Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

ஊழியத்தில் திறமைகளை மெருகூட்ட...​—⁠சீஷராக ஆவதற்கேற்ற “மனப்பான்மையோடு” இருக்கிறவர்களுக்கு உதவுங்கள்

ஊழியத்தில் திறமைகளை மெருகூட்ட...​—⁠சீஷராக ஆவதற்கேற்ற “மனப்பான்மையோடு” இருக்கிறவர்களுக்கு உதவுங்கள்

ஏன் முக்கியம்: “முடிவில்லாத வாழ்வைப் பெறுவதற்கேற்ற மனப்பான்மையோடு” இருக்கிறவர்களுடைய இதயத்தில் சத்திய விதைகள் வளரும்படி யெகோவா செய்கிறார். (அப் 13:48; 1கொ 3:7) கற்றுக்கொண்டதன்படி நடக்க முயற்சி செய்பவர்களுக்குக் கவனம் செலுத்துவதன் மூலம் நாம் யெகோவாவோடு சேர்ந்து வேலை செய்கிறோம். (1கொ 9:26) மீட்பு கிடைப்பதற்கு ஞானஸ்நானம் முக்கியம் என்பதை பைபிள் மாணாக்கர்கள் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. (1பே 3:21) வாழ்க்கையில் மாற்றங்கள் செய்வது... பிரசங்கிப்பது... கற்பிப்பது... தங்கள் வாழ்க்கையை யெகோவாவுக்கு அர்ப்பணிப்பது... ஆகியவற்றின் மூலம் சீஷர்களாக ஆவதற்கு நாம் அவர்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும்.—மத் 28:19, 20.

எப்படிச் செய்வது:

  • யெகோவாவைப் பற்றி ‘தெரிந்துகொள்வதும்,’ அவரைப் பிரியப்படுத்துவதும்தான் பைபிள் படிப்பின் முக்கிய நோக்கம் என்பதை பைபிள் மாணாக்கர்களுக்குப் புரியவையுங்கள்.—யோவா 17:3

  • கெட்ட பழக்கங்கள், கெட்ட நட்பு போன்ற தடைகளைத் தகர்த்தெறிந்து ஆன்மீக ரீதியில் முன்னேறுவதற்கு அவர்களுக்கு உதவுங்கள்

  • ஞானஸ்நானத்துக்கு முன்பும் சரி பின்பும் சரி அவர்களைப் பலப்படுத்துங்கள், உற்சாகப்படுத்துங்கள்.—அப் 14:22

யெகோவா உங்களுக்கு உதவி செய்வார் என்ற வீடியோவைப் பார்த்த பிறகு, இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:

  • அர்ப்பணிக்கவும் ஞானஸ்நானம் எடுக்கவும், ஒரு நபருக்கு எவையெல்லாம் தடையாக இருக்கலாம்?

  • பைபிள் மாணாக்கர்கள் ஆன்மீக ரீதியில் முன்னேறுவதற்கு மூப்பர்கள் எப்படி உதவலாம்?

  • ஏசாயா 41:10-லிருந்து யெகோவாவைப் பற்றி என்ன தெரிந்துகொள்கிறோம்?

  • நாம் பாவ இயல்புள்ளவர்களாக இருந்தாலும், யெகோவாவுக்குப் பிடித்ததுபோல் அவரை வணங்க எந்தக் குணங்கள் நமக்கு உதவும்?

சீஷராக்குவதன் மூலம் நாம் எப்படி யெகோவாவோடு சேர்ந்து வேலை செய்கிறோம்?