4 கஷ்டப்பட வேண்டும் என்றுதான் கடவுள் நம்மை படைத்தாரா?
ஏன் பதில் தெரிந்துகொள்ள வேண்டும்?
இந்தக் கேள்விக்கான பதில், வாழ்க்கையைப் பற்றிய நம் எண்ணத்தை மாற்றும்.
சிந்திக்க...
எல்லாவற்றையும் அழகாகப் படைத்த கடவுள், நமக்குக் கஷ்டம் நிறைந்த வாழ்க்கையைக் கொடுத்திருக்கிறார் என்று சொன்னால் நியாயமாக இருக்குமா?
மதப்பற்று இல்லாதவர்கள் கஷ்டங்கள் வரும்போது கடவுளுடைய உள்நோக்கத்தையே கேள்வி எழுப்புகிறார்கள். அவர் இருக்கிறாரா என்றுகூட சந்தேகப்படுகிறார்கள். கஷ்டங்கள் வரும்போது, (1) கடவுளுக்கு அதைத் தடுக்க சக்தி இல்லை என்றும், (2) அதைத் தடுக்க அவருக்கு விருப்பம் இல்லை என்றும், ஏன், (3) கடவுளே இல்லை என்றும்கூட சொல்கிறார்கள்.
மனிதர்கள் கஷ்டப்படுவதற்கு, இவற்றில் ஏதாவது ஒன்றுதான் காரணமாக இருக்க முடியுமா?
அதிகம் தெரிந்துகொள்ள...
பைபிளை நம்பலாமா? என்ற வீடியோவை jw.org-ல் பாருங்கள்.
பைபிள் சொல்வது...
நாம் கஷ்டப்பட வேண்டும் என்று கடவுள் நம்மைப் படைக்கவில்லை.
வாழ்க்கையை நாம் சந்தோஷமாக அனுபவிக்க வேண்டும் என்று அவர் ஆசைப்படுகிறார்.
“மனுஷர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருந்து, நல்ல காரியங்களைச் செய்து, சாப்பிட்டு, குடித்து, தங்கள் கடின உழைப்பால் கிடைக்கிற சந்தோஷத்தை அனுபவிக்க வேண்டும். இதைவிட மேலானது வேறு எதுவுமே இல்லை . . . இது கடவுள் தரும் பரிசு.”—பிரசங்கி 3:12, 13.
முதல் மனித தம்பதிக்கு, கஷ்டமே இல்லாத வாழ்க்கையை வாழ்வதற்குத் தேவையான எல்லாவற்றையுமே கடவுள் கொடுத்தார்.
அவர்களும் சரி, அவர்களுடைய சந்ததியும் சரி, கஷ்டப்பட வேண்டும் என்பதற்காக அவர்களை அவர் படைக்கவில்லை.
“கடவுள் அவர்களிடம், ‘நீங்கள் பிள்ளைகளைப் பெற்று, ஏராளமாகப் பெருகி, பூமியை நிரப்புங்கள்; அதைப் பண்படுத்துங்கள். . . .’ என்று சொல்லி ஆசீர்வதித்தார்.”—ஆதியாகமம் 1:28.
முதல் மனித தம்பதி, கடவுளுக்குக் கீழ்ப்படிய வேண்டாம் என்று முடிவு செய்தார்கள்.
அதன் விளைவாக, அவர்களுக்கும் அவர்களுடைய சந்ததிக்கும் நிறைய கஷ்டங்கள் வந்தன.
“ஒரே மனிதனால் பாவமும் பாவத்தினால் மரணமும் இந்த உலகத்தில் வந்தது. இப்படி, எல்லா மனிதர்களும் பாவம் செய்ததால் மரணம் எல்லா மனிதர்களுக்கும் பரவியது.”—ரோமர் 5:12. *
தன்னுடைய வழிநடத்துதல் இல்லாமல் வாழும் விதத்தில் கடவுள் நம்மைப் படைக்கவில்லை.
நாம் எப்படித் தண்ணீருக்கு அடியில் வாழும் விதத்தில் படைக்கப்படவில்லையோ, அதேபோல்தான் நம்மை நாமே ஆட்சி செய்துகொள்ளும் விதத்திலும் நாம் படைக்கப்படவில்லை.
“மனுஷனுக்குத் தன் . . . காலடிகளை நடத்தும் அதிகாரம் இல்லை.”—எரேமியா 10:23.
நாம் கஷ்டப்பட வேண்டும் என்று கடவுள் விரும்புவதில்லை.
முடிந்தளவுக்கு நாம் பிரச்சினைகளைத் தவிர்க்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.
‘நீங்கள் என்னுடைய கட்டளைகளைக் கேட்டு நடந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! அப்போது, உங்கள் சமாதானம் ஆற்றைப் போல . . . இருக்கும்.’—ஏசாயா 48:18.
^ பாரா. 17 பைபிளில், “பாவம்” என்ற வார்த்தை மோசமான செயல்களை மட்டுமல்ல, எல்லா மனிதர்களும் வழிவழியாகப் பெற்ற ஒரு நிலைமையையும் குறிக்கிறது.