அவ்விதமாகத்தான் நாம் எல்லாரும் உண்டுபண்ணப்பட்டிருக்கிறோம்! நீங்கள் வயதாகி உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக்கொள்வதில் நன்றாக ஆகும்வரை, நீங்கள் கையாளுவதற்கு எதிர்பாலாருடன் பழகுவதற்கான சந்திப்புகள் உங்களுக்கு ஒரு மிஞ்சின விஷயமாக இருக்கிறது. எதிர்பாராத விதமாக, அநேக இளைஞர் இதைக் கடினமான முறையில்தான் கண்டுபிடித்திருக்கின்றனர்.

“எதிர்பாலாருடன் பழகுவதற்கான சந்திப்புகளில் ஈடுபட துவங்கினபோது . . . நாங்கள் கைகளைப் பிடிப்பதோ அல்லது முத்தமிடுவதோ கிடையாது. அவளுடைய கூட்டுறவில் இருந்து, அவளோடு பேசி மகிழ்வதைத்தான் விரும்பினேன்” என்று ஓர் இளைஞன் சொன்னான். “என்றபோதிலும் அவள் அதிகப் பிரியமாக, என்னிடம் நெருங்கி உட்காருவாள். பிறகு நேரம் கடந்துசெல்ல நாங்கள் கைகளைப் பிடித்தோம், முத்தமிட்டோம். இது என்னில் பாலின ஆசையை இன்னும் அதிகமாகத் தூண்டிவிட்டது. நான் அவளோடு இருக்கவேண்டும் என்று விரும்பினேன், வெறுமென பேசுவதற்கு மட்டுமல்ல, அவளைப் பிடிக்கவும், தொட்டு முத்தமிடவும் விரும்புமளவுக்கு என்னுடைய யோசனையையும்கூட அது பாதித்தது. நான் திருப்தியடையவில்லை! காமத்தினால் தூண்டப்பட்டவனாய், சொல்லர்த்தமாகவே பைத்தியம் பிடித்ததுபோல் ஆகிவிட்டேன். சில சமயங்களில் நான் என்னைக் குறித்து குழப்பமாகவும், வெட்கமாகவும் உணருவதுண்டு.”

ஆகவே எதிர்பாலார் பழகுவதற்கான சந்திப்புகள் கடைசியில் தவறான உடல் உறவில் முடிகிறது என்பதில் ஆச்சரியமில்லை. அநேக நூற்றுக்கணக்கான இளம் வாலிபர்களைக் கணக்கெடுத்து பார்த்ததில் பெண்களில் 87 சதவீதத்தினரும், பையன்களில் 95 சதவீதத்தினரும் எதிர்பாலார் பழகுவதற்கான சந்திப்புகளில் பாலின காரியங்களை “மிதமான வகையில் முக்கியமானதாகவும் அல்லது வெகு முக்கியமானதாகவும்” உணர்ந்தார்கள். என்றபோதிலும் பெண்களில் 65 சதவீதத்தினரும் பையன்களில் 43 சதவீதத்தினரும், எதிர்பாலாருடன் பழகுவதற்கான சந்திப்புகளில் பாலின உறவு கோள்ள தாங்கள் பிரியப்படாவிட்டாலும், தாங்கள் பாலின உறவு கொண்டதாக ஒத்துக்கொண்டார்கள்!

20-வயதான லோரட்டா நினைவுகூருகிறாள்: “நாங்கள் ஒருவரையொருவர் அதிகமதிகமாகப் பார்க்கப் பார்க்க, மேலும் அதிகமாக ஈடுபாடுடையவர்களாக இருந்தோம். முத்தம் கொடுத்தல் புளித்துவிட்டது. அந்தரங்க உறுப்புக்களை நாங்கள் தொட ஆரம்பித்தோம். நான் அவ்வளவு அசிங்கமாக என்னை உணருகிறவளாக, நரம்புத் தளர்ச்சியடைந்த நிலைக்குள்ளானேன். நேரம் கடந்திட நான், ‘வெகுதூரம் செல்வதையே’ அவன் என்னிடம் எதிர்பார்த்தான் . . . நான் குழப்பமடைந்தவளாய், திக்கு முக்காடினேன்.ஆனால் ‘நான் அவனை இழந்துவிடக்கூடாது.’ என்ற யோசனைமட்டுமே எனக்கு வந்தது. நான் மோசமாக உணர்ந்தேன்!”

உண்மைதான், ஒவ்வொரு ஜோடியும் பாலின உறவு கொள்வதில் முடிவடைவதில்லை; என்றாலும் பாசத்தின் வெளிக்காட்டைக் கொஞ்சம் குறைய நிறுத்திக் கொள்கிறார்கள். ஆனால் உணர்ச்சிகள் தூண்டப்பட்டவராய், இப்பேர்ப்பட்ட உணர்ச்சிகளை கனத்துக்குரிய விதத்தில் வெளியிட முடியவில்லை என்றால் என்ன நடக்கிறது? உறுதியான வெறுப்பு. இப்படிப்பட்ட வெறுப்புகள் பாலின உணர்ச்சிகளோடு மட்டுப்படுத்தப்படுவதில்லை.

பிய்த்து எறிகிற உணர்ச்சிகள்

ஓர் இளம் மனிதனின் நெருக்கடியைச் சிந்தியுங்கள்: “நான் முதலில் கேத்தியை அதிகம் விரும்பினேன். அவள் சரியல்ல என்று நினைத்த சில காரியங்களை செய்யும்படி நான் பேசி வற்புறுத்தினேன் என்று ஒத்துக்கொள்கிறேன். இப்பொழுது சீ என்று உணருகிறேன், ஏனென்றால் சிரத்தையை இழந்துவிட்டேன். கேத்தியின் உணர்ச்சிகளைப் புண்படுத்தாமல் அவளை நான் எப்படிக் கைவிடக்கூடும்?” என்னே குழப்பமான நிலை! நீங்கள் கேத்தியாக இருந்தீர்களானால் எப்படி உணருவீர்கள்?

இளம் வாலிப வயதில் உள்ளம் உடைந்த நிலை சாதாரண ஒரு கோளாறு. உண்மைதான், ஓர் இளம் ஜோடி கைகோர்த்துக்கொண்டு நடப்பது ஒரு கவர்ச்சிகரமான காட்சிதான். ஆனால் அதே ஜோடி இன்னும் ஒரு வருடகாலத்தில் ஒன்றாகவே இருப்பார்கள் என்றும், குறைந்தபட்சம் ஒருவரையொருவர் மணந்துகொண்டிருப்பார்கள் என்பதற்கு வாய்ப்புகள் என்ன? வெகு குறைவே. இப்படியாக பருவயதுக் காதல், பெரும்பாலும் விவாகத்தில் முடிவடையாமல், இருதய முறிவுகளில் முடிவடைந்து பாழாக்கப்பட்ட உறவுகளில்தான் முடிந்துள்ளது.

பருவ வயதின்போது உங்களுடைய ஆள்தன்மை இன்னும் தழும்பிக்கொண்டுதானே இருக்கிறது. நீங்கள் யார், உங்களுக்கு எது பிரியம், உங்களுடைய வாழ்க்கையிலே எதைச் செய்யப்போகிறீர்களென்று உங்களைத் தானே கண்டுபிடித்துக் கொண்டு இருக்கிறீர்கள். இன்றைக்கு உங்களுக்கு உற்சாகம் அளிப்பவர்கள் நாளைக்கு அதிகமாக வெறுப்பை உண்டாக்குகிறவர்களாக இருக்கலாம். ஆனால் காதல் உணர்ச்சிகளை பரிணமிக்க விடுவோமென்றால், யாராவது ஒருவர் தீங்கிழைக்கப்படுவது திண்ணம். பல இளமைத் தற்கொலைகளுக்கான நிலைமைகளில் “பெண் சிநேகிதியோடு ஒரு சண்டை” அல்லது “காதலில் ஏமாற்றம்” போன்றவை என்பது பல ஆய்வுகளால் இணைத்துக் காட்டப்பட்டுள்ளது ஆச்சரியத்துக்குரியதன்று.

நான் தயாராக இருக்கிறேனா?

கடவுள் இளைஞர்களுக்குச் சொல்லுகிறார்: “வாலிபனே! (வாலிபப் பெண்ணே) உன் இளமையிலே சந்தோஷப்படு, உன் வாலிப நாட்களிலே உன் இருதயம் உன்னைப் பூரிப்பாக்கட்டும். உன் நெஞ்சின் வழிகளிலும், உன் கண்ணின் காட்சிகளிலும் நட.” இளைஞர்கள் தங்களுடைய “நெஞ்சின் வழிகளில்” நடக்கும் மனச்சாய்வை உடையவர்களாக இருக்கின்றனர். என்றபோதிலும் அநேக சமயங்களில் ‘விளையாட்டாக’ காணப்படுகிற அந்த “வழிகள்,” சஞ்சலத்திலும், துயரத்திலும் முடிவடைகிறது. அடுத்த வசனத்தில் பைபிள் இவ்விதம் புத்திமதி கூறுகிறது: “நீ உன் இருதயத்திலிருந்து சஞ்சலத்தையும் உன் மாம்சத்திலிருந்து தீங்கையும் நீக்கிப்போடு; இளவயதும் வாலிபமும் மாயையே.” (பிரசங்கி 11:9, 10) ஆழ்ந்த துன்பத்திற்குள்ளாவது அல்லது துயரத்தில் மூழ்குவதைத்தான் ‘சஞ்சலம்’ குறிப்பிடுகிறது. தனிப்பட்ட சேதத்தைத்தான் ‘தீங்கு’ குறிப்பிடுகிறது. இரண்டும் வாழ்க்கையைப் பரிதாபமான நிலைக்குள் ஆழ்த்தக்கூடும்.

அப்படியென்றால் எதிர்பாலாருடன் பழகுவதற்கான சந்திப்பு தன்னில்தானே சஞ்சலத்துக்கும் தீங்குக்கும் மூலக்காரணமாய் இருக்கிறதா? அப்படி இருக்க அவசியமில்லை. ஆனால் நீ ஒரு தவறான காரணத்துக்காக (‘விளையாட்டுக்காக’) அல்லது அதற்கு நீ தயாராக இருப்பதற்கு முன்னால் அப்படிப்பட்ட சந்திப்பில் ஈடுபடுவாயானால் அது அவ்விதம் இருக்கக்கூடும்! எனவே உன்னுடைய சொந்த நிலையை பரிசீலனை செய்து பார்ப்பதற்குப் பின்வரும் கேள்விகள் உதவக்கூடும்.

அதனால், எதிர்பாலார் பழகுவதற்கான சந்திப்புகள் என் உணர்ச்சி சம்பந்தமான வளர்ச்சிக்கு உதவுமா அல்லது தடை செய்யுமா? எதிர்பாலார் பழகுவதற்கான சந்திப்பு உன்னை பையன்-பெண் உறவுக்கு மேல் போகமுடியாதபடி கட்டுப்படுத்துமா? அதற்குப் பதிலாக உன் கூட்டுறவு அநேகரோடும் வைத்துக்கொள்ள விரிவாக்குவது உனக்கு நன்மையாக இருக்கும் அல்லவா? (2 கொரிந்தியர் 6:12, 13-ஐ ஒத்துப் பாருங்கள்.) சூசன் என்ற பெயரையுடைய இளம் பெண் சொல்லுகிறாள்: “சபையினுள் வயதான கிறிஸ்தவப் பெண்களோடு நெருங்கிய நட்பை விருத்தி செய்துகொள்ள நான் கற்றுக் கொண்டேன். அவர்களுக்குக் கூட்டுறவு அவசியமாக இருந்தது. நான் ஆடாமல் என்னை நிலைநிறுத்தி வைக்கும் அவர்களுடைய செல்வாக்கு எனக்கு அவசியமாக இருந்தது. ஆகவே காபி சாப்பிட அவர்களிடம் வருவேன். நாங்கள் பேசி, சிரிப்போம். வாழ்க்கை முழுவதும் நீடிக்கும், உண்மையான ஆயுள் நட்பை அவர்களோடு உண்டுபண்ணினேன்.”

வெவ்வேறு வகையான நண்பர்களைக் கொண்டிருப்பதன் மூலம்—வயதானவர்களும், இளைஞர்களும், தனியாட்கள் மற்றும் விவாகமானவர்கள், ஆண்கள், பெண்கள்—எதிர்பாலார் உட்பட எல்லாரிடமும் சரியாக நடந்துகொள்ள கற்றுக்கொள்கிறீர்கள். அதில் எதிர்பாலாருடன் பழகுவதற்கான சந்திப்புகளில் இருக்கும் அழுத்தத்தைவிட வெகு குறைவான அழுத்தமே இருக்கிறது. மேலும் விவாகமான தம்பதிகளுடன் பழகுவதன் மூலம், விவாகத்தின் பேரில் உண்மைக்கடுத்த சரியான நோக்கை நீங்கள் சம்பாதிக்கிறீர்கள். பிற்பாடு ஒரு நல்ல துணையை தெரிந்தெடுக்கவும், விவாகத்தில் உங்கள் சொந்த பாகத்தை நிறைவேற்றவும் சிறந்த விதத்தில் ஆயத்தமாக இருப்பீர்கள். (நீதிமொழிகள் 31:10) கேய்ல் என்ற பெயரையுடைய இளம் பெண் இவ்வாறு முடிக்கிறாள்: “நான் விவாகமாகி குடும்ப வாழ்க்கையில் நிலையாவதற்கு இன்னும் தயாராக இல்லை. நான் என்னைத்தானே இன்னும் புரிந்துகொண்டு வருகிறேன், நான் அடைய வேண்டிய அநேக ஆவிக்குரிய இலக்குகள் எனக்கு உள்ளது. ஆகவே எதிர்பாலார் எவரோடும் அவ்வளவு நெருங்கி இருப்பதற்கான அவசியத்தை நான் காணவில்லை.”

நான் உணர்ச்சிகளைப் புண்படுத்த வேண்டுமா? விவாகம் என்ற வாய்ப்பை எதிர்நோக்காமல், காதல் பிணைப்புகளில் முன்னேறிக் கொண்டிருந்தால், அது உங்களுடைய மற்றும் மற்றவருடைய உணர்ச்சிகளை நசுக்கிப்போடக்கூடும். எதிர்பாலாரோடு பழகுவதில் அனுபவத்தைப் பெற்றிட ஒருவர் பேரில் காதல் சம்பந்தப்பட்ட கவனங்களைக் குவிப்பது, உண்மையாகவே நியாயமானதா?—மத்தேயு 7:12-ஐப் பாருங்கள்.

என்னுடைய பெற்றோர் என்ன சொல்லுகிறார்கள்? நீ கண்மூடித்தனமாக எதிர்ப்படும் ஆபத்துகளை உன் பெற்றோர் பார்க்கக்கூடியவர்களாக இருக்கின்றனர். இரண்டு இளவயது எதிர்பாலார் ஒன்றாக அதிக மணிநேரங்களைச் செலவிட ஆரம்பிக்கும்போது, என்ன பிரச்னைகள் உண்டாகும் என்று அவர்களுக்குத் தெரியும். ஆகவே, எதிர்பாலாருடன் பழகுவதற்கான சந்திப்புகளில் நீ ஈடுபடுவதை உன் பெற்றோர் ஒத்துக்கொள்ளாவிட்டால், அதை எதிர்க்காதே. (எபேசியர் 6:1-3) ஒருவேளை, நீ வயதாகும்வரை காத்திருக்க வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.

பைபிளின் ஒழுக்க தராதரத்தைக் கடைபிடிக்க என்னால் முடியுமா? ஒருவர் இளவயதைக் கடந்தபிறகு, பாலினத் தூண்டுதல்களை நல்ல முறையில் கையாளமுடியும்—அப்பொழுதுங்கூட அது சுலபம் இல்லை. உன் வாழ்க்கையின் இந்தச் சமயத்தில், எதிர்பாலார் ஒருவரோடு நெருங்கிய உறவை வைத்துக்கொள்ளவும், சுத்தமாக கற்பைக் காத்துக்கொள்ளக்கூடிய விதத்தில் அதைக் கையாளவும் நீ உண்மையில் தயாராக இருக்கிறாயா?

அக்கறைக்குரிய காரியம் என்னவெனில், அநேக இளைஞர் தங்களைத்தாமே இந்தக் கேள்விகளைக் கேட்டுக்கொண்டு, மேரி ஆன் (முன்னமே சொல்லப்பட்ட பெண்) அடைந்த அதே முடிவுக்கு வரக்கூடியவர்களாக இருக்கின்றனர். அவள் சொல்லுகிறாள்: “மற்றவர்கள் எதிர்பாலாருடன் பழகுவதற்கான சந்திப்புகளைப் பற்றி கொண்டிருக்கிற கருத்துக்களால் பாதிக்கப்படாதபடி இருக்க நான் தீர்மானமாக இருக்கிறேன். நான் போதுமான வயதடைந்து, விவாகம் செய்யத் தயாராகி, ஒரு கணவனில் என்ன தன்மைகளை நான் விரும்புகிறேனோ அப்படிப்பட்ட ஒருவரை காணும்வரை நான் எதிர்பாலாருடன் சந்திப்புகளில் ஈடுபடமாட்டேன்.”

ஆகவே எதிர்பாலாருடன் பழகுவதற்கான சந்திப்புகளில் ஈடுபடுவதற்கு முன் நீ கேட்க வேண்டிய நெருக்கடியான கேள்வியை மேரி ஆன் எழுப்புகிறாள்.

கலந்துபேசுவதற்கான கேள்விகள்

◻ “எதிர்பாலாருடன் பழகுவதற்கான” சந்திப்பு என்ற பதம் உங்களுக்கு எதைக் குறிக்கிறது?

◻ ஏன் சில இளைஞர் எதிர்பாலாருடன் பழகுவதற்கான சந்திப்புகளில் ஈடுபட அழுத்தப்படுவதாக உணருகின்றனர்?

◻ “இளவயதின் மலரும் பருவ”த்தில் எதிர்பாலாருடன் பழகுவதற்கான சந்திப்பில் ஈடுபடுவது ஒருவருக்கு ஏன் ஞானமான காரியமாக இல்லை?

◻எதிர்பாலாருடன் பழகுவதற்கான சந்திப்புகளில் ஈடுபடுகிற விஷயத்தில் இளைஞர் ஒருவர் எப்படி “தீங்கைத் தள்ளிப்” போடலாம்?

◻ஒரு பையனும் பெண்ணும் “வெறுமென நண்பர்”களாக இருப்பதில் வளரக்கூடிய சில பிரச்னைகள் என்ன?

◻எதிர்பாலாருடன் பழகுவதற்கான சந்திப்புகளில் ஈடுபட நீ தயாராக இருக்கிறாயா என்று எப்படி நீ கண்டுபிடிப்பாய்?

[பக்கம் 231-ன் சிறு குறிப்பு]

“முத்தம் கொடுத்தல் புளித்துவிட்டது. அந்தரங்க உறுப்புக்களை நாங்கள் தொட ஆரம்பித்தோம். நான் அவ்வளவு அசிங்கமாக என்னை உணருகிறவளாக, நரம்புத் தளர்ச்சியடைந்த நிலைக்குள்ளானேன். நேரம் கடந்திட நான், ‘வெகுதூரம் செல்வதையே’ அவன் என்னிடம் எதிர்பார்த்தான்”

[பக்கம் 234-ன் சிறு குறிப்பு]

‘கேத்தியின் உணர்ச்சிகளைப் புண்படுத்தாமல் அவளை நான் எப்படி கைவிடக்கூடும்?’

[பக்கம் 232, 233-ன் பெட்டி/படம்]

ஒரு பையனும் பெண்ணும் “நண்பர்களாக மட்டும்” இருக்கமுடியுமா?

பிளேட்டோனிய உறவு என்று கூறப்படும் உறவு (பாலின அம்சம் நுழையாமல் ஆண், பெண்களுக்கிடையேயுள்ள பாச உறவு) இளைஞர்களுக்கிடையே சாதாரணமாக உள்ளது. 17-வயதான கிரெகரி கொண்டாடும் உரிமை: “பெண்களிடத்திலே பேசுவது எனக்குச் சுலபமாக இருக்கிறது. ஏனென்றால் பொதுவாக அவர்கள் இரக்க மனப்பான்மையும், உணர்ச்சி உள்ளவர்களுமாய் இருக்கின்றனர்.” இப்படிப்பட்ட உறவினால் அதிக முழுமையான ஓர் ஆள்தன்மையை அபிவிருத்திசெய்ய அவர்களுக்கு முடிகிறது என்று மற்ற இளைஞர் விவாதிக்கிறார்கள்.

பைபிள் “பாலிய ஸ்திரீகளை எல்லாக் கற்புடன் சகோதரிகளைப் போல” பாவிக்கவேண்டும் என்று உற்சாகப்படுத்துகிறது. (1 தீமோத்தேயு 5:2) இந்த நியமத்தைக் கைக்கொள்வதன் மூலம் எதிர்பாலாரோடு சுத்தமான, நல்ல உறவை அனுபவிப்பது கூடிய காரியமாகவே இருக்கிறது. உதாணமாக அப்போஸ்தலனாகிய பவுல், ஒரு தனி ஆளாக, கிறிஸ்தவப் பெண்களோடு பல நல்ல நட்புறவுகளைக் கொண்டிருந்தான். (ரோமர் 16:1, 3, 6, 12-ஐப் பாருங்கள்.) ‘சுவிசேஷ விஷயத்தில் தன்னோடேகூட மிகவும் பிரயாசப்பட்ட’ இரண்டு பெண்களைப் பற்றி அவன் எழுதினான். (பிலிப்பியர் 4:3) இயேசு கிறிஸ்துவும்கூட பெண்களோடு சமநிலையான, ஆரோக்கியமான கூட்டுறவை அனுபவித்தார். பல சந்தர்ப்பங்களில் மார்த்தாள், மரியாள் ஆகியவர்களுடைய சம்பாஷணையையும் உபசரணையையும் அனுபவித்தார்.—லூக்கா 10:38, 39; யோவான் 11:5.

என்றபோதிலும் ஒரு “பிளேட்டோனிய உறவு” என்பது பெரும்பாலும் மெல்லிய மறைக்கப்பட்ட காதல் அல்லது எதிர்பாலார் ஒருவரிடமிருந்து நிபந்தனையின்றி அவருடைய கவனத்தை இழுப்பதற்கான ஒரு வழியைவிட அதிகமான ஒன்று. உணர்ச்சிகள் சுலபமாக மாற்றப்படக்கூடும் என்பதனால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். “மணிக்கு பத்து மைல் வேகத்தில் செல்லும் சுலபமான ஒரு கூட்டுறவு, எச்சரிப்பு இல்லாமல் மணிக்கு நூறு மைல் வேகத்தில் செல்லும் குருட்டுத்தனமான காம உணர்ச்சியாக மாறலாம்,” என்று டாக்டர் மேரியன் ஹில்லியார்டு எச்சரிக்கிறார்.

பதினாறு வயது மைக் இதை 14-வயது பெண்ணோடு நட்பு கொண்டபோது கற்றுக்கொண்டான். “இருவர் தனிப்பட்ட விதமாக ஒருவரை ஒருவர் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கும்போது வெறும் நண்பர்களாக இருக்க முடியாது என்பதை நான் விரைவில் கண்டுகொண்டேன். எங்களுடைய உறவு வளர்ந்து கொண்டே போனது. ஒருவருக்கு ஒருவர் விசேஷித்த உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறவர்களாயிருந்தோம், இப்போதும் கொண்டிருக்கிறோம்.” இருவருமே விவாகம் செய்ய போதுமான வயதை உடையவர்களாக இல்லாததால், அந்த உணர்ச்சிகள் துக்கத்துக்கு மூலகாரணமாக இருக்கிறது.

அதிக நெருங்கிய உறவு இன்னும் அதிக விசனகரமான விளைவுகளையும் உண்டுபண்ணிவிடலாம். ஓர் இளைஞன், ஒரு பெண் சிநேகிதி தன் பிரச்னைகளைக் குறித்து இரகசியமாகத் தன்னிடம் சொன்னபோது அவளுக்கு ஆறுதல் சொல்ல முயன்றான். தொட்டு, தடவிக்கொடுக்க வெகு நேரம் பிடிக்கவில்லை. விளைவு? குத்தப்பட்ட மனச்சாட்சிகளும், அவர்களுக்கிடையே கெட்ட எண்ணங்களும், மற்றும் சிலர் விஷயத்தில் பாலின உறவுகளிலும் முடிவடைந்தது. சைக்காலஜி டுடே மேற்கொண்ட ஒரு சுற்றாய்வு வெளிப்படுத்தியதாவது: “ஈடுபட்டவர்களில் ஏறக்குறைய பாதிபேர் (49 சதவிகிதத்தினர்) நட்பை, பாலினத் தொடர்பாக மாற்றியுள்ளனர்.” சொல்லப்போனால் “மூன்றில் ஒரு பங்கினர் (31 சதவீதம்) கடந்த மாதத்தில் ஒரு நண்பரோடு பாலின உடல் உறவை கொண்டதாக அறிக்கை செய்திருக்கின்றனர்.”

“ஆனால் என் நண்பரிடத்தில் நான் கவர்ச்சிக்கப்படவில்லை. அவனோடு (அல்லது அவளோடு) காதல் உறவில் ஈடுபடுத்திக்கொள்ளமாட்டேன்.” ஒருவேளை அப்படியிருக்கலாம். ஆனால் எதிர்காலத்தில் நீ எப்படி உணருவாய்? அதுவுமல்லாமல், “தன் இருதயத்தை நம்புகிறவன் மூடன்.” (நீதிமொழிகள் 28:26) உங்கள் இருதயம் திருக்குள்ளதும், நம்மை ஏமாற்றுவதும், நம்முடைய உண்மையான உள்நோக்கங்களுக்கு நம்மைக் குருடாக்கிப்போடுவதுமாக இருக்கக்கூடும். உன் நண்பர் உன்னைக் குறித்து எப்படி உணருகிறார் என்று உண்மையாகவே உனக்குத் தெரியுமா?

சிநேகிதத்தின் அம்சம் (The Friendship Factor) என்ற தன் புத்தகத்தில் ஆலன் லாய் மெக்கின்னிஸ் புத்தி கூறுகிறார்: “உன்னையே அதிகமாக நம்பிவிடாதே.” முன் எச்சரிக்கையாய் இரு. சரியான மேற்பார்வையுள்ள, கூட்டமாக செய்யும் வேலைகளிலே உன் உறவைக் கட்டுப்படுத்திக் கொள்ளலாம். பொருத்தமில்லா பாச வெளிக்காட்டுதல்களைத் தவிரு அல்லது காதல் உணர்ச்சிகள் எழும் சூழ்நிலைகளில் உன்னைத் தனியாக இருத்திக்கொள்ளாதே. மனம்குழம்பிய நிலையில் இருந்தாயானால், எதிர்பாலாரான இளைஞரோடு தனிமையாக பேசுவதைப் பார்க்கிலும் பெற்றோர்களிடமும், வயதானவர்களிடமும் பேசு.

பாதுகாப்புகள் இருந்தும், பகிர்ந்துகொள்ளப்படாத காதல் உணர்ச்சிகள் தோன்றுமானால், அப்பொழுது என்ன? “மெய்யைப் பேசு”. மற்றவர் உன் நிலையைப் பற்றி தெரிந்துகொள்ளட்டும். (எபேசியர் 4:25) இது காரியங்களை நிலைவரப்படுத்தவில்லை என்றால், தூரத்தில் உன்னை வைத்துக்கொள்வது மிகவும் நல்லது. “விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்துகொள்ளுகிறான்.” (நீதிமொழிகள் 22:3) அல்லது சிநேகிதத்தின் அம்சம் குறிப்பிடுகிற வண்ணம்: “அவசியமானால், வெளியே குதித்துவிடு. எப்பொழுதாவது ஒரு தடவை, எவ்வளவுதான் நாம் முயற்சி செய்தபோதிலும், எதிர்பாலாரோடு கொள்ளும் உறவும் நம் கையைவிட்டு நழுவிவிடுகிறது. அது எங்கே நம்மை வழிநடத்தும் என்று நமக்குத் தெரியும்.” அப்பொழுது “விலகிவிடுவதற்குத்” தக்க நேரமாக இருக்கிறது.

[பக்கம் 227-ன் படங்கள்]

அநேக இளைஞர் எதிர்பாலாருடன் பழகுவதற்கான சந்திப்புகளில் ஈடுபட அல்லது இருவராகப் பிரிந்து செல்ல வற்புறுத்தப்படுகின்றனர்

[பக்கம் 228-ன் படங்கள்]

அநேக சமயங்களில் எதிர்பாலாருடன் பழகுவதற்கான சந்திப்புகளில் பாசத்தின் வேண்டாத வெளிக்காட்டுதல்களைத் தெரிவிக்கும் அழுத்தத்தின் கீழ் வருகின்றனர்

[பக்கம் 229-ன் படம்]

எதிர்பாலாருடன் பழகுவதற்கான சந்திப்புகளில் அழுத்தங்கள் இல்லாத நிலைமைகளில் எதிர்பாலாரோடு கூட்டுறவை அனுபவிக்கலாம்

[பக்கம் 230-ன் படம்]

பிளேட்டோனிய உறவுகள் பெரும்பாலும் இருதய முறிவில் முடிவடைகிறது