Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அன்பு காட்டுங்கள்

அன்பு காட்டுங்கள்

பிரச்சினைக்கு ஆணிவேர்

பாகுபாடு நம்முடைய மனதிலிருந்து அவ்வளவு சுலபமாக மறைந்துவிடாது. நம் உடம்பில் தொற்றியிருக்கும் வைரஸ் கிருமியை விரட்டியடிக்க நேரமும் முயற்சியும் தேவைப்படுவது போல, பாகுபாடு என்ற தொற்றையும் நம் மனதிலிருந்து விரட்டியடிக்க நேரமும் முயற்சியும் தேவை. அதற்கு நாம் என்ன செய்யலாம்?

பைபிள் ஆலோசனை

“அன்பைக் காட்டுங்கள். எல்லாரையும் பரிபூரணமாக இணைப்பது அன்புதான்.”—கொலோசெயர் 3:14.

இதன் அர்த்தம் என்ன? அன்போடு உதவி செய்வது மக்களை ஒன்றுசேர்க்கும். மற்றவர்களிடம் அதிகமாக அன்பு காட்டும்போது, பாகுபாடு நம் மனதிலிருந்து படிப்படியாக மறைந்துவிடும். அன்பு நம் இதயத்தில் குடியேறினால், பகையும் வெறுப்பும் வெளியேறிவிடும்.

நீங்கள் என்ன செய்யலாம்?

ஒரு பிரிவைச் சேர்ந்த ஆட்களிடம் உங்களுக்குத் தப்பான அபிப்பிராயம் இருக்கிறதென்றால், அவர்களிடம் எப்படியெல்லாம் அன்பு காட்டலாம் என்று யோசித்துப்பாருங்கள். அதற்காக, நிறைய செய்ய வேண்டுமென்ற அவசியம் இல்லை. இவற்றில் சில விஷயங்களை முயற்சி செய்து பாருங்கள்:

அன்போடு சின்ன சின்ன விஷயங்களைச் செய்தால் பாகுபாடு உங்களைவிட்டு பறந்துவிடும்

  • அவர்களுக்காக கதவைத் திறந்துவிடுவதன் மூலமும் பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்யும்போது உட்காருவதற்கு உங்கள் இருக்கையைக் கொடுப்பதன் மூலமும் அவர்களுக்கு மதிப்புக்கொடுங்கள்.

  • அவர்களுக்கு உங்களுடைய மொழி சரளமாகப் பேசத் தெரியவில்லை என்றாலும் அவர்களிடம் ஏதாவது பேச முயற்சி செய்யுங்கள்.

  • அவர்கள் செய்கிற சில விஷயங்கள் உங்களுக்குப் புரியவில்லை என்றாலும் பொறுமையாக இருங்கள்.

  • தங்களுடைய பிரச்சினைகளைப் பற்றி உங்களிடம் சொல்லும்போது அனுதாபத்தோடு கேளுங்கள்.