Skip to content

யெகோவாவின் சாட்சிகள் ஏன் சிலுவையைப் பயன்படுத்துவதில்லை?

யெகோவாவின் சாட்சிகள் ஏன் சிலுவையைப் பயன்படுத்துவதில்லை?

 கிறிஸ்தவர்களுக்கு அடையாளமே சிலுவைதான் என்று நிறைய பேர் நினைக்கிறார்கள். யெகோவாவின் சாட்சிகளாகிய நாங்கள் கிறிஸ்தவர்களாக இருந்தாலும், கடவுளை வணங்குவதற்கு சிலுவையைப் பயன்படுத்துவதில்லை. ஏன்?

 அதற்கு ஒரு காரணம், இயேசு சிலுவையில் அறைந்து கொல்லப்படவில்லை; மரக் கம்பத்தில் அறைந்து கொல்லப்பட்டார் என்றுதான் பைபிள் சொல்கிறது. அதுமட்டுமல்ல, “சிலை வழிபாட்டிலிருந்து விலகி ஓடுங்கள்” என்று கிறிஸ்தவர்களுக்கு பைபிள் கடுமையான எச்சரிப்பு கொடுக்கிறது. வணக்கத்தில் சிலுவையைப் பயன்படுத்தக் கூடாது என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது.—1 கொரிந்தியர் 10:14; 1 யோவான் 5:21.

 “நீங்கள் ஒருவர்மேல் ஒருவர் அன்பு காட்டினால், நீங்கள் என்னுடைய சீஷர்கள் என்று எல்லாரும் தெரிந்துகொள்வார்கள்” என்று இயேசு சொன்னதை யோசித்துப் பாருங்கள். (யோவான் 13:34, 35) இதன் மூலம், தன்னை உண்மையாகப் பின்பற்றுகிறவர்களுடைய அடையாளம் சிலுவையோ வேறு எந்த உருவமோ அல்ல, சுயநலமில்லாத அன்புதான் என்று இயேசு சுட்டிக்காட்டினார்.