Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுளுக்குச் சொந்தப் பெயர் இல்லை என்ற பொய்

கடவுளுக்குச் சொந்தப் பெயர் இல்லை என்ற பொய்

அட்டைப் படம் | கடவுளை அன்பில்லாதவர் போல காட்டும் பொய்கள்

மக்கள் என்ன நினைக்கிறார்கள்:

“கடவுளுடைய பெயரைப் பயன்படுத்துவதற்கு எந்த ஆதாரமும் இல்லை, அப்படியே பயன்படுத்தினாலும் அவருடைய பெயர் என்னவாக இருக்கும்?”—பேராசிரியர் டேவிட் கன்னிங்ஹம், இறையியல் ஆய்வுகள்.

பைபிள் சொல்லும் உண்மை:

“நான் யெகோவா. அதுதான் என்னுடைய பெயர்” என்று கடவுள் சொல்கிறார். (ஏசாயா 42:8) யெகோவா என்ற எபிரெய வார்த்தையின் அர்த்தம், “ஆகும்படி செய்கிறவர்” என்பதுதான்.—ஆதியாகமம் 2:4, அடிக்குறிப்பு.

யெகோவா என்ற பெயரை நாம் பயன்படுத்த வேண்டும் என்று அவர் ஆசைப்படுகிறார். “அவருடைய பெயரைச் சொல்லி வேண்டிக்கொள்ளுங்கள்” என்று பைபிள் சொல்கிறது. “அவருடைய செயல்களை எல்லாருக்கும் சொல்லுங்கள்! அவருடைய பெயரே உயர்ந்தது என்று அறிவியுங்கள்” என்றும் பைபிள் சொல்கிறது.​—ஏசாயா 12:4.

கடவுளுடைய பெயரை இயேசு பயன்படுத்தினார். யெகோவாவிடம் ஜெபம் செய்யும்போது இயேசு இப்படிச் சொல்கிறார்: “இவர்களுக்கு [இயேசுவுடைய சீஷர்களுக்கு] உங்களுடைய பெயரைத் தெரியப்படுத்தினேன், இன்னமும் தெரியப்படுத்துவேன்.” இந்தப் புனிதமான பெயரை இயேசு ஏன் அவருடைய சீஷர்களுக்குச் சொன்னார்? “நீங்கள் [கடவுள்] என்மேல் அன்பு காட்டியது போலவே இவர்கள் மற்றவர்கள்மேல் அன்பு காட்டுவதற்காகவும், நான் இவர்களோடு ஒன்றுபட்டிருப்பதற்காகவும்” என்று அவரே சொன்னார்.—யோவான் 17:26.

இது ஏன் முக்கியம்:

“ஒருவருக்கு கடவுளுடைய பெயர் தெரியவில்லை என்றால் அவருக்குக் கடவுளைத் தெரியவில்லை என்று அர்த்தம்” என்றும், “கடவுள் வெறும் ஒரு சக்திதான் என்று நினைக்கும் ஒருவரால் கடவுள்மேல் அன்பு காட்ட முடியாது” என்றும் இறையியலாளர் வால்டர் லாவ்ரி சொல்கிறார்.

பைபிளில், கடவுளுடைய பெயருக்கு பதிலாக ஒரு காரணப் பெயரை பயன்படுத்தும்போது உண்மையில் கடவுளுடைய பெயரை நீக்கிவிடுவதுபோல் இருக்கும்

விக்டர் என்பவர் வாராவாரம் சர்ச்சுக்குப் போவார். ஆனாலும், கடவுளைப் பற்றி தனக்கு எதுவுமே தெரியவில்லை என்றுதான் அவர் நினைத்தார். “அப்புறம்தான், கடவுளோட பேரு யெகோவானு தெரிஞ்சுகிட்டேன். யெகோவாவே அவர என்கிட்ட அறிமுகம் செஞ்சுகிட்ட மாதிரி இருந்துச்சு” என்று சொல்கிறார். அதோடு, “இவ்ளோ நாட்களா ஒருத்தர பத்தி நிறைய விஷயங்கள கேள்விப்பட்டு கடைசில அவர நேர்ல பாத்தமாதிரி இருந்துச்சு. கடவுள ஒரு நிஜமான நபரா நான் பாக்க ஆரம்பிச்சேன், அவரோட ஒரு நெருக்கமான நட்பையும் வளத்துக்க முடிஞ்சுது” என்றும் அவர் சொல்கிறார்.

தன்னுடைய பெயரைப் பயன்படுத்துகிறவரிடம் யெகோவாவும் நெருங்கி வருகிறார். தன்னுடைய “பெயரை நினைக்கிறவர்களுக்காக” யெகோவா ஒரு வாக்குறுதி கொடுக்கிறார். “கீழ்ப்படிந்து நடக்கிற ஒரு மகனுக்கு அப்பா கரிசனை காட்டுவது போல நான் அவர்களுக்குக் கரிசனை காட்டுவேன்” என்று சொல்கிறார். (மல்கியா 3:​16, 17) தன் பெயரை சொல்லி கூப்பிடுகிற ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பேன் என்று கடவுள் சொல்கிறார். “யெகோவாவின் பெயரைச் சொல்லி வேண்டிக்கொள்கிற ஒவ்வொருவரும் மீட்புப் பெறுவார்கள்” என்று பைபிள் சொல்கிறது.​—ரோமர் 10:13.