பாகம் 5
‘அவர் கற்பித்த விதத்தை பார்த்து அசந்துபோனார்கள்’
(வீடியோ நேரம்: 30:47)
ஒரு பெரிய கூட்டத்தை குணப்படுத்திய பிறகு, இயேசு ரொம்ப பிரபலமான மலைப்பிரசங்கத்தைக் கொடுக்கிறார். இந்தப் பாகத்தில் கீழே இருக்கும் பதிவுகளின் காட்சிகளை பார்க்கலாம்:
பெரிய மக்கள் கூட்டத்துக்கு இயேசு கற்றுக்கொடுக்கிறார், குணமாக்குகிறார் (லூக்கா 6:17-19; மத்தேயு 5:1)
இயேசு மலைப் பிரசங்கத்தை ஆரம்பிக்கிறார்; சந்தோஷங்களும் கேடுகளும் (மத்தேயு 5:2-12; லூக்கா 6:20-26)
‘பூமிக்கு உப்பு’ மற்றும் ‘உலகத்துக்கு ஒளி’ (மத்தேயு 5:13-16)
இயேசு திருச்சட்டத்தை நிறைவேற்ற வந்தார் (மத்தேயு 5:17-20)
கோபப்படாமல் இருப்பது, மற்றவர்களோடு இருக்கும் தனிப்பட்ட பிரச்சினைகளை சரிசெய்வது சம்பந்தமான ஆலோசனை (மத்தேயு 5:21-26)
மணத்துணைக்கு துரோகம், விவாகரத்து சம்பந்தமான ஆலோசனை (மத்தேயு 5:27-32)
சத்தியம் செய்வது, பழிக்குப்பழி வாங்குவது, எதிரிகளிடம் அன்பு காட்டுவது சம்பந்தமான ஆலோசனை (மத்தேயு 5:33-48; லூக்கா 6:27-30, 32-36)
மற்றவர்கள் முன் நீதிமானாக காட்டிக்கொள்ளக் கூடாது (மத்தேயு 6:1-4)
எப்படி ஜெபம் செய்ய வேண்டும், மாதிரி ஜெபம் (மத்தேயு 6:5-15)
வெளிவேஷத்துக்காக விரதம் இருக்க கூடாது (மத்தேயு 6:16-18)
பூமியிலும் பரலோகத்திலும் பொக்கிஷங்கள் (மத்தேயு 6:19-24)
கவலைப்படுவதை நிறுத்த வேண்டும்; கடவுளுடைய அரசாங்கத்துக்கு முதலிடம் (மத்தேயு 6:25-34)
நியாயந்தீர்ப்பதை நிறுத்த வேண்டும்; கொடுப்பதை பழக்கமாக்க வேண்டும் (மத்தேயு 7:1-6; லூக்கா 6:37-42)
கேட்டுக்கொண்டே, தேடிக்கொண்டே, தட்டிக்கொண்டே இருக்க வேண்டும் (மத்தேயு 7:7-11)
பொன் விதி (மத்தேயு 7:12; லூக்கா 6:31)
இடுக்கமான வாசல் (மத்தேயு 7:13, 14)
போலி தீர்க்கதரிசிகள்; கனிகளை வைத்து மரம் எப்படிப்பட்டது என்று தெரிந்துகொள்ளலாம் (மத்தேயு 7:15-23; லூக்கா 6:43-46)
பாறைமேல் கட்டிய வீடும் மணல்மேல் கட்டிய வீடும் (மத்தேயு 7:24-27; லூக்கா 6:47-49)
இயேசு கற்றுக்கொடுத்த விதத்தைப் பார்த்து மக்கள் அசந்துபோனார்கள் (மத்தேயு 7:28, 29)

