Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

‘அந்த நல்ல தேசத்தைப் பாருங்கள்’

‘அந்த நல்ல தேசத்தைப் பாருங்கள்’

‘அந்த நல்ல தேசத்தைப் பாருங்கள்’

‘அந்த நல்ல தேசத்தைப் பாருங்கள்’ என்ற பைபிள் வரைபடங்கள் அடங்கிய சிற்றேடு ஒன்று சமீபத்தில் வெளியானது. ஒரு பெண் அதை புரட்டிப் பார்த்த பிறகு பின்வருமாறு எழுதியுள்ளார்: “இப்படிப்பட்ட அருமையான கருவிதான் எனக்கு ரொம்ப தேவையாக இருந்தது. பைபிளில் வரும் இடங்கள், ஆட்கள், சூழ்நிலைகள் எல்லாமே இப்போது எனக்கு தத்ரூபமாக ஆகியிருக்கின்றன.”

முழுக்க முழுக்க வண்ணப் படங்கள் நிறைந்த இந்த 36 பக்க சிற்றேடு, கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளில் உள்ளவற்றை கற்பனை செய்து பார்ப்பதற்கு பைபிள் மாணாக்கர்களுக்கு உதவுகிறது. “ஆலயம் அதன் சுற்றுப்புறத்தைவிட எந்தளவு உயரத்தில் இருந்தது என்பதைக் காண்பது யெகோவாவின் ‘உயர்த்தப்பட்ட’ வணக்கத்தைப் பற்றி பைபிள் சொல்வதைப் புரிந்துகொள்ள மிகவும் உதவுகிறது. அதோடு, அடைக்கலப் பட்டணங்கள் இருந்த இடங்களையும் எபிரெய, கிரேக்க வேதாகமங்களில் குறிப்பிடப்பட்டுள்ள வேறு பல இடங்களையும் தெளிவாக காண்பதற்கு இது பெரும் உதவியாக இருக்கிறது. பைபிளில் அப்போஸ்தலர் புத்தகத்தைப் படிப்பதற்கு இந்த அழகிய சிற்றேட்டை ஏற்கெனவே உபயோகிக்க ஆரம்பித்துவிட்டேன்” எனவும் அவர் எழுதியுள்ளார்.

“கடவுளுடைய வார்த்தையைப் படிக்கையில் இந்த அருமையான பரிசை நான் எப்போதும் உபயோகிப்பேன்” என்று அந்தக் கடிதத்தை அவர் முடித்துள்ளார்.

‘அந்த நல்ல தேசத்தைப் பாருங்கள்’ என்ற சிற்றேட்டைப் பற்றி கூடுதல் தகவல் பெற விரும்பினால், கீழே கொடுக்கப்பட்டுள்ள கூப்பனை பூர்த்தி செய்து இப்பத்திரிகையில் 5-⁠ம் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள பொருத்தமான விலாசத்திற்கு அனுப்புங்கள். (g04 5/8)

எந்த நிபந்தனையுமின்றி, ‘அந்த நல்ல தேசத்தைப் பாருங்கள்’ என்ற சிற்றேட்டைப் பற்றி கூடுதலான தகவல் பெற விரும்புகிறேன்.

இலவசமாக பைபிளை கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன்.

[பக்கம் 32-ன் படத்திற்கான நன்றி]

Pictorial Archive (Near Eastern History) Est.