எரேமியா 10:1-25

10  இஸ்ரவேல் ஜனங்களே, உங்களுக்கு எதிராக யெகோவா சொல்லும் செய்தியைக் கேளுங்கள்.  யெகோவா சொல்வது இதுதான்: “மற்ற தேசத்தாரின் பழக்கவழக்கங்களைக் கற்றுக்கொள்ளாதீர்கள்.+அவர்கள் வானத்திலுள்ள அடையாளங்களைப் பார்த்துப் பயப்படுவதைப் போலநீங்கள் பயப்படாதீர்கள்.+   அந்த ஜனங்களுடைய சம்பிரதாயங்கள் வீணானவை. கைத்தொழிலாளிகள் காட்டிலுள்ள மரத்தை வெட்டுகிறார்கள்.பின்பு, அதைச் செதுக்கி சிலை செய்கிறார்கள்.+   வெள்ளியினாலும் தங்கத்தினாலும் அந்தச் சிலையை அலங்கரிக்கிறார்கள்.+அது விழாமல் இருப்பதற்காக ஆணிகள் வைத்து சுத்தியால் அடிக்கிறார்கள்.+   அந்தச் சிலைகள் வெள்ளரித் தோட்டத்தில் உள்ள சோளக்காட்டு பொம்மை போல இருக்கின்றன; அவற்றால் பேச முடியாது.+அவற்றால் நடக்கவும் முடியாது; யாராவது சுமந்துகொண்டுதான் போக வேண்டும்.+ அவற்றைப் பார்த்துப் பயப்படாதீர்கள்; ஏனென்றால், அவற்றால் கெட்டது செய்ய முடியாது.அவற்றால் நல்லது செய்யவும் முடியாது.”+   யெகோவாவே, உங்களைப் போல யாருமே இல்லை.+ நீங்கள் மகத்தானவர்; உங்கள் பெயர் மகத்தானது, மிகுந்த வல்லமை உள்ளது.   தேசங்களுக்கெல்லாம் ராஜாவே,+ யார்தான் உங்களுக்குப் பயப்படாமல் இருக்க முடியும்? உங்களுக்குப் பயப்படுவதுதானே நியாயம்?உலகமெங்கும் உள்ள தேசங்களில் எத்தனை ஞானிகள் இருந்தாலும்உங்களைப் போல் யாருமே இல்லை.+   அவர்கள் எல்லாருமே புத்தியில்லாதவர்கள், முட்டாள்கள்.+ மரச் சிலைகளைப் பார்த்து அறிவுரை கேட்பது சுத்த வீண்.+   தர்ஷீசிலிருந்து வெள்ளித் தகடுகளும்+ ஊப்பாசிலிருந்து தங்கமும் வர வைக்கப்படுகின்றன.அவற்றால் கைத்தொழிலாளிகளும் ஆசாரிகளும் அந்தச் சிலைகளுக்குத் தகடு அடிக்கிறார்கள். ஜனங்கள் அவற்றுக்கு நீல நிறத் துணிகளையும் ஊதா நிறத் துணிகளையும் போட்டுவிடுகிறார்கள். அவை எல்லாமே திறமைசாலிகளின் கைவேலைப்பாடுகள். 10  ஆனால், யெகோவா மட்டும்தான் உண்மையான கடவுள். அவர்தான் உயிருள்ள கடவுள்,+ என்றென்றுமுள்ள ராஜா.+ அவருடைய கோபத்தால் பூமி அதிரும்.+அவருடைய கடும் கோபத்தைத் தேசங்களால் தாங்கிக்கொள்ள முடியாது. 11  *அவர்களிடம் நீ இப்படிச் சொல்: “வானத்தையும் பூமியையும் படைக்காத தெய்வங்கள்வானத்தின் கீழோ பூமியிலோ இல்லாதபடி ஒழிந்துபோகும்.”+ 12  உண்மையான கடவுள்தான் தன்னுடைய வல்லமையினால் பூமியைப் படைத்தார்.தன்னுடைய ஞானத்தினால் நிலத்தை உண்டாக்கினார்.+தன்னுடைய புத்தியினால்* வானத்தை விரித்தார்.+ 13  அவர் குரல் கொடுக்கும்போதுவானத்தில் உள்ள தண்ணீர் கொந்தளிக்கிறது.*+பூமியின் எல்லா இடங்களிலிருந்தும் அவர் மேகங்களை* எழும்ப வைக்கிறார்.+ மழையோடு மின்னலை மின்ன வைக்கிறார்.*காற்றைத் தன்னுடைய கிடங்குகளிலிருந்து வீசச் செய்கிறார்.+ 14  மனுஷர்கள் எல்லாருமே அறிவும் புத்தியும் இல்லாமல் நடக்கிறார்கள். சிலைகளைச் செதுக்கிய ஆசாரிகள் எல்லாருமே வெட்கப்பட்டுப்போவார்கள்.+அவர்கள் வார்த்த சிலைகள் பொய்யானவை.உயிர்மூச்சே இல்லாதவை.+ 15  அவை ஒன்றுக்கும் உதவாதவை, கேலிக்குரியவை.+ கடவுளுடைய தண்டனைத் தீர்ப்பின் நாளில் அவை அழிந்துபோகும். 16  யாக்கோபின் கடவுளோ அந்தச் சிலைகளைப் போன்றவர் அல்ல.அவர்தான் எல்லாவற்றையும் உருவாக்கினார்.இஸ்ரவேல்தான் அவருடைய விசேஷ சொத்து.+ பரலோகப் படைகளின் யெகோவா என்பதுதான் அவருடைய பெயர்.+ 17  சுற்றிவளைக்கப்பட்ட பெண்ணே,தரையில் கிடக்கிற உன் சாமான்களை மூட்டைகட்டு. 18  ஏனென்றால், யெகோவா இப்படிச் சொல்கிறார்: “இதோ, தேசத்தில் இருக்கிற எல்லாரையும் நான் துரத்தியடிப்பேன்.+அவர்களை அவதிப்பட வைப்பேன்.” 19  ஐயோ! எனக்குக் காயமாகிவிட்டது!*+ என்னுடைய புண் ஆறவே ஆறாது. நான் இப்படிச் சொன்னேன்: “இது எனக்கு வந்திருக்கிற நோய், இதை நான் சகித்தே தீர வேண்டும். 20  என்னுடைய கூடாரம் நாசமாக்கப்பட்டது; என் கூடாரக் கயிறுகள் அறுத்தெறியப்பட்டன.+ என் பிள்ளைகள் என்னைவிட்டுப் போய்விட்டார்கள்; அவர்கள் இங்கே இல்லை.+ என் கூடாரத்தை எடுத்து நிறுத்துவதற்கோ இழுத்துக் கட்டுவதற்கோ யாருமே இல்லை. 21  மேய்ப்பர்கள் புத்தியில்லாமல் நடந்துகொண்டார்கள்.+அவர்கள் யெகோவாவிடம் விசாரிக்கவே இல்லை.+ அதனால்தான், விவேகம்* இல்லாமல் நடந்துகொண்டார்கள்.அவர்களுடைய மந்தைகள் எல்லாமே சிதறிப்போய்விட்டன.”+ 22  கேளுங்கள்! செய்தியைக் கேளுங்கள்! வடக்கு தேசத்திலிருந்து ஏராளமான வீரர்கள் திமுதிமுவென்று வருகிறார்கள்!+யூதாவைப் பாழாக்கி, நரிகளின் குகைபோல் ஆக்குவதற்காகப் படைதிரண்டு வருகிறார்கள்.+ 23  யெகோவாவே, மனுஷனுக்குத் தன் வழியைத் தீர்மானிக்கும் உரிமை* இல்லை என்றும், தன் காலடிகளை நடத்தும் அதிகாரம் இல்லை என்றும் எனக்கு நன்றாகத் தெரியும்.+ 24  யெகோவாவே, உங்களுக்கு நியாயமாகத் தோன்றுகிற விதத்தில் என்னைத் திருத்துங்கள்.ஆனால், கோபத்தில்+ என்னைக் கொன்றுவிடாதீர்கள்.+ 25  உங்களை அசட்டை செய்கிற தேசங்கள்மேலும்+உங்கள் பெயரைச் சொல்லி வேண்டிக்கொள்ளாத குடும்பங்கள்மேலும் உங்கள் கோபத்தைக் கொட்டுங்கள். ஏனென்றால், அவர்கள் யாக்கோபின் வம்சத்தாரை அழித்தார்கள்.+அவர்களை அடியோடு அழிக்கப் பார்த்தார்கள்.+அவர்களுடைய தேசத்தைப் பாழாக்கினார்கள்.+

அடிக்குறிப்புகள்

இந்த வசனம் முதன்முதலாக அரமேயிக் மொழியில் எழுதப்பட்டது.
வே.வா., “புரிந்துகொள்ளும் திறனால்.”
வே.வா., “முழங்குகிறது.”
வே.வா., “தண்ணீரை ஆவியாக.”
அல்லது, “மழைக்கு மதகுகளை வைக்கிறார்.”
வே.வா., “எனக்கு முறிவு ஏற்பட்டுவிட்டது.”
வே.வா., “ஆழமான புரிந்துகொள்ளுதல்.”
வே.வா., “திறமை.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா