Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளில் இருக்கும் புதையல்கள் | யோபு 33-37

உண்மையான நண்பர் பலப்படுத்தும் விதத்தில் ஆலோசனை கொடுப்பார்

உண்மையான நண்பர் பலப்படுத்தும் விதத்தில் ஆலோசனை கொடுப்பார்

எலிப்பாஸ், பில்தாத், சோப்பார் பேசியது போல் எலிகூ பேசவில்லை. அவர் சொன்ன விஷயங்களும் யோபுவிடம் நடந்துகொண்ட விதமும் அந்த மூன்று பேரை விட ரொம்பவே வித்தியாசமாக இருந்து. எலிகூ ஒரு உண்மையான நண்பராக இருந்தார். பலப்படுத்தும் விதத்தில் ஆலோசனை கொடுத்தார்.

ஆலோசனை கொடுப்பவர் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?

எலிகூவைப் போல் நடந்துகொள்ளுங்கள்

32:4-7, 11, 12; 33:1

 

  • பொறுமையாக இருக்க வேண்டும்

  • காதுகொடுத்து கேட்க வேண்டும்

  • மரியாதை காட்ட வேண்டும்

 
  • வயதில் மூத்தவர்கள் பேசி முடிக்கும்வரை எலிகூ பொறுமையாக காத்திருந்தார்

  • ஆலோசனை கொடுப்பதற்கு முன்பு மற்றவர்கள் பேசிய விஷயங்களை காதுகொடுத்து கேட்டார்

  • ஒரு நண்பரைப் போல் யோபுவிடம் பேசினார். பேசும்போது அவருடைய பெயரைப் பயன்படுத்தினார்

 

33:6, 7, 32

 

  • மனத்தாழ்மையோடு நடக்க வேண்டும்

  • நண்பரைப் போல் நடந்துகொள்ள வேண்டும்

  • மற்றவர்களுடைய கஷ்டத்தை புரிந்துகொள்ள வேண்டும்

 
  • தானும் தப்பு செய்யும் இயல்புடையவர் என்பதை எலிகூ தாழ்மையாக ஒத்துக்கொண்டார். அன்பாகவும் நடந்துகொண்டார்

  • யோபுவுடைய கஷ்டத்தைப் புரிந்துகொண்டார்

 

33:24, 25; 35:2, 5

 

  • யோசித்து செயல்பட வேண்டும்

  • அன்பாக இருக்க வேண்டும்

  • கடவுள் பயம் உள்ளவராக இருக்க வேண்டும்

 
  • யோபு யோசிக்காமல் வார்த்தைகளை கொட்டிவிட்டார் என்பதை அன்பாக புரியவைத்தார்

  • யோபுவை விட கடவுள்தான் நல்லவர் என்பதை புரியவைத்தார்

  • எலிகூ கொடுத்த ஆலோசனை யோபுவுக்கு ரொம்ப பிரயோஜனமாக இருந்தது. அதற்குப் பின்பு யெகோவா கொடுத்த ஆலோசனைகளை ஏற்றுக்கொள்ள அது யோபுவுக்கு உதவியாக இருந்தது