Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எமது வாசகரிடமிருந்து

எமது வாசகரிடமிருந்து

எமது வாசகரிடமிருந்து

கற்பனை கதாபாத்திர விளையாட்டு சமீபத்தில்தான் என்னுடைய புதிய கம்ப்யூட்டர் வந்து சேர்ந்தது. ஒருசில விளையாட்டுகளோடு நிறுத்திவிட வேண்டும் என முதலில் நினைத்தேன். ஆனால் விடாமல் 16 மணிநேரம் விளையாடிய பின்பே நிறுத்தினேன்! இவ்வளவு நேரமாக என்ன செய்து கொண்டிருந்தேன் என்பதை உணர்ந்தபோது நான் எல்லா விளையாட்டுகளையும் என் கம்ப்யூட்டரிலிருந்து அழித்து விட்டேன். இருந்தாலும் நான் முன்பின் யோசிக்காமல் அவசரமாக இப்படிச் செய்துவிட்டேனோ என்பதாக பின்னால் நினைக்க ஆரம்பித்தேன். ஆனால் அதே வாரத்தில்தான் “இளைஞர் கேட்கின்றனர் . . . கற்பனை கதாபாத்திர விளையாட்டு ஆபத்தானதா?” (ஆகஸ்ட் 22, 1999) என்ற உங்களுடைய கட்டுரை வந்தது. அந்த விளையாட்டுகள் எனக்கு கெடுதல் செய்து வந்ததை அப்போதுதான் உணர்ந்தேன். இப்படிப்பட்ட அபாயத்தை எனக்கு உணர்த்தியதற்காக யெகோவாவுக்கு நன்றி கூறுகிறேன்.

எல்.ஹெச்., பிரேஸில்

ஜப்பானில் ஒரு வகை சீட்டாட்டத்தை வெறித்தனமாக விளையாடுகிறார்கள். பெரும்பாலும் எல்லா சீட்டுகளிலும் சாத்தானிய பெயர்களே இடம்பெற்றுள்ளன. உதாரணமாக, “கருப்பு பேயின் திரைச்சீலை.” நான் அந்த கேமில் முழுவதுமாக மூழ்கிவிட்டபோது என் ஆவிக்குரிய தன்மையும் சிதைந்தது. கடைசியில், என்னுடைய அம்மா கார்டுகளை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டார்கள். இருந்தாலும் இப்படிப்பட்ட சீட்டு விளையாட்டில் என் ஆர்வம் குறையவில்லை. உங்கள் கட்டுரையைப் படித்தபின் என்னுடைய ஆசைக்கு முற்றுப்புள்ளி வைத்தேன். இந்தக் கட்டுரை எனக்கு பெரிதும் உதவியது.

கே.என்., ஜப்பான்

இரத்தமில்லா மருந்து 11 வயதுடைய எனக்கு “இரத்தமேற்றுதல் உண்மையிலேயே அவசியமா?” (ஆகஸ்ட் 22, 1999) என்ற இந்தக் கட்டுரை மிகவும் விசேஷித்த ஒன்றாக இருந்தது. என்னுடைய தங்கைக்கு இரண்டு முறை இருதய அறுவை சிகிச்சை நடந்திருந்தன. அவர்களை இரத்தமின்றி அறுவை சிகிச்சை செய்யும்படி என் பெற்றோர் கேட்டனர். அவள் இறந்துபோய்விடுவாளோ என நான் நினைத்தேன். ஆனால் இப்போது மூன்று வருடங்கள் கடந்து விட்டன. அவள் நன்றாகவே இருக்கிறாள்.

கே.எஸ்., ஐக்கிய மாகாணங்கள்

தவறான குதிரை!  “அக்டோபர் சந்தை—‘ஐரோப்பாவின் பழம்பெரும் சர்வதேச குதிரை சந்தை’” (மார்ச் 22, 1999) என்ற கட்டுரையை உண்மையிலேயே அனுபவித்து மகிழ்ந்தேன். ஆனால் ஸ்க்யூபால்ட் குதிரையின் படத்தின்கீழ் பைபால்ட் குதிரை என்று குறிப்பிட்டிருந்ததைக் கண்டு எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

எஸ்.பி., தென் ஆப்பிரிக்கா

எமது வாசகர் குதிரைகளைப்பற்றி நன்றாக தெரிந்திருக்கிறார்! பிரிட்டிஷ் ஸ்க்யூபால்ட் அண்ட் பைபால்ட் அசோஸியேஷன் சொல்கிறபடி, பைபால்ட் குதிரைக்கு கறுப்பு வெள்ளை திட்டுக்கள் மட்டுமே இருக்கும். ஆனால் படத்தில் காட்டியிருப்பது ஸ்க்யூபால்ட் குதிரை. எங்கள் கவனக்குறைவுக்கு வருந்துகிறோம்.ED.

ஜீன்கள் 16 வயதான எனக்கு மூலக்கூறு உயிரியல் பாடம் ரொம்ப பிடிக்கும். “ஜீன்கள் இனியும் புதிரல்ல” (செப்டம்பர் 8, 1999) என்ற தொடர் கட்டுரைகள் எளிதாக புரியும் விஷயத்தையும் சிக்கலானவற்றையும் சரிசமமாக விளக்கியிருந்தது மிக பிரமாதம். டிஎன்ஏ-வைப்பற்றிய நுணுக்கமான விஷயங்களை விளக்கும் ஒரு புத்தகத்தை நான் வாசித்தேன். ஆனால் உங்களுடைய கட்டுரையில் அதே விஷயம் இருப்பினும், எளிதில் புரிந்துகொள்ளும் சாதாரணமாக உபயோகிக்கப்படும் வார்த்தைகள் இருந்ததுதான் ஆச்சரியத்துக்குரிய விஷயம்.

எஸ்.ஆர்., பிரான்ஸ்

உங்கள் கட்டுரைக்கு மிக்க நன்றி. ஏனென்றால் நான் உங்கள் கட்டுரையைப் படித்து உயிரியல் பாடத்தில் அதிக மதிப்பெண் வாங்கினேன். நியூக்ளிக் அமிலங்களைப் பற்றியும் அவை எவ்விதமாக மரபுவழி பண்புகளோடு தொடர்பு கொண்டுள்ளன என்பதைப்பற்றியும் விளக்கியது மிக எளிமையாகவும் முழுமையாகவும் இருந்தது.

டி.ஏ.என்., பிரேஸில்

நான் ஒரு தொடக்கப்பள்ளிஆசிரியர். மனித உடலின் கூட்டமைப்பைப் பற்றி மாணவர்களுக்கு எப்படி புரியும்படி சொல்லிக் கொடுப்பது என எப்போதும் யோசித்ததுண்டு. உங்கள் கட்டுரைகளில் அறிவியல் சம்பந்தமான பல கடினமான வார்த்தைகள் இருந்தாலும்கூட மாணவர்கள் கிரகித்துக்கொள்ளும் அளவுக்கு எளிமையான தகவல்கள் இருந்தன. விழித்தெழு! அவர்களுக்கு புரிய வைத்தது.

கே.எம்., லெசோதோ

விமான பயணத்தில் பயம் உங்கள் கட்டுரைக்கு மிக்க நன்றி! திங்கட்கிழமை அன்று நான் முதன்முதலாக விமானத்தில் பயணம் செய்ய போகிறேன். அதைப்பற்றி நினைத்தாலே எனக்கு பயமாக இருக்கிறது. நான் பயப்படுவதற்கு முக்கிய காரணம் என்னவெனில் இவ்வளவு பெரிய வாகனம் எப்படி புவிஈர்ப்பு விசையை எதிர்த்து செல்கிறது என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. அதனால்தான், “அவை வானில் பவனிவர என்ன தேவை?” (செப்டம்பர் 8, 1999) என்ற கட்டுரையைப் பார்த்தவுடன் எனக்கு ஒரே குஷி. விமானம் சேதமடையாமல் இருக்கிறதா என்பதை நிச்சயப்படுத்திக் கொள்வதற்கு விமான போக்குவரத்துத் துறையில் இருப்பவர்கள் இந்தவளவு பராமரிப்பு வேலைகளைச் செய்கிறார்கள், ஏன், எக்ஸ்ரேகூட எடுக்கிறார்கள் என்பதை அறிவது விமான பிரயாணத்தைப்பற்றிய பயத்தைப் போக்க எனக்கு பெரிதும் உதவியது. பயம் ஒருபுறம் இருந்தாலும் இந்த பத்திரிகையை கையில் எடுத்துக்கொண்டு கண்டிப்பாக அந்த விமானத்தில் பயணம் செய்யத்தான் போகிறேன்!

டி.டி., ஐக்கிய மாகாணங்கள்