Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அறிமுகம்

அறிமுகம்

வாழ்க்கைக்கு வழிகாட்டும் வசனங்கள் என்ற இந்தப் புத்தகம், வாழ்க்கையில் வரும் சவால்களைச் சமாளிக்க தேவைப்படும் பைபிள் வசனங்களையும் பதிவுகளையும் சட்டென்று கண்டுபிடிக்க உங்களுக்கு உதவும். அதோடு, மற்றவர்களைப் பலப்படுத்தவும், யெகோவாவுக்குப் பிடித்த தீர்மானங்களை எடுக்க அவர்களுக்கு உதவி செய்யவும் தேவைப்படும் பைபிள் பதிவுகளைக்கூடக் கண்டுபிடிக்க உங்களுக்கு உதவும். இந்தப் புத்தகத்தைப் பயன்படுத்துவது சுலபம். முதலில், உங்களுக்குத் தேவையான தலைப்பைத் தேர்ந்தெடுங்கள். ஒவ்வொரு தலைப்பின் கீழும் சில கேள்விகளும் பைபிள் பதிவுகளைப் பற்றிய சுருக்கமான குறிப்புகளும் இருக்கும். (“ இந்தப் புத்தகத்தைப் பயன்படுத்துவது எப்படி?” என்ற பெட்டியைப் பாருங்கள்.) அவற்றை வைத்து, உங்களுக்கும் மற்றவர்களுக்கும் தேவையான ஆலோசனையை... ஆறுதலை... உதவியை... உற்சாகத்தை... தரும் நிறைய வசனங்களை உங்களால் கண்டுபிடிக்க முடியும்.

ஒரு தலைப்போடு சம்பந்தப்பட்ட எல்லா வசனங்களுமே இந்தப் புத்தகத்தில் இருக்காது. ஆனாலும், உங்களுடைய ஆராய்ச்சியை ஆரம்பிப்பதற்கு இது ரொம்பவே உதவியாக இருக்கும். (நீதி 2:1-6) ஆழமாக ஆராய்ச்சி செய்து புதையல்களைத் தோண்டி எடுப்பதற்கு புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளில் இருக்கும் இணைவசனங்களைப் பயன்படுத்துங்கள்; ஆராய்ச்சிக் குறிப்புகள் இருந்தால் அவற்றையும் பயன்படுத்துங்கள். ஒரு வசனத்தை இன்னும் நன்றாகப் புரிந்துகொள்ள யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேட்டை பயன்படுத்துங்கள். அந்த வசனத்தை விளக்கும் நிறைய பிரசுரங்கள் அங்கே கொடுக்கப்பட்டிருக்கும்; புதிய விளக்கங்களைத் தெரிந்துகொள்ள சமீபத்தில் வந்த பிரசுரங்களைப் பாருங்கள்.

வாழ்க்கைக்கு வழிகாட்டும் வசனங்கள் என்ற இந்தப் புத்தகம், பைபிளில் புதைந்திருக்கும் பொக்கிஷங்களான ஞானத்தையும் அறிவையும் புரிந்துகொள்ளுதலையும் கண்டுபிடிக்க உங்களுக்கு உதவும். இந்தப் புத்தகத்தைப் பயன்படுத்தும்போது, “கடவுளுடைய வார்த்தைக்கு உயிர் இருக்கிறது, வல்லமை இருக்கிறது” என்பதில் உங்களுக்கு இருக்கும் நம்பிக்கை அதிகமாகும்.—எபி 4:12.