Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரத்தை மதித்தல்—ஏன் குறைந்து வருகிறது?

அதிகாரத்தை மதித்தல்—ஏன் குறைந்து வருகிறது?

அதிகாரத்தை மதித்தல்—ஏன் குறைந்து வருகிறது?

“மதம், சமூகம், அரசியல் என எதையும் விட்டுவைக்காமல் அதிகாரங்கள் அனைத்தையும் எதிர்த்து நிற்கும் போக்கே கடந்த பத்தாண்டின் முக்கிய சம்பவம் என்று ஒருநாள் உலகம் பேசும்.”

சரித்திராசிரியரும் தத்துவஞானியுமான ஹான்னா ஆரென்ட் எந்த பத்தாண்டை குறிப்பிட்டார்? 1960-க்கும் 1970-க்கும் இடைப்பட்ட ஆண்டுகளையே. அவர் இப்படி சொல்லி பல பத்தாண்டுகள் பறந்தோடிவிட்டன. இன்று, அதிகாரத்தை அவமதிக்கும் போக்கு அதீதமாயிருக்கிறதே தவிர குறைந்தபாடில்லை.

உதாரணமாக, லண்டனிலிருந்து வெளிவரும் த டைம்ஸ் பத்திரிகையின் சமீபத்திய அறிக்கையை கவனியுங்கள்: “பிள்ளைகள் மீது ஆசிரியர் அதிகாரம் செலுத்துவதை பெற்றோர்களில் சிலர் வரவேற்பதில்லை. பிள்ளையை கண்டிக்கும்போது அவர்கள் கொதித்தெழுகிறார்கள்.” ஆசிரியர்கள் பிள்ளைகளைக் கண்டிக்கும்போது, பெற்றோர்கள் வரிந்துகட்டிக்கொண்டு வந்துவிடுகிறார்கள், ஏதோ சும்மா மிரட்டிவிட்டுப் போவதற்கு அல்ல, அவர்களிடம் மோதுவதற்கு.

பிரிட்டனிலுள்ள தலைமை ஆசிரியர்களுடைய தேசிய கழகத்தின் பிரதிநிதி ஒருவர் இவ்வாறு சொன்னார்: “‘எனக்கு பொறுப்பு இருக்கிறது’ என்றல்ல, ‘எனக்கு உரிமை இருக்கிறது’ என்றே பொதுமக்கள் குரலெழுப்புகிறார்கள். அதிகாரத்தை மதித்து நடக்கும் நல்ல பண்பை பிள்ளைகளுடைய மனதில் பெற்றோர்கள் பதிய வைக்கத் தவறிவிட்டார்கள்; பிள்ளைகளை தாங்களும் திருத்துவது கிடையாது, மற்றவர்களையும் திருத்த அனுமதிப்பது கிடையாது. தங்களுடைய “உரிமைகள்” என உரிமைக் குரலெழுப்பும் பிள்ளைகள், பெற்றோர்களுடைய அதிகாரத்தையும் ஆசிரியர்களுடைய அதிகாரத்தையும் அவமதிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். இதன் விளைவு? “அதிகாரத்தை அவமதிக்கிற, நல்லது கெட்டதை அறியாத ஒரு புதிய தலைமுறை” என எழுதுகிறார் பத்திரிகை எழுத்தாளர் மார்கரெட் டிரிஸ்கோல்.

“சீரழிந்த சந்ததி” என்ற தலைப்பில் டைம் பத்திரிகை ஒரு கட்டுரையை பிரசுரித்தது; பிரபல ராப் இசைக் கலைஞர் சொன்னதை மேற்கோள் காண்பித்து, அநேக ரஷ்ய இளைஞர்களின் நம்பிக்கையற்ற மனநிலையை அந்தப் பத்திரிகை சுட்டிக்காட்டியது: “எதுவும் நிரந்தரமற்ற, எதிலும் நேர்மையற்ற இந்த உலகில் பிறந்து வளர்ந்துவிட்டு எப்படி இதே உலகில் நம்பிக்கை வைக்க முடியும்?” இந்த மனோபாவத்தை ஆமோதிப்பவராய் மைக்கேல் டாப்லாவ் என்ற சமூகவியலர் கூறினதாவது: “இந்தப் பிள்ளைகளெல்லாம் முட்டாள்கள் அல்ல. பெற்றோர்கள் அரசாங்கத்தால் ஏமாற்றப்பட்டதை இவர்கள் பார்த்திருக்கிறார்கள். பெற்றோர்கள் தங்களுடைய சேமிப்பையும் வேலையையும் இழந்து தவிப்பதைப் பார்த்திருக்கிறார்கள். அப்படியிருக்கையில், அதிகாரத்தை மதிக்கும்படி அவர்களிடம் எப்படி எதிர்பார்க்க முடியும்?”

என்றாலும், இளைய தலைமுறைக்குத்தான் அதிகாரத்தின்மீது அவநம்பிக்கை இருக்கிறது என சொல்லிவிட முடியாது. இன்று, வயது வித்தியாசமின்றி எல்லாருக்குமே அதிகாரத்தின்மீது அவநம்பிக்கைதான் உள்ளது, அதிகாரத்தை அவமதிக்கவும் செய்கிறார்கள். அதற்காக, எந்தவொரு அதிகாரத்தையும் நம்ப முடியாது என்பதை இது அர்த்தப்படுத்துகிறதா? அதிகாரம் என்பது, “மற்றவர்களுடைய செயல்களை கட்டுப்படுத்தும், நியாயந்தீர்க்கும், தடை செய்யும் சக்தி அல்லது உரிமை.” ஆகவே, நியாயமாக அதிகாரம் செலுத்தினால், அது நன்மை செய்யும் சக்தியாக விளங்கும். அது தனிமனிதருக்கும் சமுதாயத்திற்கும் நன்மை பயக்கும். எப்படி? இதைத்தான் எமது அடுத்த கட்டுரை ஆராய்கிறது.