Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள் | ஊழியத்தில் உங்கள் சந்தோஷம் அதிகரிக்க. . .

ஆராய்ச்சிக் கருவிகளைப் பயன்படுத்துங்கள்

ஆராய்ச்சிக் கருவிகளைப் பயன்படுத்துங்கள்

மற்றவர்களுக்குத் திறமையாகச் சொல்லிக்கொடுப்பதற்கு வீடியோக்கள், துண்டுப்பிரதிகள், பத்திரிகைகள், சிற்றேடுகள், புத்தகங்கள், முக்கியமாக பைபிள் என நிறைய கருவிகளை யெகோவா கொடுத்திருக்கிறார். (2தீ 3:16) அதுமட்டுமல்ல, வசனங்களை விளக்கிச் சொல்வதற்கு ஆராய்ச்சிக் கருவிகளையும் கொடுத்திருக்கிறார். அவற்றில், உவாட்ச்டவர் லைப்ரரி, JW லைப்ரரி அப்ளிகேஷன், உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி, யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு ஆகியவை அடங்கும்.

இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி பைபிளை ஆழமாக ஆராய்ச்சி செய்யும்போது உங்களுக்கு உண்மையிலேயே சந்தோஷம் கிடைக்கும். இவற்றையெல்லாம் பயன்படுத்த உங்கள் மாணவருக்கும் சொல்லிக்கொடுங்கள். அவர்களுடைய மனதில் இருக்கும் கேள்விகளுக்கு அவர்களே பதில் கண்டுபிடிக்கும்போது சந்தோஷப்படுவார்கள்.

சீஷராக்கும் வேலையில் சந்தோஷத்தைக் காண யெகோவாவின் உதவியை ஏற்றுக்கொள்ளுங்கள்ஆராய்ச்சிக் கருவிகள்  என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:

  • படைப்பைப் பற்றி ஜேட் என்ன நினைத்தாள்?

  • எதைப் பயன்படுத்தி நீட்டா ஆராய்ச்சி செய்தாள்?

  • பைபிளை ஆராய்ச்சி செய்து படிக்கும்போதும் தெரிந்த விஷயங்களை மற்றவர்களிடம் சொல்லும்போதும் நமக்குச் சந்தோஷம் கிடைக்கும்

    ஜேடுக்கு பொருத்தமான தகவல்களை நீட்டா எப்படித் தேர்ந்தெடுத்தாள்?

  • ஆராய்ச்சி செய்தது நீட்டாவுக்கு எப்படி இருந்தது?