பாகம் 3
“நான்தான் அவர்”
(வீடியோ நேரம்: 39:40)
நிக்கொதேமு, சமாரியப் பெண், நாசரேத்தூர் மக்களுக்கு இயேசு போதிக்கிறார். அதற்கு கிடைத்த வரவேற்பும் எதிர்ப்பும்! இந்தப் பாகத்தில் கீழே இருக்கும் பதிவுகளின் காட்சிகளை பார்க்கலாம்:
தண்ணீராலும் கடவுளுடைய சக்தியாலும் பிறப்பதைப் பற்றி இயேசு நிக்கொதேமுவுக்கு விளக்குகிறார் (யோவான் 3:1-13)
வனாந்தரத்தில் பாம்பு உயர்த்தப்பட்டதுபோல் மனிதகுமாரனும் உயர்த்தப்பட வேண்டும் (யோவான் 3:14, 15)
உலகத்தை நியாயந்தீர்ப்பதற்கு அல்ல, மீட்பதற்கே கடவுள் தன்னுடைய மகனை இந்த உலகத்துக்கு அனுப்பினார் (யோவான் 3:16-21)
இயேசுவைப் பற்றி யோவான் சொன்ன கடைசி சாட்சி (யோவான் 3:22-30)
மேலிருந்து வருகிற மகன்மேல் விசுவாசம் வைக்கிறவர்களுக்கு முடிவில்லாத வாழ்வு (யோவான் 3:31-36)
யோவான் கைதுசெய்யப்படுகிறார் (மாற்கு 6:17-20; மத்தேயு 4:12; 14:3-5; லூக்கா 3:19, 20)
இயேசு களைப்பாக இருக்கிறார், சமாரியாவில் சீகார் நகரத்தில் இருக்கும் யாக்கோபின் கிணற்றுக்கு வருகிறார் (யோவான் 4:1-6)
சமாரிய பெண்ணிடம் இயேசு பேசுகிறார் (யோவான் 4:7-15)
உண்மை வணக்கத்தைப் பற்றி சமாரிய பெண்ணுக்கு இயேசு கற்றுக்கொடுக்கிறார் (யோவான் 4:16-24)
அவர்தான் மேசியா என்று இயேசு சமாரிய பெண்ணுக்கு வெளிப்படுத்துகிறார் (யோவான் 4:25, 26)
சமாரிய பெண் இயேசுவை பற்றி மற்றவர்களிடம் சொல்கிறாள் (யோவான் 4:27-30)
கடவுளுடைய விருப்பத்தைச் செய்வதை இயேசு உணவோடு ஒப்பிட்டுப் பேசுகிறார்; ஆன்மீக அறுவடையைப் பற்றி பேசுகிறார் (யோவான் 4:31-38)
இயேசுதான் “உலகத்தின் மீட்பர்” என்று நிறைய சமாரியர்கள் விசுவாசம் வைக்கிறார்கள் (யோவான் 4:39-42)
இயேசு கலிலேயாவில் ஊழியத்தை ஆரம்பிக்கிறார் (யோவான் 4:43-45; மாற்கு 1:14, 15; மத்தேயு 4:17; லூக்கா 4:14, 15)
கலிலேயாவில் இருந்த கானா ஊரில் இயேசு ஒரு அதிகாரியின் மகனை குணப்படுத்துகிறார் (யோவான் 4:46-54)
நாசரேத்தில் இயேசுவை ஏற்றுக்கொள்ளவில்லை (லூக்கா 4:16-30)
இயேசு கப்பர்நகூமுக்கு போகிறார் (மத்தேயு 4:13-16)
அற்புதமாக மீன் பிடிக்கிறார்கள்; முதல் சீஷர்களை இயேசு கூப்பிடுகிறார் (லூக்கா 5:1-11; மத்தேயு 4:18-22; மாற்கு 1:16-20)

