Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 19

யெகோவாவின் சாட்சிகள்தான் உண்மையான கிறிஸ்தவர்களா?

யெகோவாவின் சாட்சிகள்தான் உண்மையான கிறிஸ்தவர்களா?

ஆமாம்! ஏன் அப்படிச் சொல்கிறோம்? எதில் இருக்கும் விஷயங்களை நாங்கள் நம்புகிறோம்? எங்களுக்கு ஏன் யெகோவாவின் சாட்சிகள் என்ற பெயர்? எப்படி ஒருவர்மேல் ஒருவர் அன்பு காட்டுகிறோம்? பார்க்கலாம்.

1. எதில் இருக்கும் விஷயங்களை நாங்கள் நம்புகிறோம்?

“[கடவுளுடைய] வார்த்தைதான் சத்தியம்” என்று இயேசு சொன்னார். (யோவான் 17:17) அவரைப்போல் யெகோவாவின் சாட்சிகளும் ஆரம்பத்திலிருந்தே பைபிள் சொல்வதைத்தான் நம்பியிருக்கிறார்கள். சுமார் 1870-ல், அவர்களில் சிலர் ஒன்றுசேர்ந்து பைபிளை ஆராய ஆரம்பித்தார்கள். அவர்கள் கண்டுபிடித்த உண்மைகள் சர்ச் போதனைகளிலிருந்து வித்தியாசமாக இருந்தபோதும் அதை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். அதன்பின், அந்த உண்மைகளை எல்லாரிடமும் சொல்ல ஆரம்பித்தார்கள். a

2. எங்களுக்கு ஏன் யெகோவாவின் சாட்சிகள் என்ற பெயர்?

யெகோவா தன்னை வணங்குகிறவர்களைத் தன் சாட்சிகள் என்று சொல்கிறார். ஏனென்றால், அவரைப் பற்றிய உண்மைகளை அவர்கள் சொல்கிறார்கள். (எபிரெயர் 11:4–12:1) ஆயிரக்கணக்கான வருஷங்களுக்கு முன்பே அவர் தன் மக்களிடம், “நீங்கள் என்னுடைய சாட்சிகளாக இருக்கிறீர்கள்” என்று சொன்னார். (ஏசாயா 43:10-ஐ வாசியுங்கள்.) இயேசுவும் “நம்பகமான சாட்சி” என்று அழைக்கப்படுகிறார். (வெளிப்படுத்துதல் 1:5) அதனால்தான், 1931-லிருந்து எங்களை யெகோவாவின் சாட்சிகள் என்று பெருமையோடு அழைக்கிறோம்.

3. நாங்கள் எப்படி இயேசுவைப் போல் அன்பு காட்டுகிறோம்?

இயேசு தன் சீஷர்களை ரொம்ப நேசித்தார். அவர்களை சொந்த குடும்பம்போல் நினைத்தார். (மாற்கு 3:35-ஐ வாசியுங்கள்.) அதேபோல், இன்று உலகம் முழுவதும் இருக்கிற யெகோவாவின் சாட்சிகள் ஒரே குடும்பம்போல் ஒற்றுமையாக இருக்கிறார்கள், அதனால்தான், ஒருவரை ஒருவர் சகோதரர் அல்லது சகோதரி என்று கூப்பிடுகிறார்கள். (பிலேமோன் 1, 2) அதோடு, பைபிள் சொல்கிறபடி ‘சகோதரர்கள் எல்லாரிடமும் அன்பு காட்டுகிறார்கள்.’ (1 பேதுரு 2:17) அதுவும் நிறைய வழிகளில் அன்பு காட்டுகிறார்கள். உதாரணத்துக்கு, கஷ்டகாலங்களில் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்கிறார்கள்.

ஆராய்ந்து பார்க்கலாம்!

யெகோவாவின் சாட்சிகளுடைய சரித்திரத்தைப் பற்றி இப்போது கொஞ்சம் விவரமாக பார்க்கலாம். அவர்கள்தான் உண்மையான கிறிஸ்தவர்கள் என்பதற்கான ஆதாரத்தையும் பார்க்கலாம்.

உண்மைக் கிறிஸ்தவர்கள் பைபிளில் இருப்பதைத்தான் நம்புகிறார்கள், அதில் இருக்கும் உண்மைகளை மற்றவர்களிடமும் சொல்கிறார்கள்

4. பைபிளில் இருப்பதைத்தான் நம்புகிறோம்

பைபிளில் இருக்கும் உண்மைகளைத் தன்னுடைய மக்கள் தெளிவாகப் புரிந்துகொள்வார்கள் என்று யெகோவா முன்கூட்டியே சொன்னார். தானியேல் 12:4-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • கடவுளுடைய மக்கள் பைபிளை ஆராய ஆராய எது “பெருகும்”?

சார்ல்ஸ் ரஸலும் அவருடைய நண்பர்களும் எப்படி ஒன்றுசேர்ந்து பைபிளைப் படித்தார்கள் என்று பாருங்கள். வீடியோவைப் பார்த்துவிட்டு, கீழே இருக்கும் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்.

  • வீடியோவில் நாம் பார்த்தபடி, சார்ல்ஸ் ரஸலும் அவருடைய நண்பர்களும் எப்படி பைபிளைப் படித்தார்கள்?

உங்களுக்குத் தெரியுமா?

சிலசமயம், வசனங்களை நாங்கள் புரிந்துகொள்ளும் விதம் மாறியிருக்கிறது. ஏன்? சூரிய வெளிச்சம் படிப்படியாக அதிகமாவதுபோல், பைபிளில் இருக்கும் உண்மைகளைக் கடவுள் படிப்படியாகத்தான் வெளிப்படுத்துகிறார். (நீதிமொழிகள் 4:18-ஐ வாசியுங்கள்.) அதனால், பைபிள் மாறுவதில்லை என்றாலும், அதை நாங்கள் புரிந்துகொள்ளும் விதம் சிலசமயம் மாறியிருக்கிறது.

5. பெயருக்கு ஏற்ப வாழ்கிறோம்

கடவுளுடைய மக்கள் ஏன் யெகோவாவின் சாட்சிகள் என்ற பெயரை வைத்துக்கொண்டார்கள்? வீடியோவைப் பார்த்துவிட்டு, கீழே இருக்கும் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்.

  • யெகோவாவின் சாட்சிகள் என்ற பெயர் ஏன் ரொம்பப் பொருத்தமானது?

யெகோவா ஏன் மனிதர்களைத் தன்னுடைய சாட்சிகளாகத் தேர்ந்தெடுத்தார்? அவர்தான் உண்மையான கடவுள் என்று எல்லாருக்கும் சொல்லவும், அவரைப் பற்றிப் பரவியிருக்கும் பொய்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவரவும்தான் அவர்களைத் தேர்ந்தெடுத்தார். அந்தப் பொய்களில் இரண்டைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

நாம் உருவங்களை வைத்து வணங்க வேண்டுமென்று கடவுள் சொல்வதாக சில மதங்கள் போதிக்கின்றன. ஆனால், லேவியராகமம் 26:1-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • உண்மை என்ன? உருவ வழிபாட்டைப் பற்றி யெகோவா என்ன நினைக்கிறார்?

இயேசுதான் கடவுள் என்று சில மதத் தலைவர்கள் சொல்லித்தருகிறார்கள். ஆனால், யோவான் 20:17-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • உண்மையில் இயேசுதான் கடவுளா?

  • யெகோவா தன்னையும் தன் மகனையும் பற்றிய உண்மைகளைச் சொல்வதற்காகத் தன்னுடைய சாட்சிகளை உங்களிடம் அனுப்பியிருக்கிறார். இதைத் தெரிந்துகொள்ளும்போது உங்களுக்கு எப்படி இருக்கிறது?

6. ஒருவர்மேல் ஒருவர் அன்பு காட்டுகிறோம்

கிறிஸ்தவர்கள் ஒரே உடலில் இருக்கும் உறுப்புகளைப் போல் இருப்பதாக பைபிள் சொல்கிறது. 1 கொரிந்தியர் 12:25, 26-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • ஒருவருக்கு ஒரு கஷ்டம் என்றால் உண்மைக் கிறிஸ்தவர்கள் என்ன செய்வார்கள்?

  • யெகோவாவின் சாட்சிகள் ஒருவருக்கொருவர் அன்பு காட்டுவதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா?

உலகத்தில் ஏதாவது ஒரு இடத்தில் இருக்கும் யெகோவாவின் சாட்சிகளுக்கு ஒரு கஷ்டம் என்றால், உலகம் முழுவதும் இருக்கிற யெகோவாவின் சாட்சிகள் உடனடியாக உதவுகிறார்கள். ஒரு உதாரணத்தைப் பாருங்கள். வீடியோவைப் பார்த்துவிட்டு, கீழே இருக்கும் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்.

  • யெகோவாவின் சாட்சிகள் செய்கிற நிவாரண வேலை எப்படி அவர்களுடைய அன்புக்கு அடையாளமாக இருக்கிறது?

உண்மைக் கிறிஸ்தவர்கள் கஷ்டகாலங்களில் ஒருவர்மேல் ஒருவர் அன்பு காட்டுகிறார்கள்

சிலர் இப்படிச் சொல்கிறார்கள்: “யெகோவாவின் சாட்சிகள் ஏதோ ஒரு புது குரூப்.”

  • யெகோவா தன்னை வணங்குகிறவர்களை சாட்சிகள் என்று எப்போதிருந்து சொல்லிவருகிறார்?

சுருக்கம்

யெகோவாவின் சாட்சிகள்தான் உண்மையான கிறிஸ்தவர்கள். உலகம் முழுவதும் அவர்கள் ஒரே குடும்பம்போல் இருக்கிறார்கள். பைபிளில் இருக்கும் விஷயங்களை மட்டும்தான் நம்புகிறார்கள். யெகோவாவைப் பற்றிய உண்மைகளை மற்றவர்களுக்குச் சொல்கிறார்கள்.

ஞாபகம் வருகிறதா?

  • யெகோவாவின் சாட்சிகள் ஏன் அந்தப் பெயரை வைத்திருக்கிறார்கள்?

  • அவர்கள் ஒருவரை ஒருவர் எப்படி நடத்துகிறார்கள்?

  • யெகோவாவின் சாட்சிகள்தான் உண்மையான கிறிஸ்தவர்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

குறிக்கோள்

அலசிப் பாருங்கள்

எங்கள் சரித்திரத்தைப் பற்றி அதிகமாகத் தெரிந்துகொள்ளுங்கள்.

யெகோவாவின் சாட்சிகள்—விசுவாசம் செயலில், பகுதி 1: இருளிலிருந்து ஒளிக்கு (1:00:53)

யெகோவாவின் சாட்சிகள் பொய்ப் போதனைகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்திருக்கிறார்கள். ஒரு உதாரணத்தைப் பாருங்கள்.

கடவுளுடைய மக்கள் அவருடைய பெயரை மகிமைப்படுத்துகிறார்கள் (7:08)

யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி உங்களுக்கு இருக்கும் கேள்விகளுக்குப் பதில்களைத் தெரிந்துகொள்ளுங்கள்.

“யெகோவாவின் சாட்சிகள் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்” (இணைய பக்கம்)

வேறு இனங்களைச் சேர்ந்தவர்களை ஸ்டீவென் வெறுத்தார், அவர்களை அடிக்கடி தாக்கினார். ஆனால், ஏன் யெகோவாவின் சாட்சிகளைப் பார்த்த பிறகு மாறிவிட்டார்?

“கோபம்—என் வாழ்க்கையையே நாசமாக்கியது” (ஆன்லைன் கட்டுரை)

a எங்கள் முக்கிய பத்திரிகை காவற்கோபுரம், 1879-லிருந்து பைபிள் உண்மைகளைச் சொல்லிவருகிறது.