பாகம் 1
உலகத்தின் உண்மையான ஒளி
(வீடியோ நேரம்: 1:11:01)
ஒரு விசேஷ குழந்தையை—இயேசுவை—வளர்க்கும் பொறுப்பு யோசேப்பு-மரியாளுக்கு கிடைக்கிறது. இந்தப் பாகத்தில் கீழே இருக்கும் பதிவுகளின் காட்சிகளை பார்க்கலாம்:
வார்த்தை என்பவர் ஆரம்பத்தில் கடவுளோடு இருந்தார், தெய்வீகத்தன்மை உள்ளவராக இருந்தார் (யோவான் 1:1, 2)
அந்த வார்த்தையைப் பயன்படுத்தி கடவுள் மற்ற எல்லாவற்றையும் படைத்தார் (யோவான் 1:3)
அந்த வார்த்தை மூலமாக வாழ்வும் ஒளியும் உண்டானது (யோவான் 1:4)
இருள் ஒளியை அடக்கி ஆளவில்லை (யோவான் 1:5)
தன்னுடைய பதிவை எழுதுவதற்கான காரணத்தையும் சூழ்நிலையையும் லூக்கா விவரிக்கிறார், தெயோப்பிலுவுக்கு எழுதுகிறார் (லூக்கா 1:1-4)
யோவான் ஸ்நானகர் பிறக்கப்போவதைப் பற்றி காபிரியேல் தூதர் சொல்கிறார் (லூக்கா 1:5-25)
இயேசு பிறக்கப்போவதைப் பற்றி காபிரியேல் தூதர் சொல்கிறார் (லூக்கா 1:26-38)
மரியாள் புறப்பட்டுப் போய், தன்னுடைய சொந்தக்காரப் பெண் எலிசபெத்தைச் சந்திக்கிறாள் (லூக்கா 1:39-45)
மரியாள் யெகோவாவைப் புகழ்கிறாள் (லூக்கா 1:46-56)
யோவான் பிறக்கிறார், அவருக்குப் பெயர் வைக்கப்படுகிறது (லூக்கா 1:57-66)
சகரியாவின் தீர்க்கதரிசனம் (லூக்கா 1:67-80)
கடவுளுடைய சக்தியால் மரியாள் கர்ப்பமாகிறாள்; கடவுள் சொல்கிறபடி யோசேப்பு செய்கிறார் (மத்தேயு 1:18-25)
யோசேப்பும் மரியாளும் பெத்லகேமுக்கு போகிறார்கள்; இயேசு பிறக்கிறார் (லூக்கா 2:1-7)
வயல்வெளியில் இருந்த மேய்ப்பர்கள்முன் தேவதூதர்கள் தோன்றுகிறார்கள் (லூக்கா 2:8-14)
மேய்ப்பர்கள் தீவனத் தொட்டி இருந்த இடத்துக்குப் போகிறார்கள் (லூக்கா 2:15-20)
யெகோவாவின் சன்னிதியில் காட்டுவதற்காக இயேசுவை ஆலயத்துக்குக் கொண்டுவருகிறார்கள் (லூக்கா 2:21-24)
கிறிஸ்துவைப் பார்க்கும் பெரிய ஆசீர்வாதம் சிமியோனுக்குக் கிடைக்கிறது (லூக்கா 2:25-35)
பிள்ளையைப் பற்றி அன்னாள் பேசுகிறார் (லூக்கா 2:36-38)
ஜோதிடர்கள் வருகிறார்கள்; ஏரோதுவின் கொலைத் திட்டம் (மத்தேயு 2:1-12)
யோசேப்பு மரியாளையும் இயேசுவையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்கு ஓடிப்போகிறார் (மத்தேயு 2:13-15)
பெத்லகேமிலும் அதைச் சுற்றியுள்ள எல்லா இடங்களிலும் இருந்த ஆண் குழந்தைகளை ஏரோது கொலை செய்கிறான் (மத்தேயு 2:16-18)
இயேசுவின் குடும்பம் நாசரேத்தில் குடியேறுகிறார்கள் (மத்தேயு 2:19-23; லூக்கா 2:39, 40)
ஆலயத்தில் 12 வயது இயேசு (லூக்கா 2:41-50)
இயேசு தன் பெற்றோரோடு நாசரேத்துக்குத் திரும்பிப் போகிறார் (லூக்கா 2:51, 52)
உண்மையான ஒளி இந்த உலகத்துக்குச் சீக்கிரத்தில் வரவிருந்தார் (யோவான் 1:9)

