Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

குடும்ப ஸ்பெஷல் | இளைஞர்களுக்காக...

கெட்ட ஆசையை தவிர்க்க...

கெட்ட ஆசையை தவிர்க்க...

இது ஏன் கஷ்டம்?

“பொண்ணுங்க, அவங்களோட வலையில என்னை விழ வைக்கிறதுக்காக என் போன் நம்பரை கேட்பாங்க. நான் கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டு போயிடுவேன். ஆனா, ‘நம்பரை கொடுத்திருந்தா, எப்படி இருந்திருக்கும்!’னு யோசிச்சு பார்ப்பேன். அந்தப் பொண்ணுங்க ரொம்ப அழகா இருப்பாங்க. ‘கொடுத்தா என்ன தப்பு?’னு யோசிக்க தோனும்.”—சார்லஸ், 16 வயசு. (பெயரை மாத்தியிருக்கோம்.)

நீங்க என்னைக்காவது சார்லஸ் மாதிரி யோசிச்சிருக்கீங்களா? கவலைப்படாதீங்க. உங்களால கண்டிப்பா கெட்ட ஆசையை தவிர்க்க முடியும்.

சில உண்மைகள்

ஆசையா இருக்கேனு தப்பு செஞ்சா நாமதான் கஷ்டப்படனும்

எந்த வயசுல வேணாலும் கெட்ட ஆசை வரலாம். கெட்ட ஆசையை எதிர்த்து நம்மால நிச்சயம் போராட முடியும். இதுக்கு பைபிள் எழுத்தாளர் பவுல் ஒரு நல்ல உதாரணம். கடவுளுக்கு பிடிச்சததான் செய்யனும்னு அவர் ஆசைப்பட்டார். ஆனா, சில நேரத்தில அப்படி செய்ய முடியாம போனதை நினைச்சு கவலைப்பட்டார். அப்போ அவர் இளம் வயசை தாண்டிட்டார். “என் மனதின் சட்டத்திற்கு விரோதமாய்ப் போராடுகிற வேறொரு சட்டம் என் உடலுறுப்புகளில் இருப்பதைக் காண்கிறேன்”னு சொன்னார். (ரோமர் 7:22, 23) ஆனா, பவுல் அந்த எண்ணத்தை எதிர்த்து போராடுனார். (1 கொரிந்தியர் 9:27) நாமளும் பவுல் மாதிரியே முயற்சி செஞ்சா கெட்ட ஆசையை தவிர்க்க முடியும். இளம் வயசுலயே இந்த மாதிரி ஆசைகளை கட்டுப்படுத்துறது ரொம்ப நல்லது. அப்படி செஞ்சா, தேவையில்லாத பிரச்சினைகளை தவிர்க்க முடியும். வளர்ந்ததுக்கு அப்புறமும் தப்பு செய்யாம இருக்க அது உதவும்.

கெட்ட ஆசையை தூண்டிவிடுற உலகத்தில வாழ்றோம். ‘இளமைப் பருவத்தில வர ஆசைகளை’ எதிர்க்கனும்னு பைபிள் சொல்லுது. (2 தீமோத்தேயு 2:22) ஆனா இன்னைக்கு இருக்கிற சினிமா, டிவி, பாடல், புத்தகம்னு எல்லாமே கெட்ட ஆசையை தூண்டிவிடுற மாதிரி இருக்கு. காதலிக்கிறவங்க நெருக்கமா பழகாம, செக்ஸ் வெச்சிக்காம இருக்க முடியாதுனு நிறைய சினிமால காட்றாங்க. ஆனா, நிஜ வாழ்க்கையில இந்த மாதிரி ‘பாவ இச்சைகளிலிருந்து விலகியிருக்க’ முடியும்னு பைபிள் சொல்லது. (1 பேதுரு 2:11) முயற்சி செஞ்சா, நீங்களும் இந்த மாதிரி கெட்ட ஆசையை தவிர்க்க முடியும். அதுக்கு என்ன செய்யனும்?

என்ன செய்யனும்?

கெட்ட ஆசை வளர எது காரணம்னு யோசிச்சு பாருங்க. உங்களுக்கு ஏதாவது பலவீனம் இருக்கானு யோசிச்சு பாருங்க. உதாரணமா, ஒரு செயின் (chain) எவ்வளவுதான் உறுதியா இருந்தாலும் அதோட கொக்கி சரியில்லனா அது ஈஸியா கழன்டு விழுந்திடும். அதேமாதிரி, தப்பே செய்ய கூடாதுனு எவ்வளவுதான் முயற்சி செஞ்சாலும் சில விஷயங்கள்ல ஜாக்கிரதையா இல்லனா ஈஸியா கெட்ட ஆசை உங்க மனசுல வளர ஆரம்பிச்சிடும். நீங்க எந்த விஷயத்தில ஜாக்கிரதையா இருக்கனும்னு யோசிச்சு பாருங்க.—பைபிள் ஆலோசனை: யாக்கோபு 1:14.

தயாரா இருங்க. ‘எந்த சூழ்நிலையில கெட்ட ஆசை வரும்? அதை எப்படி சமாளிக்கிறது?’னு முன்னாடியே யோசிச்சு பாருங்க.—பைபிள் ஆலோசனை: நீதிமொழிகள் 22:3.

கெட்டதை செய்யக் கூடாதுனு உறுதியா இருங்க. ரொம்ப காலத்துக்கு முன்னாடி யோசேப்புனு ஒருத்தர் வாழ்ந்தார். ஒரு பெண் அவரோட தப்பான உறவு வெச்சிக்க ஆசைப்பட்டாங்க. அதனால, அவரை தொந்தரவு செஞ்சிகிட்டே இருந்தாங்க. ‘இவ்வளவு பெரிய தப்பை நான் செய்யவே மாட்டேன், கடவுளுக்கு இது பிடிக்கவே பிடிக்காது’னு யோசேப்பு சொன்னார். (ஆதியாகமம் 39:9) தப்பே செய்ய கூடாதுனு யோசேப்பு நினைச்சார். நீங்களும் அவர் மாதிரியே உறுதியா இருப்பீங்களா?

நல்ல நண்பர்களோடு பழகுங்க. “ஞானமுள்ளவர்களோடு நட்பாக இரு, நீயும் ஞானம் அடைவாய்”னு பைபிள் சொல்லுது. (நீதிமொழிகள் 13:20, ஈஸி டு ரீட் வர்ஷன்) கெட்ட விஷயங்களை செய்யவே கூடாதுனு நினைக்கிறவங்களோட மட்டும் பழகுங்க. அப்பதான் கெட்ட ஆசையை எதிர்க்கிறது உங்களுக்கு ஈஸியா இருக்கும்.

கெட்ட ஆசையை தூண்டிவிடுற இடத்தில இருக்காதீங்க.

  • ஒரு பையனோட/பொண்ணோட தனியா இருக்காதீங்க.

  • ஆபாசத்தை பார்க்க தூண்டுற நேரத்தில இன்டர்நெட்டை பயன்படுத்தாதீங்க. தனியா இருக்கும்போதும் பயன்படுத்தாதீங்க.

  • எப்படி வேணாலும் வாழலாம், தப்பே இல்லனு நினைக்கிறவங்களோட பழகாதீங்க.

கெட்ட ஆசையை எதிர்க்க நீங்க என்னெல்லாம் செய்யலாம்னு யோசிச்சு பாருங்க.—பைபிள் ஆலோசனை: 2 தீமோத்தேயு 2:22.

கடவுள்கிட்ட உதவி கேளுங்க. “நீங்கள் சோதனைக்கு இணங்கிவிடாதபடி விழிப்புடன் இருந்து, தொடர்ந்து ஜெபம் செய்யுங்கள்”னு இயேசு அவருடைய நண்பர்கள்கிட்ட சொன்னார். (மத்தேயு 26:41) நாம கெட்ட ஆசையை எதிர்த்து போராடனும்னு கடவுள் ஆசைப்படுறார். அதுக்கு நமக்கு உதவியும் செய்றார். அதனாலதான், “உங்களால் தாங்கிக்கொள்ள முடியாதளவுக்கு நீங்கள் சோதிக்கப்பட அவர் அனுமதிக்க மாட்டார்; மாறாக, சோதனையை நீங்கள் சகித்துக்கொள்வதற்கு வழிசெய்வார்”னு பைபிள் சொல்லுது.—1 கொரிந்தியர் 10:13. ▪ (g14-E 10)