Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

ஊழியத்தில் திறமைகளை மெருகூட்ட...—சாட்சி கொடுப்பதற்கு வாய்ப்பளிக்கும் விதத்தில் உரையாடலை ஆரம்பியுங்கள்

ஊழியத்தில் திறமைகளை மெருகூட்ட...—சாட்சி கொடுப்பதற்கு வாய்ப்பளிக்கும் விதத்தில் உரையாடலை ஆரம்பியுங்கள்

தானாகவே போய் சமாரியப் பெண்ணிடம் பேசியதன் மூலம், அந்தப் பெண்ணுக்குச் சந்தர்ப்ப சாட்சி கொடுக்க இயேசுவால் முடிந்தது. முன்பின் தெரியாதவர்களுடன் பேசுவதில் நாம் எப்படி இன்னும் முன்னேறலாம்?

  • மக்களிடம் நட்பு ரீதியில் பேசுங்கள். இயேசு களைப்பாக இருந்தபோதிலும், குடிக்கத் தண்ணீர் தரும்படி கேட்டு உரையாடலை ஆரம்பித்தார். நீங்கள் எப்படி இதைச் செய்யலாம்? முதலில் புன்னகை செய்யுங்கள். பிறகு, சீதோஷ்ண நிலையைப் பற்றி அல்லது தற்போதைய சம்பவங்களைப் பற்றி பேசலாம். உரையாடலை ஆரம்பிப்பதுதான் உங்களுடைய குறிக்கோள் என்பதை மறந்துவிடாதீர்கள். அதனால், ஒரு நபருக்கு எதில் ஆர்வம் இருக்கிறதோ, அதைப் பற்றிப் பேசுங்கள். ஒருவேளை அவர் சரியாகப் பிரதிபலிக்கவில்லை என்றால் என்ன செய்வது? ஒன்றும் கெட்டுவிடவில்லை; இன்னொருவரிடம் பேசுங்கள். தைரியத்தைத் தரும்படி யெகோவாவிடம் கேளுங்கள்.—நெ 2:4; அப் 4:29.

  • நல்ல செய்தியைப் பற்றிச் சொல்வதற்கான சந்தர்ப்பத்தைப் பார்த்துக்கொண்டே இருங்கள்; அதற்காக ரொம்ப அவசரப்படாதீர்கள். தொடர்ந்து சகஜமாகப் பேசுங்கள். நீங்கள் வலுக்கட்டாயமாக எதையாவது சொல்லிவிட்டால், அந்த நபர் சங்கோஜப்பட்டு பேசுவதை நிறுத்திக்கொள்ளலாம். ஒருவேளை, சாட்சி கொடுப்பதற்கு முன்பே உரையாடல் நின்றுவிட்டால், சோர்ந்துவிடாதீர்கள். நல்ல செய்தியை அறிமுகப்படுத்துவது உங்களுக்குக் கஷ்டமாக இருந்தால், சாட்சி கொடுக்கும் நோக்கம் இல்லாமலேயே வெறுமனே உரையாடலை ஆரம்பிப்பதற்குப் பழகுங்கள். [வீடியோ 1-ஐ காட்டிவிட்டு கலந்துபேசுங்கள்.]

  • உங்கள் நம்பிக்கைகளைப் பற்றி உள்ளப்பூர்வமாகச் சொல்வதன் மூலம் சாட்சி கொடுப்பதற்கான சந்தர்ப்பத்தை உருவாக்குங்கள். அப்போது, இன்னும் அதிகமாகத் தெரிந்துகொள்ள அந்த நபர் உங்களிடம் கேள்விகளைக் கேட்கலாம். ஆர்வத்தைத் தூண்டுகிற விஷயங்களை இயேசு பேசினார்; அதனால், அந்தச் சமாரியப் பெண் அவரிடம் நிறைய கேள்விகளைக் கேட்டாள். அந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்வதன் மூலமே நல்ல செய்தியை இயேசு அந்தப் பெண்ணிடம் சொல்லிவிட்டார். [வீடியோ 2-ஐ காட்டிவிட்டு கலந்துபேசுங்கள். பிறகு, வீடியோ 3-ஐ காட்டிவிட்டு கலந்துபேசுங்கள்.]