ஏசாயா 42:1-25

42  இதோ! இவர்தான் என்னுடைய ஊழியர்,+ இவருக்கு நான் துணையாக இருக்கிறேன். இவரை நான் தேர்ந்தெடுத்திருக்கிறேன்,+ இவரை நான் ஏற்றுக்கொள்கிறேன்.*+ என்னுடைய சக்தியை இவருக்குத் தந்திருக்கிறேன்.+எல்லா தேசத்து ஜனங்களுக்கும் இவர் நியாயம் செய்வார்.+   இவர் சத்தம்போட்டுப் பேசவோ, குரலை உயர்த்திப் பேசவோ,தெருவில் எல்லாரும் கேட்கும்படி கத்திப் பேசவோ மாட்டார்.+   மிதிபட்ட எந்த நாணலையும் ஒடித்துப்போட மாட்டார்.மங்கியெரிகிற எந்தத் திரியையும் அணைக்க மாட்டார்.+ இவர் உண்மைத்தன்மையோடு* நியாயம் செய்வார்.+   இந்த உலகத்தில் நியாயத்தை நிலைநாட்டுகிற வரைக்கும் ஓய மாட்டார், சோர்ந்துபோக மாட்டார்.+தீவுகளில் இருக்கிற ஜனங்கள் இவருடைய சட்டத்துக்காக* காத்திருப்பார்கள்.   யெகோவாதான் உண்மையான கடவுள்.வானத்தைப் படைத்தவர் அவர்தான், அதை விரித்தவர் அவர்தான்.+பூமியையும் அதில் உள்ள எல்லாவற்றையும் உண்டாக்கியவர் அவர்தான்.+எல்லாருக்கும் உயிர்மூச்சு கொடுத்தவரும்,+ பூமியில் நடமாடுகிற எல்லாருக்கும் உயிர் கொடுத்தவரும் அவர்தான்.+அவர் இப்படிச் சொல்கிறார்:   “யெகோவாவாகிய நான் நீதி செய்கிற கடவுள். அதனால்தான் உன்னை அழைத்தேன்.உன் கையைக் கெட்டியாகப் பிடித்திருக்கிறேன். நான் உன்னைப் பாதுகாப்பேன்; ஜனங்களுக்கு உன்னை ஒரு உத்தரவாதமாக* கொடுக்கப்போகிறேன்.+தேசங்களுக்கு ஒளியாக ஆக்கப்போகிறேன்.+   கண் தெரியாதவர்களுடைய கண்களை நீ திறக்க வேண்டும்.+கைதியை இருட்டறையிலிருந்தும்,இருட்டில் இருக்கிறவர்களைச் சிறையிலிருந்தும் வெளியே கொண்டுவர வேண்டும்.+   நான் யெகோவா. அதுதான் என்னுடைய பெயர்.என்னுடைய மகிமையை யாருக்கும் கொடுக்க மாட்டேன்.என்னுடைய புகழை எந்தச் சிலைக்கும் கொடுக்க மாட்டேன்.+   நான் ஆரம்பத்தில் சொன்னதெல்லாம் நடந்திருக்கிறது.இப்போது புதிய விஷயங்களைச் சொல்லப்போகிறேன். அதெல்லாம் நடப்பதற்கு முன்பே உங்களிடம் சொல்கிறேன்.”+ 10  யெகோவாவுக்கு ஒரு புதிய பாட்டுப் பாடுங்கள்.+பூமியெங்கும் இருக்கிற எல்லாரும் அவரைப் புகழ்ந்து பாடுங்கள்.+கடலின் நடுவிலும் கடல் பிராணிகளின் மத்தியிலும் பயணம் செய்கிறவர்களே,தீவுகளே, அவற்றில் குடியிருக்கிறவர்களே, அவரைப் புகழ்ந்து பாடுங்கள்.+ 11  வனாந்தரங்களும், நகரங்களும்,கேதாரியர்கள்+ குடியிருக்கிற கிராமங்களும் சத்தமாகப் பாடட்டும்.+ கற்பாறைப் பகுதிகளில் குடியிருக்கிறவர்கள் சந்தோஷமாகப் பாடட்டும்.மலை உச்சியிலிருந்து சத்தமாகப் பாடிப் புகழட்டும். 12  யெகோவாவுக்கு அவர்கள் மகிமை சேர்க்கட்டும்.தீவுகளில் அவரைப் பற்றி மெச்சிப் பேசட்டும்.+ 13  ஒரு பலசாலிபோல் யெகோவா புறப்பட்டுப் போவார்.+ ஒரு போர்வீரனைப் போல வைராக்கியமாகக் கிளம்புவார்.+ அவர் போர் முழக்கம் செய்வார்.எதிரிகளைவிட பலமானவர் என்று காட்டுவார்.+ 14  “நான் ரொம்பக் காலமாகப் பேசாமல் இருந்தேன். என்னையே அடக்கிக்கொண்டு அமைதியாக இருந்தேன். ஆனால் மூச்சு இரைக்க, மூச்சுத் திணற, முக்கி முனகிகுழந்தையைப் பெற்றெடுக்கிற பெண்ணைப் போல இனி நான் ஆவேன். 15  மலைகளையும் குன்றுகளையும் நாசமாக்குவேன்.அவற்றில் இருக்கிற செடிகொடிகளைப் பட்டுப்போக வைப்பேன். ஆறுகளையெல்லாம் வறண்ட நிலமாக* மாற்றுவேன்.நாணல் நிறைந்த குளங்களை வற்றிப்போக வைப்பேன்.+ 16  கண் தெரியாதவர்களை அவர்கள் இதுவரை போகாத வழியில் கூட்டிக்கொண்டு போவேன்.+அவர்களுக்குப் பழக்கமில்லாத வழியிலே நடக்க வைப்பேன்.+ அவர்களுக்கு முன்னால் இருக்கிற இருட்டை வெளிச்சமாக மாற்றுவேன்.+கரடுமுரடான பாதையைச் சமமாக்குவேன்.+ அவர்களுக்காக இதையெல்லாம் செய்வேன், அவர்களைக் கைவிட மாட்டேன்.” 17  செதுக்கப்பட்ட சிலைகள்மேல் நம்பிக்கை வைக்கிறவர்களும்உலோகச் சிலைகளைப் பார்த்து, “எங்கள் கடவுளே” என்று சொல்கிறவர்களும்ரொம்பவே அவமானப்பட்டு, கேவலப்பட்டுப் போவார்கள்.+ 18  காது கேட்காதவர்களே, கேளுங்கள்.கண் தெரியாதவர்களே, பாருங்கள்.+ 19  என் ஊழியனைப் போலக் குருடர்கள் யாராவது உண்டா?நான் அனுப்பிய தூதுவனைப் போலச் செவிடர்கள் யாராவது உண்டா? பலன் பெற்றவனைப் போலவும் யெகோவாவின் ஊழியனைப் போலவும்கொஞ்சம்கூட கண் தெரியாமல் இருப்பது யார்?+ 20  உன் கண் திறந்தே இருந்தாலும் நீ எதையும் கவனிப்பதே இல்லை. உன் காது திறந்தே இருந்தாலும் நீ எதையும் கேட்பதே இல்லை.+ 21  யெகோவா தன்னுடைய நீதியின் காரணமாக,தன்னுடைய சட்டத்தை* சிறப்பித்துக் காட்டுவதிலும் மகிமைப்படுத்துவதிலும் சந்தோஷப்பட்டார். 22  ஆனால், இந்த ஜனங்கள் கொள்ளையடிக்கப்பட்டார்கள், சூறையாடப்பட்டார்கள்.+எல்லாருமே குகையிலும் சிறையிலும் மாட்டிக்கொண்டார்கள்.+ காப்பாற்றுவதற்கு யாருமே இல்லை, எல்லாருமே கொள்ளையடிக்கப்பட்டார்கள்.+“திருப்பி அனுப்புங்கள்” என்று சொல்வதற்குக்கூட யாருமே இல்லை. 23  இதைக் கவனித்துக் கேட்கிறவன் யார்? எதிர்காலத்துக்குப் பிரயோஜனமான விஷயங்களைக் கவனமாகக் கேட்கிறவன் யார்? 24  யாக்கோபைச் சூறையாட அனுமதித்தது யார்?இஸ்ரவேலைக் கொள்ளையடிக்க அனுமதித்தது யார்? யெகோவாதானே அனுமதித்தார்? அவர்கள் அவருக்கு எதிராகப் பாவம் செய்தார்கள். அவருடைய வழியில் நடக்காமல்போனார்கள்.அவருடைய சட்டத்துக்கு* கீழ்ப்படியாமல்போனார்கள்.+ 25  அதனால் அவருடைய கோபத்தையெல்லாம் அவர்கள்மேல் கொட்டினார்.ஆக்ரோஷத்தில் பயங்கரமான போர்களை வர வைத்தார்.+ அவர்களிடம் இருந்த எல்லாமே பாழாய்ப் போனது, நெருப்பு எல்லாவற்றையும் பொசுக்கிப்போட்டது. அப்படியிருந்தும் யாருமே எச்சரிக்கையை மனதில்* வாங்கவில்லை.+

அடிக்குறிப்புகள்

வே.வா., “அங்கீகரிக்கிறேன்; இவர்மேல் பிரியமாக இருக்கிறேன்.”
வே.வா., “நம்பகத்தன்மையோடு.”
வே.வா., “அறிவுரைக்காக.”
நே.மொ., “ஒப்பந்தமாக.”
நே.மொ., “தீவுகளாக.”
வே.வா., “அறிவுரையை.”
வே.வா., “அறிவுரைக்கு.”
நே.மொ., “இதயத்தில்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா