Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பிப்ரவரி 1-7

நெகேமியா 1–4

பிப்ரவரி 1-7
  • பாட்டு 126; ஜெபம்

  • ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • உண்மை வணக்கத்துக்காக நெகேமியா எதையும் செய்ய தயாராக இருந்தார்”: (10 நிமி.)

    • [நெகேமியா புத்தகத்துக்கு அறிமுகம் என்ற வீடியோவை காட்டுங்கள்.]

    • நெ 1:11–2:3—உண்மை வணக்கத்துக்காக உழைப்பதில்தான் நெகேமியாவுக்கு சந்தோஷம் கிடைத்தது (w06 2/1 9 ¶7)

    • நெ 4:14—யெகோவாமீது முழு நம்பிக்கை இருந்ததால் நெகேமியா எதிர்ப்புகளை சமாளித்தார் (w06 2/1 10 ¶3)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)

    • நெ 1:1; 2:1—இந்த வசனங்களில் சொல்லப்பட்டுள்ள “இருபதாம் வருஷம்” ஒரே காலப்பகுதியில் இருந்து கணக்கிடப்பட்டதா? (w06 2/1 8 ¶5)

    • நெ 4:17, 18—ஒரே ஒரு கையால் எப்படி கட்டிட வேலையை செய்தார்கள்? (w06 2/1 9 ¶1)

    • நெகேமியா 1 முதல் 4 வரை உள்ள அதிகாரங்களில் இருந்து யெகோவாவைப் பற்றி நான் என்ன கற்றுக்கொண்டேன்?

    • ஊழியத்தில் பயன்படுத்த இந்த அதிகாரங்களில் இருந்து என்ன குறிப்புகளைக் கற்றுக்கொண்டேன்?

  • பைபிள் வாசிப்பு: நெ 3:1-14 (4 நிமிடத்திற்குள்)

ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்

  • இந்த மாதம் ஊழியத்தில் எப்படி பேசலாம்?: (15 நிமி.) T-34 துண்டுப்பிரதியை ஊழியத்தில் கொடுப்பதுபோல் 2 நடிப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள். “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருக்கும் குறிப்புகளைப் பயன்படுத்துங்கள். பிறகு, சிற்றேட்டை ஊழியத்தில் எப்படி கொடுக்கலாம் என்ற வீடியோவை காட்டுங்கள். எல்லா நடிப்பிலும், ஆர்வத்தை தொடர்ந்து வளர்க்க பிரஸ்தாபி என்ன செய்தார் என்று சொல்லுங்கள். ஒவ்வொரு நடிப்பிலிருந்தும் என்ன கற்றுக்கொண்டார்கள் என்று கேளுங்கள். ஊழியத்தில் எப்படி பேச விரும்புகிறார்கள் என்பதை சொந்தமாக தயாரிக்க உற்சாகப்படுத்துங்கள்.

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 103

  • மார்ச், ஏப்ரல் மாதங்களில் துணை பயனியர் ஊழியம் செய்ய இப்போதே திட்டமிடுங்கள்: (15 நிமி.) கலந்து பேசுங்கள். “நினைவுநாள் சமயத்தில் சந்தோஷத்தை அதிகமாக்குங்கள்!” என்ற கட்டுரையில் இருக்கும் முக்கியமான குறிப்புகளை சொல்லுங்கள். (km 2/14 2) இப்போதே திட்டமிடுவது ஏன் முக்கியம் என்பதை சொல்லுங்கள். (நீதி 21:5) நினைவுநாள் சமயத்தில் துணை பயனியர் ஊழியம் செய்த இரண்டு பேரை பேட்டி எடுங்கள். ஊழியம் செய்வதற்கு என்னென்ன தடைகளை சமாளித்தார்கள், அவர்களுக்கு என்ன ஆசீர்வாதங்கள் கிடைத்தது என்று கேளுங்கள்.

  • சபை பைபிள் படிப்பு: பைபிள் கதை 96, 97 (30 நிமி.)

  • முடிவு குறிப்புகள் (3 நிமி.)

  • பாட்டு 99; ஜெபம்