விழித்தெழு! எண் 1 2025 | அதிகரிக்கும் விலைவாசி​—சமாளிக்க வழி!

விலைவாசி அதிகரிப்பதைப் பார்த்து தலையே சுற்றுகிறதா? வாழ்க்கையை ஓட்ட ரொம்ப நேரம் வேலை செய்ய வேண்டியிருக்கிறதா? நண்பர்களோடும் குடும்பத்தோடும் சந்தோஷமாக இருக்க கையில் நேரமே இல்லையா? அப்படியென்றால், உங்களுக்குத்தான் இந்த விழித்தெழு! இதிலிருக்கும் கட்டுரைகளில், நடைமுறையான ஆலோசனைகள் இருக்கின்றன. விலைவாசி கிடுகிடுவென்று ஏறினாலும், தரமான வாழ்க்கை வாழ அந்த ஆலோசனைகள் உதவும். கவலையையும் குறைக்கும். இந்தப் பத்திரிகையின் கடைசிக் கட்டுரை, எதிர்காலத்தில் காத்திருக்கும் அருமையான வாழ்க்கையைப் பற்றிச் சொல்கிறது. அது உங்களுக்கு நம்பிக்கை கொடுக்கும். அந்த வாழ்க்கை கனவல்ல, நிஜம். படித்துப் பாருங்கள், மனதுக்கு ஆறுதலாக இருக்கும்.

 

எதார்த்தத்தை ஏற்றுக்கொள்வது

அதிகரிக்கும் விலைவாசியைப் பற்றிய எதார்த்தமான மனநிலை, சூழ்நிலையை நல்லபடியாக சமாளிக்க உதவும்.

ஞானமாகச் செலவு செய்வது

பணத்தை ஞானமாகப் பயன்படுத்த உதவும் ஐந்து குறிப்புகளைப் பாருங்கள்.

திருப்தியோடு இருப்பது

கம்மியான பணத்தை வைத்து வாழ்ந்தாலும் சந்தோஷமாக இருப்பது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தாராளமாகக் கொடுப்பது

மற்றவர்களுக்குத் தாராளமாகக் கொடுப்பது பணக் கஷ்டத்தைச் சமாளிக்க உங்களுக்கு எப்படி உதவும்?

நம்பிக்கையோடு இருப்பது

அருமையான எதிர்கால நம்பிக்கையை பைபிள் கொடுக்கிறது. அந்த நம்பிக்கை நிஜமானது. அது இப்போதே உங்களுக்கு ஆறுதல் தரும்.

இன்னும் தெரிந்துகொள்ள

அதிகரிக்கும் விலைவாசியை சமாளிக்க நிறைய பேருக்கு பைபிள் உதவுகிறது. உங்களுக்கும் அது உதவும்.