இயேசுவின் வாழ்க்கை ஒரு வரலாறு!

இயேசு கிறிஸ்து கடவுளுடைய மகன், மனிதர்களின் மீட்பர். அவரைப் பற்றி இந்த அருமையான வீடியோ தொடரில் அதிகமாகத் தெரிந்துகொள்ளுங்கள்.

பாகம் 1: உலகத்தின் உண்மையான ஒளி

ஆதாமினால் வந்த பாவத்திலிருந்து மனிதர்கள் எப்படிக் காப்பாற்றப்படுவார்கள்? அவர்களின் ஒரே நம்பிக்கை மேசியாதான்.

பாகம் 2: “இவர் என் அன்பு மகன்”

யோவான் ஸ்நானகர் இயேசுவுக்கு வழியை தயாராக்குகிறார். இயேசு பூமியில் ஊழியத்தை ஆரம்பித்தபோது நடந்த ஆச்சரியமான சம்பவங்களைப் பாருங்கள்!

பாகம் 3: “நான்தான் அவர்”

தான் மேசியா என்பதை இயேசு நிக்கொதேமுவுக்கும் சமாரிய பெண்ணுக்கும் நாசரேத் ஊர் மக்களுக்கும் தெரியப்படுத்துகிறார். ஆனால், நல்ல மனமுள்ள சிலர்தான் அவரை ஏற்றுக்கொள்கிறார்கள். இயேசு ஒரு பெரிய அற்புதத்தை செய்கிறார். பிறகு, மனத்தாழ்மையுள்ள சில மீனவர்களை தன்னை பின்பற்றி வர சொல்கிறார்.