Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுள் ஒரு புரியாத புதிர் என்ற பொய்!

கடவுள் ஒரு புரியாத புதிர் என்ற பொய்!

அட்டைப் படம் | கடவுளை அன்பில்லாதவர் போல காட்டும் பொய்கள்

நிறைய பேர் என்ன நினைக்கிறார்கள்:

கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்கிற, ”ரோமன் கத்தோலிக்கர்களும், ஈஸ்டன் ஆர்த்தடாக்ஸ்களும், புராட்டஸ்டன்டுகளும் அப்பாதான் கடவுள், மகன்தான் கடவுள், பரிசுத்த சக்திதான் கடவுள் என்று சொல்கிறார்கள். அதாவது, மூன்று பேரும் ஒன்றுதான் என்று சொல்கிறார்கள். இதைப் பற்றி கிறிஸ்தவ இறையியலும், மூன்று வித்தியாசமான கடவுள் இல்லை; ஆனால், மூன்றும் ஒரே கடவுள்“ என்று சொல்கிறது.​—த நியூ என்ஸைக்ளோபீடியா பிரிட்டானிக்கா.

பைபிள் சொல்லும் உண்மை:

கடவுளுடைய மகனான இயேசு கிறிஸ்து தன்னை ஒரு கடவுளாகவோ கடவுளுக்கு சமமாகவோ எங்கேயும் சொல்லவில்லை. ‘நான் என் தகப்பனிடம் போகிறேன். ஏனென்றால், என் தகப்பன் என்னைவிட பெரியவர்’ என்று இயேசு சொன்னார். (யோவான் 14:28) அதுமட்டுமல்ல, தன்னுடைய சீஷர் ஒருவரிடம், “நான் என் தகப்பனிடமும் உங்கள் தகப்பனிடமும் என் கடவுளிடமும் உங்கள் கடவுளிடமும் போகப்போகிறேன்” என்றும் சொன்னார்.—யோவான் 20:17.

பரிசுத்த சக்தி ஒரு நபர் கிடையாது. முதல் நூற்றாண்டில் இருந்த கிறிஸ்தவர்கள், “கடவுளுடைய சக்தியால் நிரப்பப்பட்டார்கள்.” “பலதரப்பட்ட மக்கள்மேல் என் சக்தியைப் பொழிவேன்“ என்று யெகோவா சொன்னார். (அப்போஸ்தலர் 2:1-4, 17) பரிசுத்த சக்தி என்பது கடவுள் கிடையாது. அது கடவுளிடம் இருக்கும் சக்தி.

இது ஏன் முக்கியம்:

கார்ல் ரஹ்னெர் மற்றும் ஹெர்பெர்ட் வோர்கிரிம்லெர் என்ற கத்தோலிக்க அறிஞர்கள் திரித்துவத்தைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்றால், ”ஏதாவது ஒரு வெளிப்படுத்துதல் இல்லாம திரித்துவத்த புரிஞ்சுக்க முடியாது. அப்படியே வெளிப்படுத்துதல் கிடைச்சாலும் முழுசா புரிஞ்சுக்குறது கஷ்டம்தான்.“ யாரென்றே தெரியாத ஒருவரை அல்லது புரிந்துகொள்ளவே முடியாத ஒருவரை நேசிக்க முடியுமா? அப்படியென்றால், கடவுளைப் பற்றி தெரிந்துகொள்வதற்கும், அவரை நேசிப்பதற்கும் திரித்துவ கோட்பாடு பெரிய தடையாக இருக்கும் என்பது எவ்வளவு உண்மை!

முன்பு பார்த்த மார்கோ திரித்துவத்தை ஒரு தடையாக நினைத்தார். அவர் இப்படிச் சொல்கிறார்: ”தன்னை பத்தி கடவுள் என்கிட்ட சொல்லாம மறச்சிட்டாருனு நான் நினைச்சேன். அதனால, கடவுள் எங்கயோ ரொம்ப தூரத்துல இருக்குறாருனும், அவரு ஒரு புரியா புதிர்னும், அவருகிட்ட நெருங்கவே முடியாதுனும் எனக்கு தோணுச்சு.“ ஆனால், ”கடவுள் குழப்பத்தின் கடவுள் அல்ல“ என்று பைபிள் சொல்கிறது. (1 கொரிந்தியர் 14:33) கடவுள் தன்னை யாரென்று நம்மிடம் தெரியப்படுத்தாமல் மறைக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. அதற்குப் பதிலாக, அவரைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறார். “நாங்களோ தெரிந்து வணங்குகிறோம்” என்று இயேசு சொன்னார்.​—யோவான் 4:22.

“கடவுளுக்கும் திரித்துவத்துக்கும் சம்பந்தம் இல்லனு தெரிய வந்தப்ப, அவருகிட்ட என்னால நெருக்கமான நட்பு வெச்சுக்க முடிஞ்சுது” என்று மார்கோ சொல்கிறார். யெகோவா ஒரு புரியாத புதிர் கிடையாது என்றும் அவர் நிஜமானவர் என்றும் நாம் நம்பினால், அவரை நேசிப்பது நமக்கு கஷ்டமாக இருக்காது. “அன்பு காட்டாதவன் கடவுளைப் பற்றித் தெரியாதவனாக இருக்கிறான். ஏனென்றால், கடவுள் அன்பாகவே இருக்கிறார்” என்று பைபிள் சொல்கிறது.​—1 யோவான் 4:8.