Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வழி 6 மன்னித்து மறத்தல்

வழி 6 மன்னித்து மறத்தல்

வழி 6 மன்னித்து மறத்தல்

“ஒருவரையொருவர் பொறுத்துக்கொள்ளுங்கள், தாராளமாக மன்னியுங்கள்.”—கொலோசெயர் 3:13.

இதன் அர்த்தம். இனிய இல்லற வாழ்வில், தம்பதியர் தங்கள் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்கிறார்கள். ஆனால், அந்தத் தவறுகளை அப்படியே நினைவில் வைத்து, “நீ(ங்கள்) எப்போதுமே லேட்டுதான்” என்றோ, “நீ(ங்கள்) காதுகொடுத்துக் கேட்பதே கிடையாது” என்றோ குத்திக்காட்ட மாட்டார்கள். “குற்றத்தை மன்னிப்பது . . . மகிமை” என்பதை கணவன், மனைவி இருவருமே நம்புவார்கள்.—நீதிமொழிகள் 19:11.

இதன் முக்கியத்துவம். கடவுள் எப்போதுமே ‘மன்னிக்கிறவராக’ இருக்கிறார், ஆனால் மனிதர்கள் அவரைப்போல் எப்போதும் மன்னிப்பதில்லை. (சங்கீதம் 86:5) ஒருவர் செய்த தவறுகளை அவரோடு பேசித் தீர்க்காவிட்டால், மனக்கசப்பு வளரும்; கடைசியில், மன்னிக்கவே முடியாததுபோல் தோன்றும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் கணவன், மனைவி ஆகிய இருவருமே பேசா மடந்தைகளாகிவிடுகிறார்கள்; துணையின் உணர்ச்சிகளைத் துளியும் பொருட்படுத்தாத கல்நெஞ்சக்காரர் ஆகிவிடுகிறார்கள். பாசமோ பிணைப்போ இல்லாத ஒரு பந்தத்திற்குள் சிக்கிவிட்டதாக இருவரும் நினைக்கிறார்கள்.

இதைச் செய்து பாருங்கள். திருமணமான புதிதில் அல்லது காதலித்த சமயத்தில் நீங்களும் உங்கள் துணையும் சேர்ந்து எடுத்துக்கொண்ட ஃபோட்டோக்களைப் பாருங்கள். பிரச்சினைகளால் வெறுப்பு தலைதூக்கியதற்குமுன் உங்களுக்கு இருந்த அளவுகடந்த அன்பை நினைத்துப் பார்த்து, மீண்டும் அதே அன்பைக் காட்ட முயலுங்கள். முதன்முதலில் உங்கள் துணையிடம் உங்களைக் காந்தம்போல் கவர்ந்த பண்புகள் என்னென்னவென்றும் யோசித்துப் பாருங்கள்.

◼ இப்போது உங்கள் துணையிடம் உள்ள என்ன குணங்களை மிகவும் ரசிக்கிறீர்கள்?

◼ மன்னிக்கும் குணத்தை நீங்கள் மேலும் வளர்த்துக்கொள்வது, உங்கள் பிள்ளைகளுக்கு எப்படியெல்லாம் பயனளிக்குமென சிந்தித்துப் பாருங்கள்.

தீர்மானம் எடுங்கள். பழையதையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டு அவற்றைப் புதிய பிரச்சினைகளோடு முடிச்சுப் போடாதிருக்க நீங்கள் எப்படித் தீர்மானமாய் இருக்கலாம் என்பதற்கு ஓரிரண்டு வழிகளைச் சிந்தித்துப் பாருங்கள்.

உங்கள் துணையிடம் நீங்கள் மெச்சும் குணங்களுக்காக ஏன் அவரைப் பாராட்டக் கூடாது?—நீதிமொழிகள் 31:28, 29.

உங்கள் பிள்ளைகளை எப்படி மன்னிக்கலாம் என்பதற்குச் சில வழிகளை யோசித்துப் பாருங்கள்.

மன்னித்து மறப்பதைப் பற்றியும் அதனால் குடும்பத்திலுள்ள ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் நன்மைகளைப் பற்றியும் உங்கள் பிள்ளைகளோடு ஏன் பேசக் கூடாது? (g09 10)

[பக்கம் 8-ன் படம்]

மன்னிப்பது கடன் ரசீதைக் கிழித்துப்போடுவதைப் போன்றது. மறுபடியும் அந்தக் கடனைக் கேட்க மாட்டீர்கள்