Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யாருடைய கைவண்ணம்?

தேன்கூடு

தேன்கூடு

தேனீக்களோட அறிவியல் பெயர் ஆபிஸ் மெல்லிஃபெரா. அதோட அடிவயிற்றுல சுரப்பிகள் இருக்கு. அந்த சுரப்பிகள்ல இருந்து சுரக்கிற மெழுகை வெச்சு தேனீக்கள் தேன்கூட்டை கட்டுது. இந்த தேன்கூடு ‘ஒரு அறிவியல் அதிசயம்’னு சொல்லலாம். ஏன்?

யோசிச்சு பாருங்க: மத்த வடிவங்களைவிட, அதாவது சமபக்க முக்கோண வடிவத்தையோ சதுர வடிவத்தையோ வேறெந்த வடிவத்தையோ விட அறுங்கோண வடிவம்தான் (hexagon) சிறந்த வடிவம்னு நூற்றுக்கணக்கான வருஷமா கணித மேதைகள் நினைச்சிருந்தாங்க. இந்த வடிவத்தில அறைகளை கட்டுறப்போ கொஞ்சப் பொருள்களை வெச்சே நிறைய அறைகளை கட்ட முடியும்னு நம்புனாங்க. ஆனா இதை பத்தி அவங்களால முழுசா விளக்க முடியல. 1999-ல, கணித பேராசிரியர் தாமஸ் சி. ஹேல்ஸ் இதை நிரூபிச்சு காட்டுனார். தேன்கூட்டோட அறுங்கோண வடிவம்தான் சிறந்த வடிவம்... இந்த வடிவத்துல ஒரு இடத்தை சம அளவுல பிரிக்க முடியும்... குறைவான பொருள்களை வெச்சு அறைகளை கட்ட முடியும்னு ஆராய்ச்சி மூலமா நிரூபிச்சிருக்கார்.

தேனீக்கள் அறுங்கோண வடிவத்தில அறைகள் கட்டுறதனால, இருக்கிற இடத்தை முழுசா பயன்படுத்திக்க முடியுது. குறைஞ்ச எடையில உறுதியான அறைகளை கட்ட முடியுது, குறைஞ்ச மெழுகை வெச்சே நிறைய அறைகளை கட்ட முடியுது, அதுல அதிகமான தேனையும் சேர்த்து வைக்க முடியுது. தேனீக்கள் கட்டுற கட்டிடம்தான் “அற்புதமான வேலைப்பாடுமிக்க கட்டிடம்”னு சொல்லலாம்.

இன்னைக்கு விஞ்ஞானிகள் தேனீக்களோட கூட்டை காப்பியடிச்சு உறுதியான கட்டிடங்கள் கட்டுறதுக்கு... கொஞ்ச இடத்துல நிறைய அறைகள் கட்டுறதுக்கு முயற்சி செஞ்சிருக்காங்க. உதாரணமா, தேன்கூட்டோட டிஸைனை பயன்படுத்தி, குறைஞ்ச எடையில உறுதியான ‘பேனல்களை’ (panels) வடிவமைக்கிறாங்க. அதை விமானங்களை தயாரிக்கிறதுக்கு பயன்படுத்துறாங்க, இதனால நிறைய எரிபொருள் செலவுகள் மிச்சமாகுது.

நீங்க என்ன நினைக்கிறீங்க? இந்த தேன்கூட்டோட டிஸைன் தானா வந்திருக்குமா? இல்ல வேற யாராவது டிஸைன் பண்ணாங்களா? ▪ (g15-E 01)