காவற்கோபுரம் (படிப்பு இதழ்) செப்டம்பர் 2019  

அக்டோபர் 28–டிசம்பர் 1, 2019-க்கான படிப்புக் கட்டுரைகள் இந்த இதழில் இருக்கின்றன.

மனத்தாழ்மையுள்ளவர்கள் யெகோவாவுக்குத் தங்கமானவர்கள்!

நாம் வளர்த்துக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான குணங்களில் மனத்தாழ்மையும் ஒன்று. சூழ்நிலைகள் மாறும்போது மனத்தாழ்மையைக் காட்டுவது ஏன் கஷ்டமாக இருக்கலாம்?

அர்மகெதோன்​—ஓர் ஆசீர்வாதமே!

அர்மகெதோனுக்குக் கொஞ்சம் முன்பு என்னென்ன சம்பவங்கள் நடக்கும்? முடிவு நெருங்கி வந்துகொண்டிருக்கும் இந்தச் சமயத்தில் நாம் எப்படித் தொடர்ந்து உண்மையாக இருக்கலாம்?

யெகோவாவுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்​—ஏன், எப்படி?

மூப்பர்களும் அப்பாக்களும் அம்மாக்களும் யெகோவாவுக்கு கட்டுப்பட்டு நடக்கும் விஷயத்தில், ஆளுநராக இருந்த நெகேமியாவிடமிருந்தும், தாவீது ராஜாவிடமிருந்தும், இயேசுவின் தாய் மரியாளிடமிருந்தும் பாடம் கற்றுக்கொள்ளலாம்.

“என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்குப் புத்துணர்ச்சி கொடுப்பேன்”

இயேசுவின் அழைப்பை ஏற்றுக்கொள்வதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? இயேசுவின் நுகத்தடியின் கீழ் தொடர்ந்து புத்துணர்ச்சி கிடைக்க வேண்டுமென்றால், நாம் மூன்று விஷயங்களைச் செய்ய வேண்டும்.

‘திரள் கூட்டமான மக்கள்!’

யோவானுக்குக் கொடுத்த தரிசனத்தின் மூலம், மிகுந்த உபத்திரவத்திலிருந்து தப்பித்து இந்தப் பூமியில் என்றென்றும் வாழப்போகிற திரள் கூட்டத்தை அடையாளம் கண்டுகொள்ள யெகோவா உதவினார். அந்தக் கூட்டம் எவ்வளவு பெரியது என்பதைப் புரிந்துகொள்ளவும், யாரெல்லாம் அதன் பாகமாக ஆவார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளவும் அவர் உதவினார்.