காவற்கோபுரம் (படிப்பு இதழ்) மார்ச் 2014  

நம்பிக்கையான மனநிலையோடு சுயதியாக மனப்பான்மையைக் காத்துக்கொள்வது எப்படி என இந்த இதழில் தெரிந்துகொள்ளுங்கள். சபையிலிருக்கும் வயதானவர்களையும் வயதான பெற்றோரையும் நாம் எப்படிக் கவனித்துக்கொள்ளலாம்?

சத்தியத்தில் இல்லாத குடும்பத்தாரின் இதயத்தைத் தொடுவது எப்படி?

உறவினர்களிடம் இயேசு நடந்துகொண்ட விதத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? வேறு மதத்தில் நம்பிக்கையுள்ள அல்லது மத நம்பிக்கையே இல்லாத உறவினர்களின் இதயத்தை எப்படித் தொடுவது?

சுயதியாக மனப்பான்மையைக் காத்துக்கொள்வது எப்படி?

சுயதியாக மனப்பான்மையைக் காட்டவிடாமல் தடுக்கும் ஓர் எதிரி நமக்குள் ஒளிந்திருக்கிறது. அந்த எதிரியை அடையாளம் காணவும் அதை எதிர்த்துப் போராடவும் பைபிள் எப்படி நமக்கு உதவுகிறது என்பதை இந்தக் கட்டுரை கலந்தாலோசிக்கும்.

நம்பிக்கையான மனப்பான்மையைக் காத்துக்கொள்ளுங்கள்

ஏன் சிலர் நம்பிக்கையற்ற மனப்பான்மையால் தவிக்கின்றனர்? இந்தக் கட்டுரை நம்பிக்கையான மனநிலையைக் காத்துக்கொள்வதைப் பற்றிச் சொல்கிறது.

குடும்ப வழிபாடு—அதை எப்படி சுவாரஸ்யமாக்கலாம்?

பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் எப்படி குடும்ப வழிபாட்டை நடத்துகிறார்கள் என்பதைப் பார்த்து, அதேபோல் நீங்களும் செய்ய முயலுங்கள்.

வயதானவர்களுக்கு மதிப்புக் கொடுங்கள்

வயதானவர்களை கடவுள் எப்படிக் கருதுகிறார் என்பதை விளக்குகிறது. வயதான பெற்றோரின் விஷயத்தில் பிள்ளைகளுக்கு என்ன பொறுப்பு இருக்கிறது? வயதானவர்களுக்கு சபைகள் எப்படி மதிப்புக் கொடுக்கலாம்?

வயதானோரைக் கவனித்துக்கொள்வது எப்படி?

‘தீங்குநாட்கள்’ வருவதற்குமுன் வயதான பெற்றோரைக் கவனித்துக்கொள்வது பற்றி திட்டமிடவும் முன்கூட்டியே தீர்மானம் எடுக்கவும் பிள்ளைகள் கலந்துபேச வேண்டும். சில சவால்களை அவர்கள் எப்படிச் சமாளிக்கலாம்?

“‘ஆம்’ என்றும் அதே சமயத்தில் ‘இல்லை’ என்றும்” சொல்கிறோமா?

உண்மை கிறிஸ்தவர்கள் சொன்ன வார்த்தையைக் காப்பாற்ற வேண்டும்; நாம் சொல்வது “ ‘ஆம்’ என்றும் அதே சமயத்தில் ‘இல்லை’ என்றும்” ஆகிவிடக் கூடாது. கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாமல் போனால் என்ன செய்வது? அப்போஸ்தலன் பவுலின் முன்மாதிரியிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்.