காவற்கோபுரம் (படிப்பு இதழ்) பிப்ரவரி 2015  

2015 ஏப்ரல் 6 முதல் மே 3 வரையுள்ள வாரங்களுக்கான படிப்புக் கட்டுரைகள் இந்த இதழில் இருக்கிறது.

நெஞ்சை தொட்ட ஒரு பரிசு, ஜப்பானுக்கு!

தி பைபிள்-தி காஸ்பல் அக்கார்டிங் டு மேத்யூ என்ற புதிய புத்தகம் ஜப்பானில் வெளியிடப்பட்டது. அந்த புத்தகத்தில் என்ன விசேஷம்? அதை ஏன் தயாரித்து இருக்கிறார்கள்?

இயேசுவைப் போல் மனத்தாழ்மையாக, கனிவாக இருங்கள்

இயேசுவைப் போலவே நடந்துகொள்ள வேண்டுமென்று 1 பேதுரு 2:21 சொல்கிறது. நாம் பாவிகளாக இருப்பதால் நம்மால் எப்படி இயேசுவைப் போலவே மனத்தாழ்மையாக, கனிவாக நடந்துகொள்ள முடியும்?

இயேசுவைப் போல் தைரியமாக, விவேகமாக இருங்கள்

பைபிளை படிக்கும்போது இயேசுவைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்வோம். இயேசுவைப் போலவே தைரியமாக, விவேகமாக இருக்க என்ன செய்ய வேண்டுமென்று இந்தக் கட்டுரையில் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

ஊழியத்தில் ஆர்வம் குறையாமல் இருக்க என்ன செய்யலாம்?

பிரசங்க வேலையை போல் ஒரு முக்கியமான வேலை இந்த உலகத்தில் வேறு எதுவுமே இல்லை! ஊழியத்தில் ஆர்வம் குறையாமல் இருக்கவும் அந்த ஆர்வத்தை இன்னும் அதிகரிக்கவும் என்ன செய்யலாம்?

‘யெகோவாவைப் பற்றிய போதனையைக் கேட்க’ தேசங்கள் தயார்படுத்தப்பட்டன

முதல் நூற்றாண்டில் கிறிஸ்தவர்கள் எந்தளவுக்கு நற்செய்தியை பிரசங்கித்தார்கள்? நற்செய்தியை பிரசங்கிப்பதற்கு முதல் நூற்றாண்டை போன்ற ஒரு காலப் பகுதி சரித்திரத்திலேயே இல்லை என்று ஏன் சொல்லலாம்?

யெகோவா வழிநடத்தும் உலகளாவிய கற்பிக்கும் வேலை

நற்செய்தியை உலகம் முழுவதும் பிரசங்கிக்க யெகோவாவின் சாட்சிகளுக்கு சமீப காலத்தில் நடந்த என்ன மாற்றங்கள் உதவி செய்திருக்கின்றன?

வாசகர் கேட்கும் கேள்விகள்

சில சகோதர சகோதரிகளுக்கு சென்ட் வாசனை ஒத்துக்கொள்ளவில்லை என்றால் நாம் என்ன செய்யலாம்? ஒரு சகோதரி எப்போது முக்காடு போட வேண்டும்?

நம் வரலாற்றுச் சுவடுகள்

“ஒரு பொன்னான காலம்”

இயேசுவின் நினைவு நாள் சமயத்தை, “ஒரு பொன்னான காலம்” என்று சீயோனின் காவற்கோபுரம் சொன்னது, நினைவு நாளை நினைத்துப் பார்க்கும்படி எல்லாரையும் ஊக்கப்படுத்தியது. அந்த காலத்தில், இயேசுவின் நினைவு நாளை எப்படி நினைத்துப் பார்த்தார்கள்?