பைபிள் கேள்விகளுக்கான பதில்கள்

எந்த விஷயங்களுக்காக நான் ஜெபம் செய்யலாம்?

தமிழ்
எந்த விஷயங்களுக்காக நான் ஜெபம் செய்யலாம்?
https://cms-imgp.jw-cdn.org/img/p/502012525/univ/art/502012525_univ_sqr_xl.jpg
ijwbq கட்டுரை 27

எந்த விஷயங்களுக்காக நான் ஜெபம் செய்யலாம்?

எந்த விஷயங்களுக்காக நான் ஜெபம் செய்யலாம்?

பைபிள் தரும் பதில்

 பைபிளில் கொடுக்கப்பட்டிருக்கிற கடவுளுடைய சட்டதிட்டங்களுக்கு இசைவாக உள்ள எந்தவொரு விஷயத்தைப் பற்றியும் நீங்கள் ஜெபம் செய்யலாம். “கடவுளுடைய விருப்பத்துக்கு ஏற்றபடி நாம் எதைக் கேட்டாலும், அவர் காதுகொடுத்துக் கேட்கிறார்.” (1 யோவான் 5:14) உங்களுடைய மனக்கவலைகளைப் பற்றி ஜெபம் செய்யலாமா? தாராளமாக! “உங்களுடைய இதயத்தில் இருப்பதையெல்லாம் அவர்முன் ஊற்றிவிடுங்கள்” என்று பைபிள் சொல்கிறது.—சங்கீதம் 62:8.

எந்தெந்த விஷயங்களுக்காக ஜெபம் செய்யலாம் என்பதற்கு உதாரணங்கள்

  •   கடவுள்மேல் உள்ள விசுவாசம் அதிகமாவதற்காக.—லூக்கா 17:5.

  •   சரியானதைச் செய்வதற்குப் பரிசுத்த ஆவியின், அதாவது கடவுளுடைய சக்தியின், உதவிக்காக.—லூக்கா 11:13.

  •   பிரச்சினைகளைச் சமாளிப்பதற்காக, கெட்ட ஆசைகளை எதிர்த்துப் போராடுவதற்காக.—பிலிப்பியர் 4:13.

  •   மன நிம்மதி அல்லது மன அமைதிக்காக.—பிலிப்பியர் 4:6, 7.

  •   நல்ல தீர்மானங்களை எடுக்க ஞானத்திற்காக.—யாக்கோபு 1:5.

  •   அன்றாடத் தேவைகளுக்காக.—மத்தேயு 6:11.

  •   பாவங்களுக்கு மன்னிப்பு கேட்பதற்காக.—மத்தேயு 6:12.