Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

5. பூமி நாசமாக்கப்படுவது

5. பூமி நாசமாக்கப்படுவது

5. பூமி நாசமாக்கப்படுவது

‘பூமியை நாசமாக்குகிறவர்களை [கடவுள்] நாசமாக்குவார்.’​—வெளிப்படுத்துதல் 11:18.

● நைஜீரியாவில் கப்பொர் என்ற இடத்தை சேர்ந்த பிரீ, பனையிலிருந்து கள் எடுக்கும் வேலையைச் செய்துகொண்டிருந்தார். நைஜர் டெல்டா பகுதியில் பயங்கரமான எண்ணெய் கசிவு ஏற்பட்டதால் அவருடைய தொழில் ரொம்பவே பாதிக்கப்பட்டது. “மீன் எல்லாம் சாகுது; எங்களோட தோல் பாதிக்கப்படுது; ஆறு, குளம் எல்லாம் பாழாப்போகுது. என்னோட பிழைப்புக்கே வழியில்லாம போயிடிச்சு” என்று சொல்கிறார் பிரீ.

உண்மைத் தகவல்கள் எதைக் காட்டுகின்றன? ஒவ்வொரு வருஷமும் 65 லட்சம் டன் கழிவுப்பொருள்கள், உலகப் பெருங்கடல்களில் போய்ச் சேருவதாக சில நிபுணர்கள் சொல்கிறார்கள். அதிலிருக்கிற கிட்டத்தட்ட 50 சதவீத பிளாஸ்டிக் கழிவுகள் மக்கிப் போவதற்கு நூற்றுக்கணக்கான வருஷங்கள் ஆகும். மனிதர்கள் பூமியை மாசுபடுத்துவது மட்டுமல்லாமல், இயற்கை வளங்களைத் திடுக்கிட வைக்கும் அளவுக்கு அழித்துக்கொண்டிருக்கிறார்கள். மக்கள் ஒரு வருஷத்தில் பயன்படுத்துகிற இயற்கை வளங்களைத் திரும்பவும் இந்தப் பூமி உருவாக்குவதற்கு ஒரு வருஷமும் ஐந்து மாதங்களும் ஆகும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. “மக்கள்தொகையும், இயற்கை வளங்களை மக்கள் பயன்படுத்துகிற அளவும் அதிகமாகிக்கொண்டே இருந்தால், 2035-க்குள் நமக்கு இரண்டு பூமிகள் தேவைப்படும்” என்று சிட்னி மார்னிங் ஹெரால்ட் என்ற ஆஸ்திரேலிய செய்தித்தாள் சொல்கிறது.

பொதுவாகத் தெரிவிக்கப்படும் ஆட்சேபணை என்ன? மனிதர்கள் புத்திசாலிகள். அதனால், எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு கண்டுபிடித்து இந்தப் பூமியை அவர்களால் காப்பாற்ற முடியும்.

இந்த ஆட்சேபணை நியாயமானதா? சுற்றுச்சூழல் சம்பந்தமாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு நிறைய தனிநபர்களும் அமைப்புகளும் கடினமாக உழைக்கிறார்கள். ஆனாலும், பூமி மாசுபடுவது நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டுதான் இருக்கிறது.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? கடவுள் ஏற்கெனவே வாக்குக் கொடுத்திருப்பதுபோல், நம் பூமி நாசமடையாமல் அதைப் பாதுகாப்பதற்கு அவர் தலையிடுவது அவசியமா?

இந்த ஐந்து தீர்க்கதரிசனங்களைத் தவிர, கடைசி நாட்களில் நடக்கும் ஒரு நல்ல விஷயத்தைப் பற்றியும் பைபிள் ஏற்கெனவே சொல்லியிருக்கிறது. அதைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

[பக்கம் 8-ன் சிறு குறிப்பு]

“ஒரு அழகான பூஞ்சோலையிலிருந்து, நச்சுக் கலந்த ஒரு குப்பைத் தொட்டிக்குள் போனதுபோல் நான் உணர்கிறேன்.”—அமெரிக்காவிலுள்ள மெக்சிகோ வளைகுடாவில் 2010-ல் ஏற்பட்ட எண்ணெய் கசிவால் வந்த பாதிப்புகளைப் பற்றி அங்கு குடியிருக்கிற எரின் தம்பர் சொன்னது.

[பக்கம் 8-ன் பெட்டி]

கடவுள்தான் காரணமா?

இன்று நாம் பார்க்கிற இந்த மோசமான நிலைமைகளைப் பற்றி பைபிள் ஏற்கெனவே சொல்லியிருப்பது உண்மைதான். ஆனால், இதற்கெல்லாம் கடவுள்தான் பொறுப்பு என்று சொல்ல முடியாது. இப்படிப்பட்ட நிலைமைகள் வரும் என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் பைபிளில் இதைப் பதிவு செய்திருக்கிறார்.

[பக்கம் 8-ன் படத்திற்கான நன்றி]

U.S. Coast Guard photo