யோசுவா 1:1-18

1  யெகோவாவின் ஊழியரான மோசே இறந்த பின்பு, மோசேயின் உதவியாளரும்+ நூனின் மகனுமாகிய யோசுவாவிடம்*+ யெகோவா,  “என் ஊழியன் மோசே இறந்துவிட்டான்.+ இப்போது நீயும் இஸ்ரவேலர்கள் எல்லாரும் புறப்பட்டு யோர்தான் ஆற்றைக் கடந்து, நான் கொடுக்கப்போகிற தேசத்துக்குப் போங்கள்.+  மோசேக்கு நான் வாக்குறுதி கொடுத்தபடியே, உங்கள் காலடி படுகிற இடத்தையெல்லாம் உங்களுக்குத் தருவேன்.+  வனாந்தரம்முதல் லீபனோன் வரைக்கும், பெரிய ஆறான யூப்ரடிஸ்* வரைக்கும், அதாவது ஏத்தியர்களின் தேசம் முழுவதும்,+ மேற்கே பெருங்கடல்* வரைக்கும் உங்களுடைய எல்லை இருக்கும்.+  நீ உயிரோடிருக்கும் நாள்வரை யாரும் உன்னை எதிர்த்துநிற்க முடியாது.+ நான் மோசேயுடன் இருந்தது போலவே உன்னோடும் இருப்பேன்.+ உன்னைவிட்டு விலகவும் மாட்டேன், உன்னைக் கைவிடவும் மாட்டேன்.+  நீ தைரியமாகவும் உறுதியாகவும் இரு.+ உங்கள் முன்னோர்களுக்கு நான் வாக்குக் கொடுத்த தேசத்தைச்+ சொந்தமாக்கிக்கொள்ள இவர்களை நீதான் வழிநடத்திக்கொண்டு போவாய்.  தைரியமாகவும் ரொம்பவே உறுதியாகவும் இரு. என் ஊழியன் மோசே உனக்குக் கொடுத்த திருச்சட்டம் முழுவதையும் கவனமாகக் கடைப்பிடி. அதைவிட்டு வலது பக்கமோ இடது பக்கமோ விலகிப் போகாதே,+ அப்போதுதான் நீ எல்லாவற்றையும் ஞானமாகச் செய்வாய்.+  இந்தத் திருச்சட்ட புத்தகத்தில் உள்ள விஷயங்களைப் பற்றி மற்றவர்களிடம் சொல்லிக்கொண்டே இரு.+ அதில் எழுதியிருக்கிற எல்லாவற்றையும் கவனமாய்க் கடைப்பிடிப்பதற்காக ராத்திரியும் பகலும் தாழ்ந்த குரலில் அதை வாசி.*+ அப்போதுதான் வாழ்க்கையில் உனக்கு வெற்றி கிடைக்கும், நீ ஞானமாகவும் நடப்பாய்.+  நான் ஏற்கெனவே சொன்னபடி, தைரியமாகவும் உறுதியாகவும் இரு. பயப்படாதே, திகிலடையாதே. நீ போகும் இடமெல்லாம் உன் கடவுளாகிய யெகோவா உன்னோடு இருப்பார்”+ என்று சொன்னார். 10  பின்பு ஜனங்களுடைய அதிகாரிகளிடம் யோசுவா, 11  “நீங்கள் முகாம் முழுவதும் இருக்கிற ஜனங்களிடம் போய், ‘இன்னும் மூன்று நாட்களில் யோர்தானைக் கடந்து, உங்கள் கடவுளாகிய யெகோவா தருகிற தேசத்தைச் சொந்தமாக்கப்போகிறீர்கள்.+ அதனால், உணவுப் பொருள்களைத் தயாராக எடுத்து வையுங்கள்’ என்று சொல்லுங்கள்” என்றார். 12  பின்பு யோசுவா, ரூபன் கோத்திரத்தாரிடமும் காத் கோத்திரத்தாரிடமும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரிடமும், 13  “யெகோவாவின் ஊழியரான மோசே உங்களிடம்,+ ‘உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களுக்கு நிம்மதியை* தந்திருக்கிறார். அவர் இந்தத் தேசத்தை உங்களுக்குக் கொடுத்திருக்கிறார். 14  யோர்தானுக்குக் கிழக்கே மோசே உங்களுக்குக் கொடுத்த இடத்திலேயே உங்கள் மனைவிகளும் பிள்ளைகளும் கால்நடைகளும் தங்கியிருக்கட்டும்.+ ஆனால், உங்களில் பலம்படைத்த வீரர்கள் எல்லாரும்+ உங்கள் சகோதரர்களுக்கு முன்னால் படைபோல் அணிவகுத்துப் போய் யோர்தானைக் கடக்க வேண்டும்.+ 15  யெகோவா உங்களுக்கு நிம்மதி தந்தது போல உங்கள் சகோதரர்களுக்கும் நிம்மதி தரும்வரை, அதாவது உங்கள் கடவுளாகிய யெகோவா தருகிற தேசத்தை அவர்களும் சொந்தமாக்கும்வரை, நீங்கள் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். பின்பு, யெகோவாவின் ஊழியரான மோசே யோர்தானுக்குக் கிழக்கே உங்களுக்குக் கொடுத்த தேசத்துக்குத் திரும்பி வந்து அங்கே குடியிருக்கலாம்’ என்று சொன்னதை நினைத்துப் பாருங்கள்”+ என்றார்.+ 16  அப்போது அவர்கள் யோசுவாவிடம், “நீங்கள் கொடுத்த எல்லா கட்டளைகளுக்கும் கீழ்ப்படிவோம், நீங்கள் எங்கே அனுப்பினாலும் போவோம்.+ 17  மோசே சொன்னதையெல்லாம் கேட்டு நடந்ததுபோல் நீங்கள் சொல்வதையும் கேட்டு நடப்போம். உங்கள் கடவுளாகிய யெகோவா மோசேயுடன் இருந்தது போல உங்களுடனும் இருப்பார்.+ 18  யார் உங்களுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாமல் போனாலும் சரி, யார் உங்களுடைய உத்தரவை மீறினாலும் சரி, அவன் கொல்லப்படுவான்.+ யோசுவாவே, நீங்கள் தைரியமாகவும் உறுதியாகவும் இருங்கள்”+ என்று சொன்னார்கள்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “யெஹோஷுவாவிடம்”; இந்தப் பெயரின் அர்த்தம், “யெகோவாவே மீட்பு.”
அதாவது, “ஐப்பிராத்து.”
அதாவது, “மத்தியதரைக் கடல்.”
வே.வா., “ராத்திரியும் பகலும் அதைத் தியானித்துக்கொண்டிரு.”
வே.வா., “ஓய்வை.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா