Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எமது வாசகரிடமிருந்து

எமது வாசகரிடமிருந்து

எமது வாசகரிடமிருந்து

போஸ்ட்பார்ட்டம் டிப்ரஷன் “போஸ்ட்பார்ட்டம் டிப்ரஷனை சமாளித்தேன்” (செப்டம்பர் 8, 2002) என்ற கட்டுரைக்கு என் மனமார்ந்த நன்றி. ஒரு வருடம் மூன்று மாதங்களுக்கு முன்னர் எனக்கு பிரசவமானது. திடீரென்று எனக்குள்ளே ஏதோ ஒரு மாற்றம் ஏற்பட்டது. என்ன நடக்கிறதென்று தெளிவாக சொல்லத் தெரியாததால் சில சமயம் என் பிரியமானவர்களின் மனதை புண்படுத்தியிருக்கிறேன். இப்போது நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக தேறி வருகிறது. இந்தக் கட்டுரை எனக்கு உதவியது.

ஏ. பி., ருமேனியா (g03 3/08)

என்னுடன் பைபிள் படிக்கும் ஒரு பெண், இந்தக் கட்டுரையைப் படித்த பிறகு தனக்கும் இதே வியாதி இருப்பதாக மனம்விட்டு என்னிடம் சொன்னாள். இப்போது ஒவ்வொரு வாரமும் அவள் ஆஸ்பத்திரிக்கு போகிறாள்; மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொள்வதால் இப்போதெல்லாம் தன் பொறுப்புகளை சிரித்த முகத்துடன் அவளால் செய்ய முடிகிறது.

ஆ. எம்., ஜப்பான் (g03 3/08)

என் ஜெபங்களுக்கான பதில்தான் இந்தக் கட்டுரை என்பேன். அன்பு சகோதரர்களாகிய நீங்கள் உங்கள் சகோதரிகளுக்கு என்னென்ன தேவை என்பதை இத்தனை துல்லியமாக தெரிந்து வைத்திருக்கிறீர்கள். இந்தக் கட்டுரையை படித்ததுமே யெகோவாவும் அவர் அமைப்பும் அப்படியே என்னை அன்புடன் அரவணைப்பது போல உணர்ந்தேன்.

கே. டபிள்யூ., ஐக்கிய மாகாணங்கள் (g03 3/08)

போஸ்ட்பார்ட்டம் டிப்ரஷனிலிருந்து நான் மீண்டு வருகிறேன்; இந்தக் கட்டுரை என்னை திடப்படுத்தி, உற்சாகப்படுத்தியது. இந்தப் பிரச்சினையை அனுபவித்த ஒருவரால் மட்டுமே முழுக்க முழுக்க புரிந்து கொள்ளக்கூடிய விவரங்களை இதில் சேர்த்திருந்தீர்கள். இந்த விழித்தெழு! இதழை பத்திரப்படுத்தி வைக்கப்போகிறேன்; எப்போதெல்லாம் எனக்கு உற்சாகம் தேவையோ அப்போதெல்லாம் இதன் பிரயோஜனமான ஆலோசனைகளை எடுத்துப் பார்க்கவும் போகிறேன்.

ஈ. வி. எஃப்., பிரேசில் (g03 3/08)

நான் இதுவரை வாசித்ததிலேயே இந்தக் கட்டுரையைப் போல வேறெந்த கட்டுரையும் என் மனதில் இவ்வளவு ஆழமாக முத்திரை பதித்ததேயில்லை. போஸ்ட்பார்ட்டம் டிப்ரஷனால் என் மணவாழ்க்கையே முறிந்தது. என் மகளுக்கு ஐந்து வயதாகிறது, இப்போது அவளை நான் மிகவும் நேசிக்கிறேன். இந்த டிப்ரஷனிலிருந்து மீள எனக்கு மூன்று வருடம் பிடித்தது.

ஆ. ஓ., பியூர்டோ ரிகோ (g03 3/08)

மூன்று மாதங்களாக நான் போஸ்ட்பார்ட்டம் டிப்ரஷனால் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தேன். சமீபத்தில் வெளியான விழித்தெழு! பத்திரிகையில் இந்த விஷயத்தைப் பற்றி ஒரு கட்டுரை இருக்கிறதென்று கேள்விப்பட்டதுமே குமுறிக் குமுறி அழுததில் என்னால் பேசக்கூட முடியவில்லை. போஸ்ட்பார்ட்டம் டிப்ரஷனைப் பற்றி நான் படித்த கட்டுரைகளிலேயே இதுதான் பெஸ்ட். இவ்வளவு அருமையாக எங்களை பாங்குடன் கவனித்துக்கொள்ளும் யெகோவாவுக்கும் அவர் அமைப்புக்கும் நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்!

ஏ. எல்., கனடா (g03 3/08)

தலைமுடி “உங்கள் தலைமுடியைப் பற்றி கவலையா?” என்ற கட்டுரையை ரசித்தேன். (செப்டம்பர் 8, 2002) 14 வருஷங்களாக நான் ஒரு பியூட்டிஷியனாக இருக்கிறேன். சேதமடைந்துள்ள முடியை நாங்கள் எந்த விதத்தில் சீவி விடுகிறோமோ அதைத்தான் நீங்கள் சரியாக சொல்லியிருந்தீர்கள். உங்கள் கட்டுரைகள் இத்தனை தொழில் நுணுக்கத்துடன் எழுதப்பட்டிருப்பது என் மனதை தொடுகிறது.

கே. கே., ஜப்பான்

(g03 4/08)

விழித்தெழு! பத்திரிகையின் பரம ரசிகன் நான்; இந்தக் கட்டுரைக்காக என் உளமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன். டீனேஜின் ஆரம்பத்திலேயே என் முடி நரைக்க ஆரம்பித்துவிட்டது. டீனேஜ் முடிவதற்குள்ளாக என் தலையிலிருந்த வெள்ளை முடியெல்லாம் தூரத்திலிருந்தே பளிச்சென்று தெரிந்தது. ஒரே தர்மசங்கடமாக இருக்கும். ஆனால் என் வெளித்தோற்றத்தைப் பற்றி ஒரு சரியான மனநிலையை வளர்ப்பதற்கும், அதேசமயத்தில் தெய்வீக குணாம்சத்தை வளர்ப்பதில் அதிக கவனத்தை செலுத்துவதற்கும் இந்தக் கட்டுரை எனக்கு உதவியது.

ஈ. ஜே., நைஜீரியா (g03 4/08)

ஜெபம் “பைபிளின் கருத்து: கடவுள் கேட்கும் ஜெபங்கள்” என்ற கட்டுரைக்கு கோடானுகோடி நன்றி. (அக்டோபர் 8, 2002) நான் நொந்து நூலாகிப் போயிருந்த அன்றுதான் இதைப் படித்தேன். ஏசாயா 41:10 எனக்கு அதிக தெம்பளித்தது. என்னை மட்டுமல்ல மற்றவர்களையும் யெகோவா பலப்படுத்துவது எத்தனை சந்தோஷம்! நம் எல்லா ஜெபங்களையும் அவர் கேட்கிறார், ஏன் நம் யோசனைகளையும்கூட தெரிந்திருக்கிறாரே! மத ரீதியில் பிளவுற்ற குடும்பத்தில் 20 வருடங்களாக வாழ்ந்து வருகிறேன். இது எனக்கு சுலபமாக இல்லை, ஏனென்றால் 30 வருடங்களுக்கு மேலாக நான் ஒரு தீரா வியாதியாலும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன். இந்த அருமையான பத்திரிகைகளுக்கு மிக மிக நன்றி. துயரங்களிலேயே துவண்டுபோய் விடாதபடிக்கு இவை எனக்கு தெம்பளித்து தூண்டியெழுப்புகின்றன.

டி. ஜி. ஜெர்மனி (g03 4/22)