Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 1

ரகசியம் தெரிந்துகொள்ள ஆசையா?

ரகசியம் தெரிந்துகொள்ள ஆசையா?

யாராவது உன் காதுல ரகசியம் சொல்லியிருக்காங்களா?— * பைபிள்லகூட ஒரு ரகசியம் இருக்கு. அதுதான் “பரிசுத்த ரகசியம்.” யாருக்குமே அதை பத்தி தெரியாது. அதனாலதான் அது ரகசியம். கடவுளே அந்த ரகசியத்தைச் சொன்னார். அதனாலதான் அது பரிசுத்த ரகசியம். தேவதூதர்களுக்கு அதைத் தெரிஞ்சிக்க ரொம்ப ஆசை. உனக்கும் அதைத் தெரிஞ்சிக்க ஆசையா?—

தேவதூதர்கள் எதைத் தெரிஞ்சுக்க ஆசைப்பட்டாங்க?

ரொம்ப வருஷத்துக்கு முன்னால, கடவுள் ஒரு ஆணையும் பெண்ணையும் படைச்சார். அவங்க பேரு ஆதாம், ஏவாள். அவங்களை ஒரு அழகான தோட்டத்தில குடிவைச்சார். அதுதான் ஏதேன் தோட்டம். ஆதாமும் ஏவாளும் கடவுள் பேச்சைக் கேட்டிருந்தா, இந்த முழு பூமியும் ஏதேன் மாதிரி அழகான தோட்டமா மாறியிருக்கும். ஆதாம், ஏவாள், அவங்களோட பிள்ளைங்க எல்லாரும் சாகாம இருந்திருப்பாங்க. ஆனா, ஆதாமும் ஏவாளும் கடவுள் பேச்சை கேட்டாங்களா?—

கடவுள் பேச்சை ஆதாம், ஏவாள் கேட்கல. அதனாலதான், இப்போ இந்தப் பூமி ஒரு தோட்டமா இல்லை. மறுபடியும் கடவுள் இந்தப் பூமியை அழகா மாத்துவார். அப்போ எல்லாரும் சந்தோஷமா இருப்பாங்க. யாருமே சாக மாட்டாங்க. கடவுள் இதை எப்படிச் செய்வார்? இதை பத்தி யாருக்கும் தெரியாம, ரொம்ப நாள் ரகசியமாவே இருந்தது.

இயேசு இந்தப் பூமிக்கு வந்தப்போ, அந்த ரகசியத்தை பத்தி நிறைய சொன்னார். ‘கடவுளோட ஆட்சி வரும். அப்போ இந்தப் பூமி மறுபடியும் பூந்தோட்டமா மாறும்’னு சொன்னார். அதனால, கடவுளோட ஆட்சி வரணும்னு எல்லாரையும் ஜெபம் பண்ண சொன்னார்.

இப்போ அந்த ரகசியம் என்னனு தெரிஞ்சுடுச்சா?— யெகோவா பேச்சைக் கேட்கிறவங்க மட்டும்தான் அந்த அழகான பூமியில இருப்பாங்க. யெகோவா பேச்சைக் கேட்டு நடந்த நிறைய பேரைப் பத்தி பைபிள்ல இருக்கு. உனக்கு அவங்களை பத்தி தெரிஞ்சுக்க ஆசையா?— சரி, அவங்களை பத்தி படிக்கலாம், அவங்களை மாதிரியே வாழலாம்.

^ பாரா. 3 எல்லாக் கதையிலும், கேள்விக்குப் பக்கத்தில் இந்தக் கோடு () இருக்கும். அங்கே கொஞ்சம் நிறுத்தி, உங்கள் பிள்ளையின் பதிலைக் கேளுங்கள்.