Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளின் கருத்து | உலக அழிவு!

உலக அழிவு!

உலக அழிவு!

“இந்த உலகமும் அதன் இச்சையும் [அதாவது, ஆசையும்] ஒழிந்துபோகும்” என்று பைபிள் சொல்கிறது. (1 யோவான் 2:17) அப்படியென்றால், உலகம் அழியப்போகிறதா? இந்த வார்த்தைகளின் அர்த்தம் என்ன?

உலகம் அழியப்போகிறதா?

பைபிள் என்ன சொல்கிறது?

“உலகமும் அதன் [ஆசையும்] ஒழிந்துபோகும்” என்று பைபிள் சொல்கிறது. இந்த உலகம் எதற்கும் ஆசைப்படாது. அதில் இருக்கிற மக்கள்தான் ஆசைப்படுவார்கள். அதனால், உலகம் அழியப்போகிறது என்று சொன்னால், அதில் இருக்கிற ஜனங்கள் அழியப்போகிறார்கள் என்றுதான் அர்த்தம். எல்லாரையும் கடவுள் அழிக்க மாட்டார். அவரை ஏற்றுக்கொள்ளாத ஜனங்களுக்கு மட்டும் “நிரந்தர அழிவைத் தண்டனையாக” கொடுப்பார். (2 தெசலோனிக்கேயர் 1:7-9; யாக்கோபு 4:4) ஆனால், “உலகத்தின் பாகமாக இல்லாமல்” அதாவது, உலகத்திலுள்ள கெட்டவர்களோடு சேராமல், கடவுளுக்குப் பிடித்ததை செய்பவர்களை அவர் காப்பாற்றுவார். அவர்களுக்கு சாவே இல்லாத வாழ்க்கையைத் தருவார்.—யோவான் 15:19.

“கடவுளுடைய சித்தத்தை [அதாவது, கடவுளுக்கு பிடித்ததை] செய்கிறவனோ என்றென்றும் நிலைத்திருப்பான்” என்று 1 யோவான் 2:17 சொல்கிறது. அப்படியென்றால், கடவுளுக்கு பிடித்ததைச் செய்பவர்கள் எங்கே வாழ்வார்கள்? நல்லவர்கள் இதே ‘பூமியில்’ சாவே இல்லாமல் “என்றைக்கும்” வாழ்வார்கள்.—சங்கீதம் 37:29.

“இந்த உலகத்தின் மீதோ, இந்த உலகத்திலுள்ள காரியங்கள் மீதோ அன்பு வைக்காதீர்கள். ஒருவன் இந்த உலகத்தின் மீது அன்பு வைத்தால், பரலோகத் தகப்பன்மீது அவனுக்கு அன்பில்லை.”1 யோவான் 2:15.

கெட்ட ஜனங்களை கடவுள் எப்படி அழிப்பார்?

பைபிள் என்ன சொல்கிறது?

எல்லா மதங்களையும் கடவுள் ஏற்றுக்கொள்வதில்லை. அவர் ஏற்றுக்கொள்ளாத மதங்களைமகா பாபிலோன்” அல்லது வேசி என்று பைபிள் சொல்கிறது. (வெளிப்படுத்துதல் 17:1-5; 18:8) ஏனென்றால், இந்த மதங்கள் எல்லாம் கடவுளையும் வணங்கிக்கொண்டு அரசியல்வாதிகளோடும் கூட்டு சேர்ந்துகொள்கின்றன. ஆனால், சீக்கிரமாக அரசியல்வாதிகளே அந்த மதங்களை அழித்துவிடுவார்கள். ‘[அவர்கள்] அந்த விலைமகள்மீது வெறுப்படைந்து அவளிடமிருந்து அனைத்தையும் பறித்துவிட்டு அவளை நிர்வாணமாக்கிவிடுவார்கள்; பின்பு, அவளுடைய சதையை [அல்லது சொத்துகளை] தின்று, அவளை நெருப்பினால் முழுவதுமாகச் சுட்டெரித்துவிடுவார்கள்.’—வெளிப்படுத்துதல் 17:16.

பிறகு, அரசியல்வாதிகளையும் கடவுள் அழித்துவிடுவார். ‘சர்வ வல்லமையுள்ள கடவுளின் மகா நாளில் நடக்கப்போகும் [அர்மகெதோன்] போரில்,’ “பூமியெங்கும் உள்ள ராஜாக்களை” கடவுள் அழிப்பார் என்று பைபிள் சொல்கிறது. (வெளிப்படுத்துதல் 16:14, 16) இந்த பூமியில் இருக்கும் கெட்ட ஜனங்களையும் கடவுள் அந்தப் போரில் அழித்துவிடுவார்.

“பணிவான ஜனங்களே, அனைவரும் கர்த்தரிடத்தில் வாருங்கள் . . . நல்லவற்றையே செய்யக் கற்றுக்கொள்ளுங்கள். பணிவாக இருக்க கற்றுக்கொள்ளுங்கள். அதனால் ஒருவேளை நீங்கள் கர்த்தர் தனது கோபத்தைக் காட்டும்போது பாதுகாப்பு பெறலாம்.”செப்பனியா 2:3, ஈஸி டு ரீட் வர்ஷன்.

எப்போது அழிப்பார்?

பைபிள் என்ன சொல்கிறது?

கடவுள் சீக்கிரமாக இந்த உலகத்தில் இருக்கும் அரசாங்கங்களை எல்லாம் அழித்துவிட்டு, அவருடைய அரசாங்கத்தை கொண்டுவரப்போகிறார். (தானியேல் 7:13, 14) “கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய இந்த நற்செய்தி உலகமெங்கும் உள்ள எல்லாத் தேசத்தாருக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்; பின்பு முடிவு வரும்.” (மத்தேயு 24:14) ஜனங்கள்மேல் கடவுள் அன்பு வைத்திருப்பதால், அழிவு வருவதற்கு முன்பே திருந்துவதற்கு ஒரு வாய்ப்பு கொடுக்கிறார். அதனால், “போதும்” என்று கடவுள் சொல்லும்வரை கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய செய்தியை அவருடைய மக்கள் உலகம் முழுவதும் சொல்வார்கள். அதற்குப் பிறகுதான் அழிவு வரும். அழிவு வருவதற்கு முன்பு உலகம் முழுவதும் போர்கள் நடக்கும்... பூமியதிர்ச்சி வரும்... பஞ்சங்கள் ஏற்படும்... நோய்கள் வரும்... என்றுகூட பைபிள் சொல்கிறது.—மத்தேயு 24:3; லூக்கா 21:10, 11.

அந்த சமயத்தில் வாழும் ஜனங்கள் எப்படி இருப்பார்கள் என்றும் பைபிளில் இருக்கிறது. ‘கடைசி நாட்களில், சமாளிப்பதற்குக் கடினமான கொடிய காலங்கள் வரும்.’ “ஏனென்றால், மனிதர்கள் சுயநலக்காரர்களாக, பண ஆசைபிடித்தவர்களாக, . . . பெற்றோருக்குக் கீழ்ப்படியாதவர்களாக, . . . சுயக்கட்டுப்பாடு இல்லாதவர்களாக, கொடூரமானவர்களாக, நல்ல காரியங்களை விரும்பாதவர்களாக, . . . கடவுளை நேசிக்காமல் சுகபோகங்களை நேசிக்கிறவர்களாக இருப்பார்கள்.” * (அடிக்குறிப்பை பாருங்கள்.)—2 தீமோத்தேயு 3:1-5.

இந்த உலகத்தில் இருக்கும் கெட்ட ஜனங்கள் சீக்கிரமாக அழியப்போகிறார்கள்.—1 யோவான் 2:17

1914-ல் முதல் உலகப் போர் நடந்த நேரத்தில்தான் இந்த எல்லா விஷயங்களும் நடக்க ஆரம்பித்தது. யெகோவாவின் சாட்சிகள், அந்த வருடத்திலிருந்து கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி உலகம் முழுவதும் சொல்ல முயற்சி செய்கிறார்கள். கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி எல்லாருக்கும் சொல்ல வாய்ப்பு கிடைத்ததற்காக அவர்கள் ரொம்ப சந்தோஷப்படுகிறார்கள். அதனால்தான், அவர்கள் தயாரிக்கும் காவற்கோபுரம் என்ற பத்திரிகையின் தலைப்புக்கு கீழே யெகோவாவின் ராஜ்யத்தை [அதாவது, அரசாங்கத்தை] அறிவிக்கிறது என்று எழுதியிருக்கிறது. ▪ (g15-E 11)

“எப்பொழுதும் தயாராக இருங்கள் . . . [அழிவு] வரப்போகும் நாளோ நேரமோ உங்களுக்குத் தெரியாது.”மத்தேயு 25:13. ஈஸி டு ரீட் வர்ஷன்.

^ பாரா. 14 பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகத்தில் அதிகாரம் 9-லும் இதைப் பற்றி படித்துத் தெரிந்துகொள்ளலாம். இது யெகோவாவின் சாட்சிகள் வெளியிட்ட புத்தகம். www.jw.org வெப்சைட்டிலும் கிடைக்கும்.