Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

சிந்திக்க தினம் ஒரு வசனம் சிறுபுத்தகத்திலிருந்து நன்மை அடைகிறீர்களா?

சிந்திக்க தினம் ஒரு வசனம் சிறுபுத்தகத்திலிருந்து நன்மை அடைகிறீர்களா?

அந்தந்த நாளுக்கான தினவசனத்தையும் அதற்கான குறிப்புகளையும், சிந்திக்க தினம் ஒரு வசனம் சிறுபுத்தகத்திலிருந்து வாசிக்கிறீர்களா? யெகோவாவிடம் நெருங்கி போவதற்காக ஒவ்வொரு நாளும் நீங்கள் செய்யும் விஷயங்களில் இதுவும் ஒன்றா? அப்படி இல்லையென்றால், ஏன் இதையும் சேர்த்துக்கொள்ளக்கூடாது? நிறைய பேர் தினவசனத்தைக் காலையில் சிந்திப்பதால், படித்தவற்றை அவர்களால் நாள் முழுவதும் யோசித்துப்பார்க்க முடிகிறது. (யோசு 1:8; சங் 119:97) தினவசனத்திலிருந்து நீங்கள் எப்படி இன்னும் ஆழமான விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம்? தினவசனத்தின் சூழமைவை தெரிந்துகொள்ள அந்த வசனத்துக்கு முன்பும் பின்பும் உள்ள வசனங்களை வாசியுங்கள். அந்த வசனத்தில் உள்ள நியமத்துக்குப் பொருந்தும் ஏதாவதொரு பைபிள் பதிவை யோசித்துப் பாருங்கள். பிறகு, கற்றுக்கொண்ட நியமத்தை உங்கள் வாழ்க்கையில் கடைப்பிடியுங்கள். கடவுளுடைய வார்த்தையின் அடிப்படையில் நீங்கள் தீர்மானங்கள் எடுக்கும்போது, அது சரியான பாதையில் செல்ல உங்களுக்கு உதவும், அருமையான பலன்களையும் கொடுக்கும்.​—சங் 119:105.

உலகம் முழுவதும் உள்ள பெத்தேல் குடும்பத்தினர் தினவசனத்தைக் காலையில் சிந்திக்கிறார்கள். இதுபோன்ற நிறைய காலை வழிபாடு நிகழ்ச்சிகள் JW பிராட்காஸ்டிங்®-ல் வீடியோக்கள் > நிகழ்ச்சிகள் என்ற பகுதியில் இருக்கின்றன. இந்த நிகழ்ச்சிகளில் ஒன்றை நீங்கள் கடைசியாக எப்போது பார்த்தீர்கள்? ஒருவேளை அவற்றில் சில உங்களுக்காகவே கொடுக்கப்பட்டதுபோல் இருக்கலாம். உதாரணத்துக்கு, நல்ல தீர்மானங்களை எடுக்க லோத்துவின் பதிவு உங்களுக்கு எப்படி உதவும்?

இந்த உலகத்தின் மீது அன்பு வைக்காதீர்கள் (1யோ 2:15) என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு, இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:

  • இந்தக் காலை வழிபாடு நிகழ்ச்சி, எந்தப் பைபிள் நியமத்தின் அடிப்படையில் இருந்தது?

  • இந்த உலகத்தின் மீதோ, இந்த உலகத்தில் இருக்கிற காரியங்களின் மீதோ அன்பு வைப்பதால் வரும் ஆபத்துகளைப் பற்றி லோத்துவின் பதிவிலிருந்து என்ன தெரிந்துகொண்டீர்கள்?—ஆதி 13:12; 14:12; 19:3, 12, 13, 24-26

  • இந்த உலகத்தையும் அதில் இருக்கிற காரியங்களையும் நேசிக்காமல், யெகோவாவையே நேசிக்கிறோம் என்பதை எப்படிக் காட்டலாம்?

யெகோவாவுடைய வார்த்தையை நான் பொக்கிஷமாக நினைக்கிறேன் என்பதை நாள் முழுவதும் எப்படிக் காட்டலாம்?