Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

என்னிடம் வா!

என்னிடம் வா!

டவுன்லோட்:

  • லீட் ஷீட்

  1. 1. சோகத் தீவில் நான்

    யாருமே இன்றி தொலைந்து நின்றிட

    தேவன் என்னை தேடியே

    கைகள் நீட்டியே மீட்டாரே

    என்னுள்ளே ஏதோ பார்த்துதான்

    தன்னிடம் அழைத்தாரே

    (பல்லவி)

    நீ என்னை தேடியே வந்திடு

    என்னிடம் வந்திடு

    நான் தூரமாய் இல்லையே

    உன் அருகில் என்னை பார்

    என்னிடம் வா, கண்ணே!

  2. 2. நாட்கள் ஓடியும்

    வாட்டுதே தினம் அன்று செய்த பாவம் தான்

    நோகும்போது கெஞ்சினேன்

    எல்லாம் மாறவே ஏங்கினேன்

    யெகோவா அன்பாய் சொல்கிறார்:

    “சோகம் ஏன்? என் தங்கமே”

    (பல்லவி)

    நீ என்னை தேடியே வந்திடு

    என்னிடம் வந்திடு

    நான் தூரமாய் இல்லையே

    உன் அருகில் என்னை பார்

    என்னிடம் வா, கண்ணே!

    (பிரிட்ஜ்)

    நான் வேண்டும்போது கேட்கிறார்

    என் காயம் ஆற்றுவார்

    எந்நாளும் தேற்றும் தேவனாய்

    இதோ! என் முன்னாலே

    (பல்லவி)

    நீ என்னை தேடியே வந்திடு

    என்னிடம் வந்திடு

    நான் தூரமாய் இல்லையே

    உன் அருகில் என்னை பார்

    என்னிடம் வா, கண்ணே!