Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அது உண்மையான அன்பு என்பதை நான் எப்படி அறிந்துகொள்வது?

அது உண்மையான அன்பு என்பதை நான் எப்படி அறிந்துகொள்வது?

அதிகாரம் 31

அது உண்மையான அன்பு என்பதை நான் எப்படி அறிந்துகொள்வது?

அன்பு கற்பனையுலகில் வாழும் காதலர்களுக்கு, அது அவர்களைச் சந்திக்க வரும் ஒரு புரியாப்புதிர், உங்களையும் சந்திக்கிறது. வாழ்க்கையில் ஒரே தடவை ஒப்பிடும் ஓர் ஆனந்த பரவசம். அன்பு, அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால், கண்டிப்பாக அது இருதயத்தின் ஒரு விவகாரம், புரிந்துகொள்ளப்பட முடியாத, ஆனால் அனுபவிக்கப்படும் ஒன்று என்பதாக. அன்பு எல்லாவற்றையும் மேற்கொண்டு என்றுமாக நிலைத்திருக்கும் . . .

காதலைப் பற்றிய வழங்கி அடிப்பட்ட சொற்றொடர்கள் மேற்கண்டவாறு கூறுகின்றன. சந்தேகமில்லாமல் காதலில் விழுவது தனித்தன்மை வாய்ந்த அழகான அனுபமாக இருக்கக்கூடும். ஆனால் உண்மையான அன்புதான் என்ன?

கண்டதும் காதல்?

டேவிட் ஜேனட்டை முதல் தடவையாக விருந்தில் சந்தித்தான். அவளுடைய உடற்கட்டும், அவளுடைய கூந்தலும், அவள் சிரிக்கும்போது அவள் கண்கள் மேல் முடி விழும் விதமும் கண்டு அவளிடமாக உடனே கவர்ச்சிக்கப்பட்டான். ஜேனட் அவனுடைய ஆழ்ந்த மாநிற கண்களிலும் அவனுடைய நகைச்சுவை கொண்ட சம்பாஷணையிலும் மயங்கிவிட்டாள். ஒருவரையொருவர் கண்டதும் காதல் என்பதைப் போன்று அது இருந்தது!

அடுத்த மூன்று வாரங்களினூடாக டேவிட்டும் ஜேனட்டும் ஒருவரை ஒருவர் விட்டுப் பிரியவே இல்லை. பிறகு ஒரு நாள் இரவு, ஜேனட் தான் முன்பு காதலித்த ஒரு பையனிடமிருந்து அதிர்ச்சியூட்டும் செய்தியைத் தொலைப்பேசி மூலம் பெற்றாள். ஆறுதலுக்காக டேவிட்டை கூப்பிட்டாள். ஆனால் டேவிட் பயமுறுத்தப்பட்டவனாயும் குழப்படைந்தவனாயும் சரியாக பிரதிபலிக்கவில்லை. என்றுமாக நிலைத்திருக்கும் என்று எண்ணின காதல் அதே இரவில் மறைந்துவிட்டது.

திரைப்படங்கள், புத்தகங்கள் மற்றும் டெலிவிஷன் காட்சிகள் கண்டதும் காதல் என்றுமாக நிலைத்திருக்கும் என்பதாக உங்களை நம்ப வைக்கும். சரிதான், சரீர கவர்ச்சிதான் முதலிடத்தில் இருவரையும் ஒருவரை ஒருவர் கவனிக்கும்படி செய்கிறது. ஓர் இளம் மனிதன் சொன்னபடி: “ஒருவருடைய ஆள்தன்மையைப் ‘பார்ப்பது’ கடினம்.” உறவானது ஒரு சில மணிநேரங்களோ அல்லது நாட்களோ இருக்கும் பொழுது எதை ஒருவர் ‘காதலிக்கிறார்’? அந்த நபர் அளிக்கும் சாயலை அல்லவா? உண்மையாகவே, அந்த நபரின் எண்ணங்கள், நம்பிக்கைகள், பயங்கள், திட்டங்கள், பழக்கங்கள், திறமைகள் அல்லது கைத்திறன்கள், இவற்றைப்பற்றி உங்களுக்கு அதிகம் தெரியாது. வெளித்தோற்றத்தைத்தான் நீங்கள் பார்த்தீர்கள், “இருதயத்தில் மறைந்திருக்கிற குணத்தை” (ஆளை) அல்ல. (1 பேதுரு 3:4) இப்படிப்பட்ட அன்பு எவ்வளவாக நிலைத்திருக்கும்?

தோற்றங்கள் ஏமாற்றக்கூடியது

மேலும் சொல்லப்போனால், வெளிப்புற தோற்றங்கள் ஏமாறச் செய்யக்கூடியது. பைபிள், “செளந்தரியம் வஞ்சனையுள்ளது, அழகும் வீண்,” என்று சொல்லுகிறது. வெகுமானத்தின்மீது சுற்றப்பட்டுள்ள பளபளப்பான உறைகள் உள்ளே என்ன இருக்கிறது என்று உங்களுக்குச் சொல்வதில்லை. சொல்லப்போனால், உதவாத இனாமை, அதிக அழகான உறை மூடிவிடும்.—நீதிமொழிகள் 31:30.

நீதிமொழிகள் “மதிகேடாய் நடக்கிற அழகுள்ள ஸ்திரீ, பன்றியின் மூக்கிலுள்ள பொன் மூக்குத்திக்குச் சமானம்” என்று சொல்லுகிறது. (நீதிமொழிகள் 11:22) பைபிள் காலங்களில் மூக்குத்திகள் எல்லாராலும் விரும்பப்படும் ஆபரணமாக இருந்தது. அவைகள் அழகில் சிறப்பு வாய்ந்ததாய், பெரும்பாலும் முழு கனத்த தந்தத்தால் செய்யப்பட்டது. இயற்கையாகவே ஒரு பெண்ணின் நகை அலங்காரத்தில் முதலாவதாக மூக்குத்தியைத்தான் நீங்கள் கவனிக்கும்படியாக இருக்கும்.

பொருத்தமாகவே, “மதி”கெட்ட, ஆனால் வெளிப்புற அழகை உடைய பெண்ணை, நீதிமொழிகள் “பன்றியின் மூக்கிலுள்ள மூக்குத்திக்குச்” சமானமாகப் பேசுகிறது. அழகு உண்மையாகவே புத்தியில்லாத ஒரு பெண்ணுக்குப் பொருந்துவது இல்லை. அவள் மீதுள்ள உபயோகம் இல்லாத ஆபரணமாக அது இருக்கிறது. அலங்காரமான மூக்குத்தி ஒரு பன்றியை அழகுள்ளதாக எப்படி ஆக்குவதில்லையோ அப்படியே, காலப்போக்கில், அவளுடைய அழகு அவளை கவர்ச்சியுள்ளவளாக ஆக்குவதில்லை! ஆகவே, ஒருவர் தோற்றம் கண்டு ‘காதல்கொள்வது’—அவர் உள்ளே எப்படிப்பட்டவர் என்பதை நிதானியாமல் இருப்பது, என்னே ஒரு தவறாக இருக்கிறது.

“இருப்பவற்றிலேயே அதிக வஞ்சனை மிகுந்தது”

என்றபோதிலும், சிலர் மனித இருதயம் தவறிப்போக முடியாத காதல் தீர்ப்பை உடையதாக இருக்கிறது என்று உணருகின்றனர். அவர்கள் விவாதிக்கின்றனர்: ‘வெறுமென உங்கள் இருதயத்திற்குச் செவிகொடுங்கள்.’ “உண்மையான காதலாக இருக்கும்பொழுது அதைக் கண்டுகொள்வீர்கள்!” துரதிர்ஷ்டவசமாக, உண்மைகள் இப்படிப்பட்ட கருத்துக்கு முரண்பாடாக உள்ளது. 1,079 இளவயதினரை (18 முதல் 24 வயதுள்ளவரை) உட்படுத்திய ஓர் சுற்றாய்வு, அந்தச் சமயம் வரையாக சராசரியாக ஏழு காதல் விவகாரங்களில் ஈடுபட்டிருந்ததாக அறிக்கை ஒன்றைத் தந்தது. பெரும்பான்மையினர் தங்களுடைய கடந்த காதல் விஷயங்கள் எல்லாம் வெறுமென மோகம் மட்டுமே—கடந்து, மறைந்துபோகிற உணர்ச்சி என்பதாக ஒத்துக்கொண்டனர். ஆகிலும், இந்த இளைஞர் எல்லாருமே ‘தாங்கள் தற்போது கொண்டிருந்த காதல் ஈடுபாட்டை அன்பு என்றே விவரித்தனர்’! என்றாலும் இவர்களில் பெரும்பான்மையர், வருங்காலத்தில் தங்களுடைய தற்காலத்திய ஈடுபாட்டை, கடந்த கால ஈடுபாடுகளை முதலில் நோக்கின விதமாகவே நோக்கக்கூடும்—வெறும் மோகமாக.

சோகக் கதை என்னவென்றால், ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான தம்பதிகள் தாங்கள் ‘காதலில்’ இருக்கிறார்கள் என்று மனமயக்கத்தில் ஆழ்ந்தவர்களாக மணம்செய்கிறார்கள், ஆனால் சீக்கிரத்திலேயே தாங்கள் பெரிய தப்பிதம் செய்துவிட்டதாக காண்கிறார்கள். ரே ஷார்ட் தன் புஸ்தகமாகிய ‘பாலுறவு, அன்பு அல்லது மோகம்’ என்பதில் “மோகம் ஒன்றும் தெரியாத ஆண்களையும் பெண்களையும் ஆட்டுக்குட்டிகள் கொல்லப்படுவதற்காக எடுத்துச் செல்லப்படுவதைப்போல் வெற்றிபெறாத விவாகத்திற்குள் இழுத்துச் செல்கிறது” என்று சொல்லுகிறார்.

“தன் இருதயத்தை நம்புகிறவன் மூடன்.” (நீதிமொழிகள் 28:26) பெரும்பாலும், நம் இருதயத்தின் தீர்ப்பு தப்பிதமாக வழிநடத்திவிடுகிறது. பைபிள் உண்மையாகவே சொல்லுகிறது: “இருப்பவற்றிலேயே அதிக வஞ்சனையுள்ளது இருதயமே.” (எரேமியா 17:9, தி லிவ்விங் பைபிள்) என்றபோதிலும் முன் சொல்லப்பட்ட நீதிமொழி தொடர்ந்து சொல்லுகிறது: “ஞானமாய் நடக்கிறவனோ இரட்சிக்கப்படுவான்.” நீங்களும்கூட மற்ற இளைஞர் செய்து அனுபவித்திருக்கிற ஆபத்துகள், வெறுப்புகளிலிருந்து தப்பக்கூடும். எப்பொழுது என்றால் மோகத்துக்கும், பைபிளில் விளக்கப்பட்டுள்ள அன்புக்கும் அதாவது என்றும் தவறிப்போகாத அன்பிற்குமுள்ள வித்தியாசத்தைக் கண்டுகொள்வீர்கள் என்றால்.

அன்புக்கு எதிராக மோகம்

“மோகம் கண்களை மூடிவிடுகிறது, அவ்விதமாகவே இருக்கவும் பிரியப்படுகிறது. உண்மைகளைப் பார்ப்பதற்கு அதற்கு இஷ்டமில்லை” என்று 24-வயது கால்வின் ஒத்துக்கொள்ளுகிறான். 16 வயது கென்யா என்ற பெண் கூடுதலாக சொல்லுகிறாள்: “ஒரு நபரோடு மோக உணர்ச்சி காட்டும்பொழுது, அவர்கள் செய்கிற ஒவ்வொன்றும் பரிபூரணமாக உள்ளது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்.”

மோகம் அன்பின் தோற்றத்தை அளிக்கிறது. அது உண்மையில்லாததும், தன்னலம் நிறைந்ததுமானது. மோகம் உடைய ஆட்கள் இவ்விதமாக சொல்வார்கள்: “நான் அவரோடு இருக்கும்பொழுது நான் என்னை முக்கியமாகக் கருதுகிறேன். என்னால் தூங்க முடியவில்லை. அந்த உணர்ச்சி எவ்வளவு பரவசமுள்ளதென என்னால் எண்ணிப்பார்க்கவும் முடியவில்லை.” அல்லது “நிஜமாகவே, எனக்கு ஒரு நல்ல உணர்ச்சி இருக்கும்படி அவள் செய்கிறாள்.” எத்தனை தடவை ‘நான்’, ‘என்னை’, ‘என்னால்’, ‘எனக்கு’ என்று உபயோகிக்கப்படுத்துவதை கவனியுங்கள். தன்னலத்தின்பேரில் சார்ந்த உறவு நிச்சயமாகவே தோல்வி அடையும்! என்றபோதிலும், பைபிள், உண்மையான அன்பை எப்படி விவரிக்கிறது என்று கவனியுங்கள்: “அன்பு நீடிய சாந்தமும், தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது, அயோக்கிமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது.”—1 கொரிந்தியர் 13:4, 5.

“தற்பொழிவை நாடாது” அதாவது தன் சொந்த அக்கறைகளைத் தேடாது என்பதனால், பைபிள் நியமத்தின் பேரில் சார்ந்த அன்பு தன் பேரில் கவனத்தை இழுப்பதாகவோ அல்லது சுயநலமுடையதாகவோ இருக்காது. உண்மைதான், ஒரு தம்பதிக்கு வலிமையான காதல் உணர்ச்சிகளும், ஒருவரையொருவர் கவர்ச்சிக்கும் தன்மையும் இருக்கலாம். ஆனால் இப்படிப்பட்ட உணர்ச்சிகள், நியாயமான விதத்திலும், மற்றொருவர் மீது கொண்டுள்ள ஆழ்ந்த மரியாதையிலும் சமப்படுத்தப்பட்டதாய் இருக்க வேண்டும். உண்மையிலேயே நீங்கள் காதல் கொண்டிருப்பீர்களானால், நீங்கள் எப்படி உங்களுடைய சொந்த நலனையும் சந்தோஷத்தையும் கவனிப்பீர்களோ அப்படியே மற்றவருடைய நலனையும், சந்தோஷத்தையும் கவனிப்பவர்களாக இருப்பீர்கள். நல்ல புத்தியோடு நடக்காதபடி, உங்களை மேற்கொள்ளும் வண்ணமாக உணர்ச்சி அழித்திட நீங்கள் அனுமதிக்கமாட்டீர்கள்.

உண்மையான அன்பின் ஒரு மாதிரி

யாக்கோபு, ராகேல் இவர்களுடைய பைபிள் விவரம் தத்ரூபமாக இதை விளக்கிக் காண்பிக்கிறது. ராகேல் தன் தகப்பனின் ஆடுகளுக்கு தண்ணீர் காட்டுவதற்காக கிணற்றினண்டை வந்தபோது இந்த ஜோடி ஒருவரையொருவர் சந்தித்தனர். ராகேல் ‘ரூபவதியும், பார்வைக்கு அழகானவளுமாக’ இருந்ததினால் யாக்கோபு உடனே அவளால் வசீகரிக்கப்பட்டதுமல்லாமல் அவள் யெகோவாவின் வணக்கத்தாளாக இருந்ததினால் கவர்ச்சிக்கப்பட்டான்.—ஆதியாகமம் 29:1-12, 17.

ராகேலின் குடும்பத்தார் வீட்டில் ஒரு முழு மாதம் வசித்தான பிற்பாடு, ராகேலை தான் நேசித்தான் என்பதைத் தெரியப்படுத்தி அவளை விவாகம் செய்துகொள்ள விரும்பினான். வெறும் காதல் மயக்கமான மோகமா? இல்லவே இல்லை! அந்த மாதம் முழுவதும் ராகேலை அவளுடைய இயல்பான சூழ்நிலையில்—தன் பெற்றோரையும், மற்றவர்களையும் எப்படி நடத்தினாள், மேய்க்கும் பெண்ணாக தன் வேலையை எப்படிச் செய்து கொண்டிருந்தாள், யெகோவாவின் வணக்கத்தை எப்படி முழு கவனத்துக்குரிய ஒன்றாகக் கருதினாள் என்று பார்க்கக்கூடியவனாக இருந்தான். சந்தேகமில்லாமல் அவள் “சிறந்து” விளங்கியபோதும், அவளுடைய “மோசமான” சமயங்களிலும் அவளை அவன் கவனித்தான். ஆகவே அவளுக்கான அவனுடைய அன்பு, கட்டுப்படுத்தப்படாத உணர்ச்சிவேகத்தினால் அல்ல, நியாயமான முகாந்தரத்தின் பேரிலும், ஆழ்ந்த மரியாதையின் பேரிலும் உள்ள தன்னலமற்ற அன்பின் காரணமாகத்தான் இருந்தது.

காரியம் இப்படி இருக்க, அவளைத் தன் மனைவியாகக் கொள்ள அவளுடைய தகப்பனை ஏழு வருடம் சேவிக்க விருப்பமுள்ளவனாக இருப்பதாய் அறிக்கை செய்ய அவனால் முடிந்தது. நிச்சயமாகவே, மோகம் அவ்வளவு காலம் நிலைத்திருக்க முடியாது! உண்மையான அன்பு மட்டுமே, அதாவது மற்றவர் பேரில் தன்னலமற்ற அன்பு மட்டுமே அந்த வருடங்களை அவனுக்குக் ‘கொஞ்ச நாளாகத்’ தோன்றும்படி செய்தது. அந்த உண்மையான அன்பின் காரணமாகத்தான் அந்தக் காலத்தின்போது தங்களுடைய பரிசுத்தத் தன்மையைக் காத்துக்கொள்ள முடிந்தது.—ஆதியாகமம் 29:20, 21.

அது நேரம் எடுக்கும்!

உண்மையான அன்பு காலத்தினால் பாதிக்கப்படுவதில்லை. ஆம், ஒருவருக்காக நீங்கள் கொண்டுள்ள உணர்ச்சிகளை சோதித்துப் பார்க்க சிறந்த வழி கொஞ்சக்காலம் கடந்துபோக அனுமதிப்பதாகும். மேலுமாக சாண்ரா என்ற ஒரு வாலிபப் பெண் கூர்ந்து நோக்கியது: “‘நான் இப்படிப்பட்டவன் தான். இப்பொழுது உனக்கு என்னைப்பற்றி எல்லாம் தெரியும்’ என்று வெறுமென சொல்லி, தன் ஆள்தன்மை எப்படிப்பட்டதென்று உனக்கு தெரிவிப்பதில்லை.” இல்லை, நீ அக்கறை கொண்டிருக்கும் ஆளைப் பற்றி தெரிந்துகொள்ள நேரம் எடுக்கிறது.

பைபிளின் வெளிச்சத்திலே உங்களுடைய காதல் சிரத்தையை நீங்கள் சோதித்தறியவும் நேரம் உங்களை அனுமதிக்கிறது. அன்பு “அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது” என்பதை நினைவில் கொள்ளுங்கள். உன்னுடைய கூட்டாளி உன்னுடைய திட்டங்கள் வெற்றியடைவதில் கருத்துடையவராக இருக்கிறாரா? அல்லது தன்னுடையதில் மட்டும் அக்கறையுள்ளவராக இருக்கிறாரா? அவர் [அல்லது அவள்] உன்னுடைய எண்ணத்திற்கும் உன்னுடைய உணர்ச்சிகளுக்கும் மரியாதை காட்டுகிறாரா? அவர் [அல்லது அவள்] தன்னலமான காமத்தைப் பூர்த்திசெய்துகொள்ள ‘அயோக்கியமானதைச்’ செய்ய உண்மையில் உன்னை வற்புறுத்தியிருக்கிறாரா? இந்த நபர் உன்னை மற்றவர்களுடைய முன்னிலையிலே மட்டுப்படுத்துகிறாரா அல்லது மேன்மைப்படுத்துகிறாரா? இப்படியாகக் கேள்விகளைக் கேட்பதானது உன் உணர்ச்சிகளை இன்னும் குறிப்பாக அலசிப்பார்க்க உதவி செய்யும்.

காதலில் அவசரப்படுவது, கேட்டை வருவிப்பதாக இருக்கிறது. “நான் வேகமாக, ஆழ்ந்த வண்ணம் காதலில் மூழ்கிவிட்டேன்,” என்று 20 வயது ஜில் விவரிக்கிறாள். இரண்டு மாத சூறாவளிக் காதலுக்குப் பின் அவள் விவாகம் செய்தாள். ஆனால் முன்பு மறைக்கப்பட்ட குறைகள் வெளியே வரத் தொடங்கின. ஜில் தனக்குள்ளிருந்த பாதுகாப்பற்ற தன்மையையும் தன்னை மையமாகக் கொண்டு செயல்படும் காரியத்தையும் கொஞ்சம் வெளிக்காட்ட ஆரம்பித்தாள். அவளுடைய கணவன் ரிக் தன் காதல் கவர்ச்சியை இழந்து, தன்னலமுள்ளவன் ஆனான். விவாகமாகி இரண்டு வருஷங்களுக்குப் பின் ஒரு நாள் ஜில், தன் கணவன் “மட்டமானவன்” “சோம்பேறி” மற்றும் ஒரு கணவனாக “தோல்வி” என்பதாகக் கூச்சலிட்டாள். ரிக் தன் கையால் ஜில்லுடைய முகத்தில் அடித்து பிரதிபலித்தான். ஜில் கண்ணீரோடு, அவர்களுடைய வீட்டிலிருந்தும்—விவாகத்திலிருந்தும் வெகு வேகமாக வெளியேறினாள்.

பைபிள் புத்திமதியைக் கடைப்பிடித்திருந்தால் நிச்சயமாகவே அவர்கள் தங்கள் விவாகத்தைக் காத்துக்கொள்ள உதவியாக இருந்திருக்கும். (எபேசியர் 5:22-33) ஆனால் விவாகம் ஆவதற்கு முன்பே ஒருவரை ஒருவர் நன்கு அறிமுகம் செய்து கொண்டிருந்தால் காரியங்கள் எப்படி வித்தியாசமானதாக இருந்திருக்கும்! அவர்களுடைய அன்பு “உருவத்தின்” பேரில் சார்ந்ததாக அல்லாமல், குறைகளும் பலமும் இரண்டுமே உள்ள ஓர் உண்மையான ஆள்தன்மையின் பேரிலாக இருந்திருக்கும். அவர்களுடைய எதிர்பார்ப்புகள் இன்னும் அதிக அளவில் உண்மையானதாக இருந்திருக்கும்.

உண்மையான அன்பு பொழுதுபோய் பொழுதுவருவதற்குள் வந்துவிடாது. அதே சமயத்தில் உன்னுடைய நல்ல ஒரு விவாகத் துணைவராக ஆகுபவர், கண்டிப்பாக நீ காண்கிறபடி அதிகக் கவர்ச்சியுள்ளவராகவும் இருக்க வேண்டியதில்லை. உதாரணமாக, பார்பரா ஓர் இளம் மனிதனை சந்தித்தாள். முதலிலே அதிகமாக அவள் கவர்ச்சியைக் காணவில்லை என்று ஒத்துக்கொள்கிறாள். “ஆனால் அவரை அதிகமதிகமாக புரிந்துகொள்ள ஆரம்பித்தபோது காரியங்கள் மாறின. ஸ்டீஃபன் மற்றவர்கள்பேரில் கொண்டிருந்த அக்கறையைப் பார்த்தேன். எப்பொழுதும் மற்றவர்களுடைய சிரத்தையை தன் அக்கறைகளுக்கு முன் வைப்பதை நான் கவனித்தேன். இவை ஒரு நல்ல கணவனை உண்டுபண்ணும் சிறந்த தன்மைகள் என்பதை நான் அறிந்திருந்தேன். நான் அவரிடமாக இழுக்கப்பட்டவளாய் அவரை நேசிக்க ஆரம்பித்தேன்.” ஒரு நிலையான விவாகம் விளைந்தது.

ஆகவே உண்மையான அன்பை நீங்கள் எப்படிக் கண்டுகொள்ள முடியும்? உங்களுடைய இருதயம் பேசலாம், ஆனால் பைபிளால் பயிற்சி கொடுக்கப்பட உங்கள் மனதை நம்புங்கள். ஒரு நபரின் வெளிப்புற ‘சாயலைப்’ பார்க்கிலும் அதிமாக அறியப் பாருங்கள். உறவு தளிர்க்க நேரம் கொடுங்கள். மோகம் குறைந்த காலத்தில் காய்ச்சலைப் போல உயர எட்டும், ஆனால் பிறகு வாடிப்போகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். காலம் செல்லச் செல்ல உண்மையான அன்பு பலப்பட்டு, ‘பூரண ஐக்கியத்தின் கட்டு’ ஆகிவிடும்.—கொலோசெயர் 3:14.

கலந்துபேசுவதற்கான கேள்விகள்

◻ஒருவருடைய தோற்றத்தைக் கண்டு காதலிப்பது ஏன் ஆபத்து?

◻உண்மையான அன்பைப் புரிந்துகொள்வதற்கு உங்கள் இருதயத்தை நம்ப முடியுமா?

◻அன்புக்கும் மோகத்துக்கும் உள்ள வித்தியாசங்கள் சில யாவை?

◻ஒருவரோடு ஒருவர் பழகுவதற்கான சந்திப்புகளில் ஈடுபடும் ஜோடிகள் ஏன் பிரிந்து போய்விடுகின்றனர்? இது எப்பொழுதுமே தப்பிதமா?

◻ஒரு காதல் விவகாரம் இடையிலே நிறுத்தப்படும்பொழுது கைவிடப்பட்டதன் உணர்ச்சிகளை நீங்கள் எப்படிக் கையாளக்கூடும்?

◻ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள நேரத்தை எடுத்துக்கொள்வது ஏன் முக்கியமானதாக இருக்கிறது?

[பக்கம் 242-ன் சிறு குறிப்பு]

நீங்கள் நேசிப்பது அந்த நபரா அல்லது வெறுமென ஒரு “சாயலா”?

[பக்கம் 247-ன் சிறு குறிப்பு]

“மோகம் கண்களை மூடிவிடுகிறது, அவ்விதமாகவே இருக்கவும் பிரியப்படுகிறது. உண்மைகளை பார்ப்பதற்கு அது விரும்புவதில்லை.”—24-வயது மனிதன்

[பக்கம் 250-ன் சிறு குறிப்பு]

“‘ஹலோ, எப்படி இருக்கிறாய்?’ என்று கேட்கப்படுகிற ஒரு நபராகத்தான் இப்பொழுது இருக்க முடியும். ஒருவரும் என்னை நெருங்கிய விதமாய் அண்ட நான் விடுவதில்லை”

[பக்கம் 248, 249-ன் பெட்டி/படம்]

உள்ளமுடைந்த நிலையை நான் மேற்கொள்வது எப்படி?

இந்த நபரைத்தான் விவாகம் செய்துகொள்ளப்போகிறீர்கள் என்று உங்களுக்குத் தெரியும். ஒருவருக்கொருவர் நீங்கள் கொண்டுள்ள கூட்டுறவில் மகிழ்கிறீர்கள், உங்களுக்குப் பொதுவாக இருக்கும் அக்கறைகளில் பங்குகொள்கிறீர்கள், பரஸ்பர கவர்ச்சியை உணருகிறீர்கள். பிறகு, திடீரென்று, சீறிடும் கடுங் கோபத்திலே அல்லது கண்ணீர் கரைதலிலே உறவு மாண்டுவிடுகிறது.

காதலின் வேதியல் என்னும் தன் புத்தகத்தில் டாக்டர் மைக்கெல் லீபோவிட்ஸ் காதலின் வருகையை சக்தி வாய்ந்த போதை மருந்தின் வேகத்துக்கு ஒப்பிடுகிறார். போதை மருந்தைப் போல இப்படிப்பட்ட காதல் மடியவிட்டால் மூர்க்கமாக “விலகிச் செல்லும் அறிகுறிகளை” வெகுவாய்த் தூண்டிவிடும். அக்காதல் மோகமானதோ அல்லது ‘உண்மையானதோ’ என்பதில் வித்தியாசம் உண்டுபண்ணுவதில்லை. உறவு முறிவு ஏற்பட்டால், இரண்டுமே மதியிழக்கச் செய்யும் சீற்றத்தையும் அல்லது வேதனைதரும் மனச்சோர்வுகளையும் உண்டுபண்ணக்கூடும்.

ஒரு முறிவோடு சேர்ந்துவரும் நிராகரிக்கப்படுதல், புண்படுதல், ஒருவேளை கடுஞ் சீற்றத்தின் உணர்ச்சிகள் எதிர்காலத்தைப் பற்றிய உங்கள் எண்ணங்களை இவ்விதம் கசப்பாக்கிவிடக்கூடும். ஆசைக்காட்டப்பட்டு மோசம் செய்யப்பட்ட ஓர் இளம்பெண் ‘புண்படுத்தப்பட்டவளாக’ இருப்பதாய்ப் பேசுகிறாள். “ ‘ஹல்லோ, எப்படி இருக்கிறாய்?’ என்று [எதிர்பாலாரால்] கேட்கப்படுகிற ஒரு நபராகத்தான் இப்பொழுது நான் இருக்கமுடியும்” என்று சொல்லுகிறாள். “ஒருவரும் நெருங்கிய விதமாய் என்னிடம் அண்ட விடுவதில்லை.” உறவில் எவ்வளவுக்கு ஆழமாய் இருப்பதாக உணருகிறீர்களோ, முறிவு அந்தளவுக்கு ஆழமாகப் புண்படுத்தவுங்கூடும்.

ஆம், நீங்கள் எவருடனும் விவாக நோக்குடன் பழகுவதற்கான சுயாதீனம் தானே அதோடு ஒரு பெருத்த விலைச்சீட்டையும் கொண்டிருக்கிறது. நிராகரிக்கப்படும் சாத்தியத்தைக் கொண்டிருக்கிறது. உண்மையான அன்பு வளரும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. ஆகவே நல் எண்ணங்களுடனே விவாக நோக்குடன் ஒருவர் உங்களிடம் பழக ஆரம்பித்து, பின்னால் விவாகம் அவ்வளவு உசிதமானதல்ல என்று தீர்மானிப்பாராகில், நீங்கள் மோசமாக கையாளப்பட்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்கொள்ள அவசியமில்லை.

பிரச்னை என்னவெனில், முடிவானது அதிக அளவில் விவேகத்தோடும் தயவோடும் கையாளப்பட்ட போதிலும், நீங்கள் இன்னும் புண்படுத்தப்பட்டவர்களாகவும், நிராகரிக்கப்பட்டவர்களுமாகவே உணருவீர்கள். என்றபோதிலும் உங்களுடைய சுயமரியாதையை இழப்பதற்கு எந்தக் காரணமுமில்லை. இந்த நபரின் பார்வையில் நீங்கள் ‘சரியாக’ இல்லை என்ற உண்மைதானே வேறொருவருடைய பார்வையில் நீங்கள் சரியாக இருக்கமாட்டீர்கள் என்பதை அர்த்தப்படுத்தாது!

மடிந்துவிட்ட காதல் விவகாரத்தை மனக்காட்சியில் உறைந்திடச்செய்ய முற்படுங்கள். இந்த முறிவானது நீங்கள் உட்பட்டிருந்த ஆளைக் குறித்த கலக்கமுள்ள காரியங்களைக் குறிப்பாக வெளிச்சத்துக்குக் கொண்டு வந்திருக்கலாம்—உணர்ச்சியின் விஷயத்தில் முதிர்ச்சியற்ற தன்மை, தீர்மானம் எடுக்கத் தவறுவது, இசைந்து பேசாமை, விட்டுக்கொடுக்க முடியாமை, உங்களுடைய உணர்ச்சிகளுக்குக் கரிசனை காட்டாமை. இவை ஒரு விவாகத் துணைவரில் விரும்பத்தக்க குணங்கள் அல்ல.

முறிவு முற்றிலும் ஒரு பக்கம் இருந்து, விவாகம் நல்ல காரியங்களை உண்டாக்கியிருக்கும் என்று நீங்கள் திடநம்பிக்கை உள்ளவர்களாக இருப்பீர்களானால் அப்பொழுது என்ன? நீங்கள் எப்படி உணருகிறீர்களென்பதை அந்த நபருக்குத் தெரியப்படுத்தும் உரிமை நிச்சயமாகவே உங்களுக்கு இருக்கிறது. ஒருவேளை வெறுமென சில தப்பெண்ணங்கள் ஏற்பட்டிருக்கலாம். உணர்ச்சிவசப்பட்டு வேண்டாத வார்த்தைகளைக் கோபா வேசத்தோடு பேசுதல் ஒன்றையும் சாதிக்கப்போவதில்லை. அவனோ, அவளோ, உறவை முறித்துக்கொள்ள தீர்மானமாக இருப்பின், உங்களிடத்தில் கண்டிப்பாக உணர்ச்சி இல்லாத ஒருவரின் பிரியத்தை சம்பாதிக்கக் கண்ணீரோடு அழுது உங்களைத் தாழ்த்திக்கொள்ள உங்களுக்கு அவசியம் இல்லை. சாலொமோன் “தேட ஒரு காலமுண்டு, இழக்க ஒரு காலமுண்டு” என்று சொன்னார்.—பிரசங்கி 3:6.

முதலாவதாகவே விவாகத்தில் கொஞ்சமேனும் சிரத்தையில்லாத ஒருவரால் நீங்கள் வெறுமென உபயோகிக்கப்பட்டு இருக்கிறீர்களென்று நம்புவதற்கு உங்களுக்குப் பலத்த காரணமிருக்குமானால், அப்பொழுது என்ன? பழிவாங்கும் நடவடிக்கைகளில் நீங்கள் ஈடுபட வேண்டியதில்லை. இப்படிப்பட்ட மாறுபாட்டைக் கடவுள் கவனிக்காமல் இல்லை என்பதில் உறுதியாயிருங்கள். அவருடைய வார்த்தை சொல்லுகிறது: “கடூரனோ தன் உடலை அலைக்கழிக்கிறான்.”—நீதிமொழிகள் 11:17; நீதிமொழிகள் 6:12-15-ஐயும் ஒத்துப் பாருங்கள்.

அவ்வப்போது நீங்கள் இன்னும் தனிமையினாலும், அல்லது காதல் நினைவுகளினாலும் வாதிக்கப்படலாம். அப்படியானால், நன்றாக அழுதுவிடுவது சரியானதே. உங்களைச் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்வது, ஒருவேளை சில சரீர வேலைகளிலும் அல்லது கிறிஸ்தவ ஊழியத்திலும் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்வதும் உதவும். (நீதிமொழிகள் 18:1) உங்களுடைய மனதை உற்சாகமாகவும் பலப்படுத்தக்கூடியதுமான காரியங்களில் வையுங்கள். (பிலிப்பியர் 4:8) உங்கள் மனதிலிருப்பதை ஒரு நெருங்கிய நண்பரிடத்தில் வாய்விட்டுப் பேசுங்கள். (நீதிமொழிகள் 18:24) நீங்கள் சுயாதீனமாக இருக்க உங்களுக்கு வயது வந்துவிட்டது என்று நீங்கள் உணர்ந்தாலும் உங்களுடைய பெற்றோர் பெருத்த ஆறுதலாக இருக்கக்கூடும். (நீதிமொழிகள் 23:22) எல்லாவற்றிற்கும் மேல், மனதிலிருப்பவற்றை யெகோவாவிடம் ஊற்றுங்கள்.

இப்பொழுது நீங்கள் உங்கள் ஆள்தன்மையின் சில அம்சங்களில் முன்னேற்றத்தைச் செய்ய வேண்டிய அவசியத்தைக் காண்பீர்கள். விவாகத் துணைவரிடத்தில் நீங்கள் எதை விரும்புகிறீர்களென்பதன் பேரில் உங்கள் பார்வை எப்பொழுதும் இருந்ததைவிட தெளிவாக இருக்கக்கூடும். நேசிக்கப்பட்டு இழக்கப்பட்டிருப்பதால், நீங்கள் விரும்பத்தக்க ஒருவர் மறுபடியுமாக உங்கள் வழியில் வருவாராகில் அவருடன் விவாக நோக்குடன் பழகுவதில் சற்று அதிக விவேகத்தோடிருக்க தீர்மானிக்கலாம்—இம்முறை நீங்கள் நினைப்பதற்கும் அதிக சாத்தியமுள்ளதாய் இருக்கலாம்.

[பக்கம் 245-ன் வரைப்படம்]

அது அன்பா மோகமா?

அன்பு மோகம்

1. மற்றவரின் அக்கறைகளைக் குறித்து 1. தன்னலமுள்ளது, கட்டுப்படுத்துகிறது.

தன்னலமற்ற விதத்தில் கவனித்தல் “இதிலிருந்து எனக்கு என்ன கிடைக்கும்?”

என்றுதான் சிந்திக்கிறது

2. காதல் தாமதமாக ஆரம்பிக்கிறது, 2. காதல் வேகமாகத் துவங்குகிறது,

சில மாதங்கள் அல்லது ஆண்டுகள் ஒருவேளை சில மணிநேரம் அல்லது

எடுக்கக்கூடும் சில நாட்களுக்குள் ஏற்படுகிறது

3. அடுத்தவரின் முழு 3. மற்றவருடைய உருவத்தால் கவரப்படுகிறாய்,

ஆள்த்தன்மை, அவருடையஅல்லது அதன் பேரில் ஆழ்ந்த

ஆவிக்குரிய குணாதிசயங்களால் அக்கறைகொள்கிறாய்.

ஆவிக்குரிய குணாதிசயங்களால் (‘அவனுக்கு எத்தகைய கனவுகாணும் கண்கள்உண்டு.’

நீ கவரப்படுகிறாய் ‘அவளுடைய உடற்கட்டு மிகவும் அழகானது’)

4. இந்த உறவின் பாதிப்பு—உன்னை 4. தன்மைகளை அழிக்கும், ஒழுங்கைக் கெடுக்கும்

மேன்மையான ஒரு நபராக ஆக்குகிறது பாதிப்புடையது

5. அடுத்தவரை நீ உண்மைக்கடுத்த 5. உண்மைக்கடுத்ததல்ல.அடுத்தவர்

முறையில் நோக்குகிறாய், அவர் அல்லது பரிபூரணமானவராகத் தோன்றுகிறார்.

அவளுடைய குறைகளைக் காண்கிறாய், ஆள்த்தன்மையில் காணப்படும் குறைவுகளைப்

ஆகிலும் அவரை நேசிக்கிறாய் பற்றிய சந்தேகங்களை நீ அசட்டைச்

செய்கிறாய்

6. கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன, 6. அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்படுகின்றன.

ஆகிலும் அவற்றைக் கலந்து பேசி எதுவும் உண்மையில் தீர்க்கப்படுவதில்லை.

தீர்த்துக்கொள்ள முடிகிறது ஒரு முத்தம் கொடுப்பதன் மூலம்

அவைத் “தீர்க்கப்படுகின்றன”

7. கொடுக்கவும் அவருடன் 7 .பெறுவது, தனக்குக் கிடைப்பதன் பேரில்,

பகிர்ந்துகொள்ளவும் நீ விரும்புகிறாய் இன ஆசைகளைத் திருப்தி

செய்வதன்பேரில் அழுத்தம்

[பக்கம் 244-ன் படம்]

வெளிப்புற சரீர அழகை உடைய., ஆனால் புத்தியில்லாத ஓர் ஆண் அல்லது பெண், ‘பன்றியின் மூக்கிலுள்ள பொன் மூக்குத்திக்குக் காரணமாக இருக்கிறார்.

[பக்கம் 246-ன் படம்]

உன்னை மற்றவர்களுடைய முன்னிலையிலே ஓயாமல் மட்டுப்படுத்தும் ஒரு நபர் உன்னிடமாக மெய் அன்பில் குறைவுபடுகிறார்