இயேசுவின் வாழ்க்கை ஒரு வரலாறு!
இயேசு கிறிஸ்து கடவுளுடைய மகன், மனிதர்களின் மீட்பர். அவரைப் பற்றி இந்த அருமையான வீடியோ தொடரில் அதிகமாகத் தெரிந்துகொள்ளுங்கள்.
இயேசுவின் வாழ்க்கை ஒரு வரலாறு!—ஒரு பார்வை
இயேசு கிறிஸ்துவைப் பற்றிய இந்த வீடியோ தொடர் சுவிசேஷ பதிவுகளுக்கு உயிர் கொடுக்கும்.
பாகம் 1
உலகத்தின் உண்மையான ஒளி
ஒரு விசேஷ குழந்தையை—இயேசுவை—வளர்க்கும் பொறுப்பு யோசேப்பு-மரியாளுக்கு கிடைக்கிறது.
பாகம் 2
“இவர் என் அன்பு மகன்”
மேசியா வரப்போவதைப் பற்றி யோவான் ஸ்நானகர் அறிவிக்கிறார். இயேசு ஊழியத்தை ஆரம்பிக்கிறார்.
பாகம் 3
“நான்தான் அவர்”
நிக்கொதேமு, சமாரியப் பெண், நாசரேத்தூர் மக்களுக்கு இயேசு போதிக்கிறார். அதற்கு கிடைத்த வரவேற்பும் எதிர்ப்பும்!
பாகம் 4
”இதற்காகத்தான் நான் வந்திருக்கிறேன்“
இயேசு நோயாளிகளைக் குணமாக்குகிறார், பேய்களை துரத்துகிறார், சீஷர்களை உருவாக்குகிறார், 12 அப்போஸ்தலர்களைத் தேர்ந்தெடுக்கிறார்.
பாகம் 5
‘அவர் கற்பித்த விதத்தை பார்த்து அசந்துபோனார்கள்’
ஒரு பெரிய கூட்டத்தை குணமாக்கிய பிறகு, இயேசு ரொம்ப பிரபலமாக மலைப்பிரசங்கத்தைக் கொடுக்கிறார்.
பாகம் 6
”வர வேண்டியவர் நீங்கள்தானா?“
இயேசு ஒரு விதவையின் மகனை உயிரோடு எழுப்புகிறார், எளிமையான உதாரணங்களை சொல்லி போதிக்கிறார், அவர் சொல்வதை கேட்டுக்கொண்டிருந்தவர்களின் மனதில் இருப்பதை வெட்டவெளிச்சமாக்குகிறார்.
இயேசுவின் வாழ்க்கை ஒரு வரலாறு!—வீடியோ தொடரின் ட்ரெய்லர்
இந்த சுவாரஸ்யமான வீடியோ தொடர், இயேசுவைப் பற்றிய பைபிள் பதிவுகளை உங்கள் கண்முன் கொண்டு வந்து நிறுத்தும்.

