Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஆப்பிரிக்க குள்ளர்களிடம் பைபிள் சத்தியத்தை அறிவித்தல்

ஆப்பிரிக்க குள்ளர்களிடம் பைபிள் சத்தியத்தை அறிவித்தல்

ஆப்பிரிக்க குள்ளர்களிடம் பைபிள் சத்தியத்தை அறிவித்தல்

கேமருனிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய செய்தியை ‘எல்லா மனுஷருக்கும்’ அறிவிப்பதற்கு உலகெங்கிலும் 230-க்கும் அதிகமான நாடுகளில் வாழும் யெகோவாவின் சாட்சிகள் முயல்கின்றனர். (1 தீமோத்தேயு 2:4; மத்தேயு 24:14) இந்த ‘எல்லா மனுஷரில்’ ஆப்பிரிக்க குள்ளர்களும் அடங்குவர். இவர்களுடைய சராசரி உயரம் 1.2 முதல் 1.4 மீட்டர்தான். மத்திய ஆப்பிரிக்க குடியரசு, காங்கோ பகுதி, தென்கிழக்கு கேமருன் ஆகிய இடங்களில் உள்ள அடர்ந்த காடுகளே இவர்களின் முக்கிய வாழிடம்.

இந்த ஆப்பிரிக்க குள்ளர்களை ஆய்வுப் பயணிகள் சந்தித்ததைப் பற்றிய முதல் பதிவு உள்ளது; அதாவது நெஃபர்ரிர்காரே என்ற எகிப்திய பார்வோன் நைல் நதியின் ஊற்றை கண்டுபிடிக்க ஓர் ஆய்வுப் பயணக் குழுவை அனுப்பிய சமயத்தில்தான் இந்த சந்திப்பு நிகழ்ந்ததாக அந்தப் பதிவு காட்டுகிறது. குள்ளமான இந்த ஜனங்களை ஆப்பிரிக்காவின் அடர்ந்த காட்டுப்பகுதிகளில் சந்தித்ததாக அந்த ஆய்வு பயணிகளின் அறிக்கை சொல்கிறது. பிற்கால கிரேக்க எழுத்தாளர் ஹோமரும் தத்துவஞானி அரிஸ்டாட்டிலும் ஆப்பிரிக்க குள்ளர்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளனர். 16-வது மற்றும் 17-வது நூற்றாண்டுகளில் ஐரோப்பியர்களுக்கும் குள்ளர்களுக்கும் தொடர்பு ஏற்பட்டது.

நவீன நாட்களில், யெகோவாவின் சாட்சிகள் ஆப்பிரிக்காவிலுள்ள காடுகளில் ஊழியம் செய்கின்றனர். ராஜ்ய செய்தியை ஆப்பிரிக்க குள்ளர்கள் செவிசாய்த்துக் கேட்டாலும், ஆர்வமுள்ளவர்களை மறுபடியும் சந்திப்பதற்காக எடுக்கப்படும் முயற்சிகள் அநேகமாக வெற்றி பெறுவதில்லை. ஆப்பிரிக்க குள்ளர்கள் அடிக்கடி இடம்மாறிச் செல்வதே இதற்கு காரணம்​—⁠இரண்டு மாதங்களுக்கு அல்லது சில மாதங்களுக்கு ஒருமுறை ஓர் இடத்தைவிட்டு மற்றொரு இடத்திற்கு மாறிக்கொண்டே இருப்பார்கள்.

ஆப்பிரிக்காவில் 1,50,000 முதல் 3,00,000 பேர் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது; அமைதியை நாடுகிற, பயந்த சுபாவமுடைய ஜனங்கள் என இவர்கள் அறியப்பட்டுள்ளனர். அரசாங்கங்கள், சர்வதேச அமைப்புகள் மற்றும் சர்ச்சுகள் அவர்களுடைய நாடோடி வாழ்க்கையை மாற்றி ஓரிடத்திலேயே தங்கவைப்பதற்கு விசேஷ பள்ளிகளையும் அவர்களுக்கு ஏற்ற வீடுகளையும் கட்டி தந்தன. இருப்பினும், அவர்களை கவர்ந்திழுப்பதற்கு செய்யப்பட்ட அநேக முயற்சிகள் பெரும் தோல்வியையே தழுவின.

கேமருனை சேர்ந்த ஷான்வியே ம்பாகீ என்பவர் இதற்கு விதிவிலக்கு. அங்கு யெகோவாவின் சாட்சியாக மாறிய முதல் ஆப்பிரிக்க குள்ளர் அவர்தான். நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் என்ற படங்கள் நிறைந்த புத்தகத்தையும் மற்ற பிரசுரங்களையும் படித்து பைபிள் செய்தியை ஏற்றுக்கொண்டார். a 2002-⁠ம் வருடத்தில் ஷான்வியே முழுக்காட்டப்பட்டார்; யெகோவாவின் சாட்சிகள் தங்களுடைய முழுநேர ஊழியர்களை பயனியர் என அழைக்கின்றனர்; ஷான்வியேவும் இந்தப் பயனியர் சேவையை செய்து வருகிறார். அந்நாட்டின் தென்கிழக்கு பகுதியிலுள்ள சிறிய பட்டணமாகிய ம்பாங்கில் உள்ள கிறிஸ்தவ சபையில் உதவி ஊழியராகவும் சேவை செய்கிறார். ‘எல்லா மனுஷரையும்’ நேசிக்கும் ஒரே மெய் கடவுளாகிய யெகோவாவை வழிபடுவதில் கேமருனை சேர்ந்த அநேக குள்ளர்களும் சேர்ந்து கொள்வார்களா இல்லையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். (g04 8/22)

[அடிக்குறிப்பு]

a யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது, ஆனால் இப்பொழுது அச்சில் இல்லை.

[பக்கம் 24-ன் படம்]

யெகோவாவின் சாட்சியாக மாறிய முதல் ஆப்பிரிக்க குள்ளர் ஷான்வியே ம்பாகீ, ஊழியத்தில்