Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவின் சாட்சிகளது நவீன நாளைய செயல்கள்

யெகோவாவின் சாட்சிகளது நவீன நாளைய செயல்கள்

யெகோவாவின் சாட்சிகளது நவீன நாளைய செயல்கள்

ரஷ்யா

ரஷ்யாவிலுள்ள யெகோவாவின் சாட்சிகளின் கதை விசுவாசத்திற்கும் தைரியத்திற்கும் சிறந்ததோர் எடுத்துக்காட்டு. ஈவிரக்கமற்ற கொடூரமான துன்புறுத்தலின் மத்தியிலும் கடவுள்மீது அசைக்க முடியாத பற்றைக் காட்டியவர்களின் பதிவு இது. நாடுகடத்தப்படுதல், சிறைவாசம், கட்டாய உழைப்பு என எவற்றாலும் சாட்சிகளின் ஊழியத்தை நிறுத்தவோ அவர்களுடைய உறுதியைக் குலைக்கவோ முடியவில்லை.

இது சோகத்தில் ஆழ்த்தும் ஒரு கதை அல்ல. யெகோவாமீது விசுவாசம் வைத்தவர்கள் துன்புறுத்தலை எதிர்பார்த்தார்கள். தங்களுக்கு ஏற்பட்ட கதியை நினைத்து அவர்கள் பரிதாபப்பட்டுக் கொண்டிருக்கவில்லை. மாறாக, அந்தக் கஷ்டங்களையெல்லாம் கடவுள்மீது தங்களுக்கு இருக்கும் பற்றை நிரூபிப்பதற்கான வாய்ப்பாகக் கருதினார்கள். ஒரு சகோதரர் சொல்வதாவது: “எங்களுக்கு விதித்த தண்டனையை வாசித்தபோது, என்னிடம் பைபிளைப் படித்தவர்கள் யாருமே பயப்படவில்லை. அதைப் பார்த்ததும் எனக்கு ஒரே சந்தோஷம்! அவர்கள் நான்கு பேருக்கும் 25 ஆண்டுகளுக்கு கடின உழைப்பு முகாமில் வேலை செய்யும்படியான தண்டனை விதிக்கப்பட்டது. எனக்கு அதைவிட கடுமையான தண்டனை விதிக்கப்பட்டது . . . அந்த நீதிமன்ற அறையைவிட்டு வெளியே வந்ததும் யெகோவா எங்களுக்குப் பக்கபலமாய் இருந்ததற்காக நாங்கள் சற்றுநேரம் நின்று அவருக்கு நன்றி சொன்னோம். நாங்கள் ஏன் சந்தோஷமாய் இருக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ள முடியாமல் காவலாளிகள் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள்.”

கற்களில் சேர்த்து கட்டப்பட்ட கடிதங்கள் சிறையின் கம்பி வேலிக்கு அப்பால் வீசப்பட்டுக் கிடந்தன; அவற்றைப் படித்து ஒரு சிறுமி சத்தியத்தை எவ்வாறு கண்டுபிடித்தாள் என்பதைப் பற்றியும் வாசித்துப் பாருங்கள். சிறைவாசிகள் கடவுளுடன் உள்ள தங்கள் பந்தத்தை எப்படிப் பலமாக வைத்துக் கொண்டார்கள் என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள். சாட்சிகளாயிருந்த பெற்றோர் தங்களுடைய மகளின் காதை கிழித்துவிட்டதாக பொய்க் குற்றம்சாட்டப்பட்டபோது என்ன நடந்ததென பாருங்கள்.

பல ஆண்டுகளுக்கு நீடித்திருந்த தடையுத்தரவு இக்கதையின் ஒருபகுதி மட்டுமே. பரந்துவிரிந்திருக்கும் இத்தேசம் முழுவதிலும் கடந்த 20 ஆண்டுகளில் சாட்சிகளின் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்திருக்கிறது. மலைக்கவைக்கும் இந்த அதிகரிப்பின் காரணமாக, என்னென்ன புதிய பிரச்சினைகளைச் சகோதரர்கள் சந்தித்தார்கள், அவற்றை எப்படி மேற்கொண்டார்கள் என்பதையும் வாசித்துப் பாருங்கள். முதல்முறையாக, நம் இயர்புக்கில் ஒரேவொரு தேசத்தை அதாவது ரஷ்யாவைப் பற்றிய சரித்திரத்தை முழுக்கமுழுக்க எழுவதில் எங்களுக்குப் பெரும் மகிழ்ச்சி.