அட்டைப்படக் கட்டுரை | நான் கடவுளுடைய நண்பனாக முடியுமா?

கடவுளுக்கு பிடிச்சத செய்றீங்களா?

கடவுளுக்கு பிடிச்சத செய்றீங்களா?

முன்ன பின்ன தெரியாத ஒருத்தர்கிட்ட, “உனக்காக நான் என்ன வேணாலும் செய்வேன்”னு சொல்வீங்களா? நெருங்கிய நண்பர்கிட்டதான் இப்படி சொல்வீங்க. நண்பர்கள் ஏதாவது கேட்டாங்கன்னா, அதை செய்றதுக்கு நீங்க தயங்கவே மாட்டீங்க.

யெகோவா, தன்னை வணங்குறவங்க சந்தோஷமா இருக்கனும்னு நினைக்கிறார். அதுக்கு தேவையானத எல்லாம் அவர் செய்றார். ‘நீர் அற்புதமான காரியங்கள் பலவற்றைச் செய்திருக்கிறீர்! எங்களுக்காக அற்புதமான திட்டங்களை வகுத்திருக்கிறீர்! நீர் செய்த காரியங்கள் எண்ணிலடங்காதவை’னு யெகோவாவோட நண்பர் தாவீது சொன்னார். (சங்கீதம் 40:5, ஈஸி டு ரீட் வர்ஷன்) யெகோவா தன்னை வணங்காத ஆட்களுக்கும் நல்லதைதான் செய்றார். தேவையான ‘உணவை தந்து, அவர்களுடைய இருதயங்களைச் சந்தோஷத்தால் நிரப்பி நன்மை செய்திருக்கிறார்’னு பைபிள் சொல்லுது.—அப்போஸ்தலர் 14:17.

ஒருத்தர்மேல அன்பு இருந்தா, அவங்களுக்காக என்ன வேணாலும் செய்வோம்

யெகோவா நமக்காக எல்லாத்தையும் செய்றார். அப்படினா, நாமும் அவருக்கு பிடிச்ச விஷயங்கள செய்யனும். அப்பதான், அவரோட நண்பரா இருக்க முடியும். (நீதிமொழிகள் 27:11) நாம என்ன செஞ்சா அவருக்குப் பிடிக்கும்? “நன்மை செய்யவும், உங்களிடம் இருப்பதை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளவும் மறந்துவிடாதீர்கள்”னு பைபிள் சொல்லுது. இந்த மாதிரி செய்றவங்கள கடவுளுக்கு ரொம்ப பிடிக்கும். (எபிரெயர் 13:16) ஆனா, மத்தவங்களுக்கு நல்லது செஞ்சா மட்டும் போதுமா?

“விசுவாசமில்லாமல் [அதாவது, நம்பிக்கை இல்லாமல்] ஒருவனும் கடவுளைப் பிரியப்படுத்தவே முடியாது.” (எபிரெயர் 11:6) ‘ஆபிரகாம் யெகோவாமீது [நம்பிக்கை] வைத்தார்.’ அதனாலதான், அவரை “யெகோவாவின் நண்பர்”னு பைபிள் சொல்லுது. (யாக்கோபு 2:23) ‘கடவுள்மீது நம்பிக்கை’ வைக்கிறது முக்கியம்னு இயேசுவும் சொன்னார். அப்படி செஞ்சா, நமக்கு கடவுளுடைய ஆசீர்வாதம் கிடைக்கும். (யோவான் 14:1, பொ.மொ.) கடவுள்மேல நம்பிக்கை வைக்கிறதுக்கு நாம என்ன செய்யனும்? தினமும் பைபிள படிக்கனும். அப்பதான், கடவுளுக்கு எது பிடிக்கும் எது பிடிக்காதுனு தெரிஞ்சிக்க முடியும். கடவுளுக்கு பிடிச்ச மாதிரி வாழும்போது அவர் சந்தோஷப்படுவார். இப்படியெல்லாம் செஞ்சா கடவுள்மேல இருக்கிற நம்பிக்கை அதிகமாகும். அவரோட நெருங்கிய நண்பராவும் ஆக முடியும்.—கொலோசெயர் 1:9, 10. (w14-E 12/01)