Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எமது வாசகரிடமிருந்து

எமது வாசகரிடமிருந்து

எமது வாசகரிடமிருந்து

பூச்சிகள் கடத்தும் நோய்கள் நான் ஒரு பல்கலைக்கழக ஆசிரியை. கடந்த 24 வருடங்களாக அங்குள்ள நுண்ணுயிரியல், ஒட்டுண்ணியியல், உயிர்வேதியியல் ஆகிய ஆய்வுக்கூடங்களின் முதல்வராகவும் இருந்து வருகிறேன். நீங்கள் அறிவியல் விஷயங்களை எளிமையாக விளக்குகிறீர்கள்! “பூச்சிகள் நோய்களை பரப்புகையில்” என்ற அட்டைப்பட கட்டுரைகள் என் மனதைக் கவர்ந்தன. (ஜூலை 8, 2003) சிலசமயங்களில் அறிவியல் பாடபுத்தகங்களில் கொடுக்கப்பட்டுள்ள விஷயங்களை என்னால் புரிந்துகொள்ள முடிவதில்லை. ஆனால் அதே விஷயங்களை நீங்கள் விளக்கும்போது டக்கென்று புரிந்துவிடுகிறது. உங்கள் எல்லா உழைப்புக்கும் நன்றி.

எம். ஆர்., மெக்சிகோ (g04 4/22)

நெருக்கப்படும் பிள்ளைகள் “குருவித் தலையில் பனங்காயா?” (மே 8, 2003) கட்டுரைகளுக்கு மிகுந்த நன்றியை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். எனக்கு தேவைப்பட்டதெல்லாம் அதுவேதான். துணை இல்லாத தாயாகவும் முழுநேர சுவிசேஷ ஊழியராகவும் இருப்பதால் மூச்சுவிடவும் நேரம் இருப்பதில்லை. ‘நான் ஒரு நல்ல தாயாக இருக்கிறேனா? என் மகளிடம் அளவுக்கு அதிகமாக எதிர்பார்க்கிறேனா?’ என அடிக்கடி என்னையே கேட்டுக்கொள்வேன். எந்த விஷயங்களில் நான் முன்னேற்றம் செய்யலாம் என்பதை அறிந்தது ஆறுதலாக இருந்தது. என் மகளின் பிள்ளைப்பருவத்தை நானும் சரி அவளும் சரி, மகிழ்ந்து அனுபவிக்க வேண்டுமென விரும்புகிறேன். உங்கள் கட்டுரைகள் அனைத்துமே ஊக்கமூட்டுவதாய் இருந்தாலும், குறிப்பாக இதுபோன்ற கட்டுரைகள் எனக்கு மிக அதிக உற்சாகம் தருகின்றன.

எம். டி. ஈ., மெக்சிகோ (g04 4/8)

ஏமாற்றுதல் “இளைஞர் கேட்கின்றனர் . . . ஏமாற்றுவதில் என்ன தப்பு?” (பிப்ரவரி 8, 2003) என்ற கட்டுரைக்கு நன்றி. என்னோடு படிக்கும் மாணவர்கள் அவர்களுக்காக பரீட்சைகளை எழுதினால் கத்தை கத்தையாக பணம் தருவதாக சொன்னதுண்டு. நான் இதுபோன்ற ஏமாற்று வேலையை செய்ய மாட்டேன் என சொல்லிவிட்டேன். அதனால் நான் நியாயமில்லாமல் நடந்துகொள்வதாக தவறாக நினைக்கிறார்கள். ஆனாலும் கடவுளுடைய தராதரங்களை ஒருபோதும் விட்டுக்கொடுக்காமல் பின்பற்றும்படி இந்தக் கட்டுரை எனக்கு நினைப்பூட்டியது.

எஃப். ஏ. சீ., நைஜீரியா (g04 4/22)

நானாகவே எப்போதும் ஹோம்வர்க் செய்ய மாட்டேன், ஆனால் க்ளாஸ்மேட்டுகளுடைய ஹோம்வர்க்கைப் பார்த்து காப்பியடித்து விடுவேன். இருந்தாலும் வேறொருவரைப் பார்த்து காப்பியடிப்பது திருட்டுக்கு சமம் என்பதை புரிந்துகொள்ள இந்தக் கட்டுரை எனக்கு உதவியது. இந்தக் கருத்தை என்னோடு படிக்கும் பிள்ளைகள் ஏற்றுக்கொள்வதில்லை என்றாலும் நான் அதைக் கடைப்பிடிக்க வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கிறேன்.

ஒய். டி., ரஷ்யா (g04 4/22)

சர்க்கரை வியாதி “சர்க்கரை வியாதியோடு காலம் தள்ளுதல்” (ஜூன் 8, 2003) என்ற கட்டுரையில், அடிக்கடி சிறுநீர் கழிப்பது சர்க்கரை வியாதிக்கு அறிகுறி என்பதை நான் வாசித்தபோது எனக்கும் அவ்வியாதி இருக்கலாம் என உணர்ந்தேன். உடனே ஆஸ்பத்திரிக்கு சென்றேன், எனக்கு சர்க்கரை வியாதி இருப்பது பரிசோதனையில் தெரிய வந்தது. இது நடந்து ஒரு மாதத்திற்கும் மேல் ஆகிவிட்டது; மருந்து மாத்திரை, சாப்பாடு, உடற்பயிற்சி ஆகியவற்றின் மூலம் என் இரத்தத்திலுள்ள சர்க்கரை அளவை குறைக்க நான் முயற்சி செய்து வருகிறேன். நான் இந்தப் பத்திரிகையை மட்டும் வாசித்திருக்காவிட்டால், எனக்கு இந்த வியாதி இருப்பதையே கண்டுபிடித்திருக்க மாட்டேன்.

ஒய். என்., ஜப்பான் (g04 4/22)

நான் யெகோவாவின் சாட்சி அல்ல, ஆனால் உங்கள் பத்திரிகைகளை பக்கத்து வீட்டுப் பெண் அன்போடு கொடுத்து வருகிறார். சர்க்கரை வியாதி சம்பந்தமான கட்டுரைகளை மிகவும் ரசித்துப் படித்தேன். நான் முதியோருக்கான நர்ஸ் பயிற்சியை பெற்று வருவதால் இந்த வியாதி சம்பந்தமாக ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையை எழுத வேண்டியிருந்தது. உங்கள் பத்திரிகையை சில நாட்களுக்கு முன்பு பெற்றிருந்தால் அத்தனை நிறைய புத்தகங்களை நான் புரட்டிப் பார்த்திருக்க வேண்டிய அவசியமே ஏற்பட்டிருக்காது! உங்கள் கட்டுரைகள் ரொம்ப பிரயோஜனமாக இருக்கின்றன.

ஏ. எஸ்., ஜெர்மனி (g04 4/22)