நம் சர்வதேச சகோதரத்துவம்
“சகோதரர்கள் எல்லாரிடமும் அன்பு காட்டுங்கள்” என்று பைபிள் சொல்கிறது. இன்று யெகோவாவின் சாட்சிகள் எல்லாரிடமும் அன்பாக, பாசமாக நடந்துகொள்கிறார்கள். அவர்கள் கடவுளைப் பற்றி மற்றவர்களிடம் சொல்கிறார்கள், கஷ்டப்படுகிறவர்களுக்கு உதவி செய்கிறார்கள், அவர்களுடைய சபையில் ஒன்றாக சேர்ந்து யெகோவாவை வணங்குகிறார்கள்.
இவற்றையும் அலசிப் பார்க்கலாமே!
ஆவணப்படங்கள்
யெகோவாவின் சாட்சிகள்—நற்செய்தியை அறிவிக்க ஒழுங்கமைக்கப்பட்டோர்
யெகோவாவின் சாட்சிகள் உலகம் முழுவதும் இருக்கிற நிறைய பேருக்கு பைபிளைப் பற்றி சொல்லிக்கொடுக்கிறார்கள். அவர்களால் எப்படி இதை செய்ய முடிகிறது? அதற்காக என்னவெல்லாம் செய்கிறார்கள்? அவர்களுக்கு யார் பணம் கொடுத்து உதவி செய்கிறார்கள்?

